>சிற்பியின் நரகம்-புதுமைப்பித்தன்

> புதுமைப்பித்தன் சூரியாஸ்தமன சமயம். காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் என்றையும் விட அதிக நெருக்கடி. கறுத்து ஒடுங்கிய மிசிர தேச வாசிகளும். வெளுத்து ஒதுங்கிய கடாரவாசிளும், தசை வலிமையின் இலட்சியம் போன்ற கறுத்த காப்பிரிகளும், வெளுத்த யவனர்களும், தென்னாட்டுத் தமிழும், வடநாட்டுப் பிராகிருதமும் – எல்லாம் ஒன்றிற்கொன்று முரண்பட்டுக் குழம்பின. சுங்க உத்தியோகஸ்தர்கள் அன்னம் போலும், முதலைகள் போலும் மிதக்கும் நாவாய்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பண்டங்களையும், வேலைக்காரர்களையும் பொற் பிரம்பின் சமயோசிதப் பிரயோகத்தால் தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அரசனுக்குக் … Continue reading

>காலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி

> சுந்தர ராமசாமி `நோபல் பரிசு பெற்ற சில கலைஞர்களையாவது பின்தங்கச் செய்யும் கலைஞனாகப் புதுமைப்பித்தனை உங்கள் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இம்முடிவுக்கு நீங்கள் வந்தததற்கான விமர்சனக் கண்ணோட்டத்தை விளக்க முடியுமா?’ என்கிற கேள்விக்கு சுந்தர ராமசாமி காலச்சுவடு; இதழ் 10, ஜனவரி 1995-_ல் எழுதிய பதிலின் சுருக்கம்.   புதுமைப்பித்தன் சிறுகதைகளும் கவிதைகளும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அவரின் நாடகங்கள் பலவீனமானவை. கட்டுரைகள் அவ்வடிவத்திற்குள் இன்று உலகெங்கும் உறுதிப்பட்டு-விட்ட வாதத்தின் நீட்சி முழுமை பெறாமல் சிந்தனை-களின் … Continue reading

>புதுமைப்பித்தன்

> புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருதாச்சலம். 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி, திருப்பாதிர்புலியூரில் அவர் பிறந்தார். தந்தை பெயர் வி. சொக்கலிங்கம் பிள்ளை; அம்மா பெயர் பர்வதத்தம்மாள். புதுமைப்பித்தனின் உடன் பிறந்த-வர்கள் இரண்டுபேர். முதலில் தங்கை ருக்மணி அம்மாள், பிறகு தம்பி சொ. முத்துசாமி. தாசில்தாராகப் பணியாற்றிய வி. சொக்கலிங்கம் பிள்ளை பணிநிமித்தம் பல ஊர்களுக்கு மாற்றலாகிப்-போனபோது, புதுமைப்பித்தனின் தொடக்கக் கல்வியும் அந்தந்த ஊர்களுக்கு மாற்றப்பட்டது. செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிஞ்சி ஆகிய ஊர்களில் … Continue reading

>நினைவுப் பாதையில் பதுங்கியிருக்கும் நகுலன்

> ramana_ps75@yahoo.com தமிழ்ப் புனைவுபரப்பிலும், கவிதை புலத்திலும் நகுலனின் இடம் தனித்தது. தமிழ் நவீன கவிதையின் இரு பாதிக்கத்தக்க குணாம்சங்களாக பிரமிளையும் நகுலனையும் சொல்லலாம். பிரமிளுடையது, மரபின் செழுமையையும் சமத்காரத்தையும் எடுத்துக்கொண்டு படிம மொழியில் பேசுவது. நகுலனின் கவிதையை, மரபை அழைத்தும், மரபிலிருந்து விடுபட்டுக் கொண்டும் எழுதிக் கொண்ட நேர் கவிதை எனலாம். முதல் தலைமுறை நவீன கவிஞர்களை உருவாக்கிய சி.சு. செல்லப்பா அவர்களின் எழுத்துப் பத்திரிகையில்தான் நகுலனின் (டி.கே துரைஸ்வாமி) கவிதைகளும் தொடங்கின. எழுத்தில் எழுதிய … Continue reading

>கோட்ஸ்டாண்ட் கவிதைகள்-நகுலன்

>நகுலன் வழக்கம்போல் வழக்கம் போல் வெளி வாசல் திண்ணையில் சூரல் நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்றான்.    அந்தி மயங்கும் வேளை–_ – அதற்கு முன்: ஒளியும் நிழலும் பக்கத்தில் பக்கத்தில் காணும் போது அவனை ஒரு விசித்திர உணர்ச்சி சூழ்கிறது, வெயிலில் மண்சுவரில் இலை, நிழல்களைக் காணும் பொழுது கலையின் வசீகர_சக்தி அவனை ஆட்கொள் கிறது.       வெயில் மறைகிறது. நிழல் மெல்ல மெல்ல இல்லாமல் ஆகும் நேரம் நெருங்குகிறது. இலைகளும் மரங்களும் மங்கலாக மயங்கிக் கிடக்கும் தோற்றம். … Continue reading

>நகுலன்

> நகுலனின் இயற்பெயர் டி.கே. துரைசாமி, டி.கே. துரைசாமி என்கிற பெயரிலும் எஸ். நாயர் என்கிற பெயரிலும் நகுலன் எழுதியிருக்கிறார். 1922 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நகுலன் பிறந்தார். ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் பெற்று பின்னர் நகுலன் திருவனந்தபுரம் மார் இவானியஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றார். மறைந்த பெண் கவிஞர் திரிசடை, நகுலனின் சகோதரி. நகுலனின் வெளிவந்திருக்கும் படைப்புகள்: நிழல்கள் (1965), நினைவுப் பாதை (1972), நாய்கள் (1974), நவீனன் டயரி … Continue reading

>கு.ப. ரா கலையின் தனித்துவம்-கரிச்சான் குஞ்சு

> கரிச்சான் குஞ்சு (1990_ல் வானதி பதிப்பகம் வெளியிட்ட `கு.ப.ரா.’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கு.ப.ரா. சிறுகதைகள் பற்றிய நீளமான கட்டுரையின் சுருக்கம்) எளிய சொற்கள், அழகிய நுண்ணுணர்வு மிக்க பதச் சேர்க்கைகள், தேர்ந்தெடுத்த சொற்பிணைப்பினால் உருவாக்கப்பட்ட, அர்த்த பேதங்கள் நிறைந்த, புதுமையான படைப்புகள் கு.ப.ரா. சிறுகதைகள். அவற்றை ரசனைத் திறத்தின் அளவு கோல்களாகவே குறிப்பிடலாம். அவரது கதைகளின் எளிமை ஆச்சரியமானது. மூடு மந்திரங்களோ, புரியாத சொற்றொடர்களோ, கஷ்டமான பதச்சேர்க்கைகளோ, சிரமமான வாக்கியங்களோ, நீண்டு புரியாது குழப்பும் சொற்றோடர்களோ … Continue reading

>ஆற்றாமை-கு.ப.ரா

> கு.ப.ரா (1943) ‘உட்காரேண்டி! போகலாம். என்ன அவசரம்’ என்று சாவித்திரி புரண்டு படுத்துக்கொண்டு சொன்னாள். ‘இல்லை. அவர் வருகிற நேரமாகிவிட்டது. போய் காபிக்கு ஜலம் போட்டால் சரியாயிருக்கும்!’ என்று எழுந்து நின்றாள் கமலா. ‘ஆமாம், காபி போடுவதற்கு எத்தனை நாழியாகும்? வந்த பிறகு கூடப் போகலாம். உட்கார். எனக்குப் பொழுதே போகவில்லை.’ அப்பொழுது ‘கமலா’ என்று கூப்பிட்டுக்கொண்டே ராகவன் வந்துவிட்டான். ‘பார்த்தாயா. வந்துவிட்டார்!’ என்று சொல்லிவிட்டு கமலா தன் அறைபக்கம் ஓடினாள். சாவித்திரி படுத்தபடியே தலைநிமிர்ந்து … Continue reading

>கு.ப.ரா

> கு.ப.ரா 1902 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தார். திருச்சி நேஷனல் காலேஜில் `இண்டர் மீடியட்’ படித்துக்கொண்டிருந்தபோது அவரது தந்தை ஏ. பட்டாபிராமய்யர் இறந்துவிட, தாய் ஜானகி அம்மாளுடன் கும்பகோணத்திலிருந்த சொந்தமான மிகப் பழைய வீட்டிற்கு வந்தார். அங்கு, கும்பகோணத்தில் கு.ப. ராஜகோபாலனுக்கு பக்கத்து வீட்டுக்காரர் கவிஞர் ந. பிச்சமூர்த்தி. பிறகு கல்லூரியிலும், வாழ்விலும், ரஸனையிலும், இலக்கியத்திலும் தொடர்ந்து 20 ஆண்டு காலம் _கு.ப.ரா.வின் மரணம் வரை_ `கும்பகோணம் இரட்டையர்கள்’ என்று மற்றவர்கள் கூறும்படி இணைபிரியாதவர்களாய் … Continue reading

>குமாரபுரம் ஸ்டேஷன்- கு. அழகிரிசாமி

>கு. அழகிரிசாமி குமாரபுரம் என்பது ஒரு காட்டு ஸ்டேஷன். அரை மைல் சுற்றளவுக்கு எந்த ஊரும் கிடையாது. ஆனாலும், ஸ்டேஷன் என்று கட்டிவிட்டால் பெயர் வைக்காமல் முடியுமா? இடுகுறிப் பெயரையாவது வைத்துவிடத்தானே வேண்டும்? அந்தக் கணக்கில்தான் குமாரபுரம் என்ற பெயரை வைத்திருக்கிறார்களே ஒழிய, மற்றபடி கிழக்கே ஒரு மைலுக்கு அப்பால் உள்ள குமாரபுரம் என்ற கிராமம் முக்கால் நூற்றாண்டாக ஸ்டேஷனைப் பகிஷ்காரம் செய்துகொண்டுதானிருக்கிறது. தாது வருஷப் பஞ்சத்தின்போது ஜனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்துடன் திருச்சியிலிருந்து திருநெல்வேலி வரையிலும் … Continue reading