>மருமகள் வாக்கு-கிருஷ்ணன் நம்பி

> கிருஷ்ணன் நம்பி (நன்றி : ஸ்நேகா பதிப்பகம் வெளியீடு. ) மறுநாள் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனாரும் பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும் உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள். ஊர் இரண்டு பட்டு நின்றது. சமையல் வேலைக்குச் செல்பவர்களும் கோவில் கைங்கரியக்காரர்களும் நிறைந்த அக்ரகாரத்துப் பிள்ளையார் கோவில் தெரு, கிளியின் கோட்டை என்று சொல்லிக்கொண்டார்கள். அந்தக் கோட்டைக்குள் பல குடும்பங்களுக்கும் பால் வார்த்துக்கொண்டிருந்தவர் வீரபாகுக் கோனார்தான். மீனாட்சி … Continue reading

>கிருஷ்ணன் நம்பி

> தமிழகத்தின் தென்முனையில் கன்னியாக் குமரி மாவட்டத்தின் சிற்றூர்களில் ஒன்றான அழகியபாண்டிபுரத்தில் 1932 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி கிருஷ்ணன் நம்பி பிறந்தார். பெற்றோர்களுக்கு கிருஷ்ணன் நம்பி முதல் குழந்தை. அவருக்கு அவர்கள் இட்ட பெயர் அழகிய நம்பி. கிருஷ்ணன் நம்பியுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ஒரு சகோதரர் ; இரண்டு சகோதரிகள். அழகியபாண்டியபுரத்தில் விவசாயம் செய்துவந்த கிருஷ்ணன் நம்பியின் தந்தை 1939இன் பிற்பகுதியில் நாகர்கோவிலில் உர வியாபாரத்தை ஆரம்பித்தார். நாந்சில் நாட்டில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட … Continue reading

>டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்-ஜி. நாகராஜன்

> ஜி. நாகராஜன் போலீஸ் ரெய்டு ,ருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான் அத்தான். ‘ஓரு மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு ஓடிவிட்ட கமலாவைப் பற்றி ஒரு செய்தியும் ,ல்லை. ஓணத்துக்குப் பிறந்த ஊர் போயிருந்த சரசா ,ன்னும் திரும்பி வரவில்லை. வெளிக் கதவை அடைத்துவிட்டு ரேழியை அடுத்திருந்த அறையில் குழல் விளக்கொளியில் மெத்தைக் கட்டிலின் மீது தனியே உட்கார்ந்திருந்த தேவயானைக்கு அலுப்புத் தட்டிற்று. ஏதோ நினைவு … Continue reading

>குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்-ஆத்மாநாம்

> ஆத்மாநாம் ஹலோ என்ன சௌக்கியமா இப்பொழுது புதிதாக என்ன விளையாட்டுக் கண்டுபிடித்துள்ளாய் உன்னுடைய குஞிச்ட்ணீ எப்படி இருக்கிறது பூச்செடிகளுக்கிடையே புல்தலைகளின் மேல் நெடிய பசும் மரங்களின் கீழ் சுற்றிலும் வண்ணாத்திப்பூச்சி மரச்சுவர்களுக்கிடையே சிவப்பு வீட்டின் உள்ளேயிருந்து ஷிநீணீனீஜீ எட்டிப் பார்க்கிறான் வெளியே பழுப்புநாய் இருந்தான் என்ன விஷயமென்று குஞிச்ட்ணீ வெளியே வந்தான் தெரியாதா நம்முடைய கூட்டம் மரத்தடியில் சீக்கிரம் வந்துவிடு என்றான் பலவர்ண நாய்களுக்கிடையே தாவி நுழைந்தான் கேட்டது ஒரு கேள்வி எங்கள் தலைவனை கௌரவிக்க … Continue reading

>ஜி. நாகராஜன்

> ஜி. நாகராஜன் 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி பெற்றோர்களின் சொந்த ஊரான மதுரையில் அவர்களின் ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். தந்தை பெயர் கணேச அய்யர்; பழனியில் வக்கில் தொழிலை மேற்கொண்டு வந்தார். நாகராஜனின் நான்காவது வயதில் அவரது தாயார். தமது ஒன்பதாவது பிரசவத்தின்போது மரணமடைந்தார். நான்கு குழந்தைகள் பிறப்பின் போதும், பிறந்து சில மாதங்களுக்குள்ளாகவும் இறந்துவிட்ட நிலையில் ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ஜி. நாகராஜனுக்கு இரண்டு சகோதரிகள், ஒரு அண்ணன், … Continue reading

>என் ரோஜாப் பதியன்கள்-ஆத்மாநாம்

> ஆத்மாநாம் என்னுடைய இரண்டு ரோஜாப்பதியன்களை இன்றுமாலை சந்திக்கப் போகிறேன் நான் வருவது அதற்குத் தெரியும் மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள் பரபரத்து என்னை வரவேற்கத் தயாராவது எனக்குப் புரிகிறது நான் மெல்லப் படியேறி வருகிறேன் தோழமையுடன் அவை என்னைப் பார்க்கின்றன புன்னகைத்து அறைக்குள் நுழைகிறேன் செருப்பைக் கழற்றி முகம் கழுவி பூத்துவாலையால் துடைத்துக் கொண்டு கண்ணாடியால் எனைப்பார்த்து வெளி வருகிறேன் ஒரு குவளைத் தண்ணீரைக் கையிலேந்தி என் ரோஜாப் பதியன்களுக்கு ஊற்றுகிறேன் நான் ஊற்றும் நீரைவிட … Continue reading

>முத்தம்-ஆத்மாநாம்

> ஆத்மாநாம் முத்தம் கொடுங்கள் பரபரத்து நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கையில் உங்கள் நண்பி வந்தால் எந்தத் தயக்கமும் இன்றி இறுகக் கட்டித் தழுவி இதமாக தொடர்ந்து நீண்டதாக முத்தம் கொடுங்கள் உங்களைப் பார்த்து மற்றவர்களும் அவரவர் நண்பிகளுக்கு முத்தம் கொடுக்கட்டும் விடுதலையின் சின்னம் முத்தம் முத்தம் கொடுத்ததும் மறந்துவிட்டு சங்கமமாகிவிடுவீர்கள் பஸ் நிலையத்தில் ரயிலடியில் நூலகத்தில் நெரிசற் பூங்காக்களில் விற்பனை அங்காடிகளில் வீடு சிறுத்து நகர் பெருத்த சந்தடி மிகுந்த தெருக்களில் முத்தம் ஒன்றுதான் ஒரே வழி … Continue reading

>ஆத்மாநாம்

> பிரக்ஞை பூர்வமாக எதிர் கவிதை எழுதியவர்களில் ஆத்மாநாம் முதன்மையானவர். அவரின் சமூகக் கவிதைகளிலும் சரி, நம்பிக்கையின்மைக்கு மத்தியிலும் சரி, ஒரு மெல்லிய கீற்றாக நம்பிக்கை துளிர்த்து நிற்கிறது. ஆத்மாநாமின் இயற்பெயர் எஸ்.கே. மதுசூதனன். 1951ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி பிறந்தவர். 1978இல் மனநலத்தாக்குதல் ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஆத்மாநாம் 1983 ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். ஆனால் பின்பு பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த அவர் 6_7_1984_ல் கிணற்றில் … Continue reading