>பசுவய்யா கவிதைகள்-சுந்தர ராமசாமி

> மந்த்ரம் ட்யூப்லைட் சுந்தராச்சி உபயம் குத்துவிளக்கு கோமுட்டிச்செட்டி உபயம் உண்டியல்பெட்டி தெ.கு.வே. உபயம் பஞ்சதிரி விளக்கு ஆண்டி நாடார் உபயம் குண்டுச்சட்டி பால்பாயச உருளி த்ரிவிக்ரமன் நாயர் உபயம் சூடன்தட்டு ரீஜென்று மகாராணி உபயம் தகரடப்பா ஆறு நித்யானந்தா உபயம் அலுமினியப் போணி வமு.சல.பெ.ம. அரிகரபுத்திரன் செட்டியார் உபயம் ஸ்க்ரு ஆணி நட்டு பட்டு அம்மாள் உபயம் தீபத்தட்டு பெரியன் தாத்தாச்சாரி உபயம் சின்னத்தட்டு ஒரு டஜன் வைரங்குளம் மிட்டாதார் உபயம் வைரங்குளம் மிட்டாதார் அவர் … Continue reading

>நகுலன் கவிதைகள்

> நகுலன்   நன்றி: ‘ழ’  இலக்கிய இதழ் நான் எனக்கு யாருமில்லை நான் கூட… இவ்வளவு பெரிய வீட்டில் எனக்கு இடமில்லை இவ்வளவு பெரிய நகரத்தில் அறிந்த முகம் ஏதுமில்லை அறிந்த முகம் கூட மேற் பூச்சுக் கலைய அந்நியமாக உருக்காட்டி மறைகிறது என்னுருவங் கலைய எவ்வளவு காலம் கடந்து செல்ல வேண்டும் என்ற நினைவுவர ”சற்றே நகர்” என்று ஒரு குரல் கூறும்.

>பிரமிள் கவிதைகள்

> பிரமிள் ஒளிக்கு ஒரு இரவு– காக்கை கரைகிறதே பொய்ப்புலம்பல் அது. கடலலைகள் தாவிக் குதித்தல் போலிக் கும்மாளம். இரும்பு மெஷின் ஒலி கபாலம் அதிரும். பஞ்சாலைக் கரித்தூள் மழை நுரையீரல் கமறும். அலமறும் சங்கு இங்கே உயிர்ப்புலம்பல். தொழிலின் வருவாய்தான் கும்மாளம். லாப மீன் திரியும் பட்டணப் பெருங்கடல். தாவிக் குதிக்கும் காரியப் படகுகள். இயற்கைக்கு ஓய்வு ஓயாத மகத் சலித்த அதன் பேரிரவு. நிழல்கள் பூமியின் நிழலே வானத் திருளா? பகலின் நிழல்தான் இரவா? … Continue reading

>சுப்பையா பிள்ளையின் காதல்கள்-புதுமைப்பித்தன்

> புதுமைப்பித்தன் (1943க்கு முன்பு நன்றி: புதுமைப்பித்தன் கதைகள்; காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு, ஆகஸ்ட் 2000.) வீரபாண்டியன்பட்டணத்து ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஜீவனோபயத்திற்காகச் சென்னையை முற்றுகை-யிட்டபொழுது, சென்னைக்கு மின்சார ரெயிலோ அல்லது மீனம்பாக்கம் விமான நிலயமோ ஏற்படவில்லை. மாம்பலம் என்ற `செமன்ட்’ கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான Êஏரியாக இருந்தது. தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம். திருநெல்வேலியிலே, ரெயில்வே ஸ்டேஷன் சோலைக்குள் தோன்றும் ஒற்றைச் சிகப்புக் கட்டிடமாக, `ஜங்க்ஷன்’ என்ற கௌரவம் இல்லாமல், வெறும் … Continue reading

>இரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்….-ஜெயமோகன்

> ஜெயமோகன் தல்ஸ்தோயியின் `புத்துயிர்ப்பு’, தஸ்தயேவ்ஸ்கியின் `குற்றமும் தண்டனையும்’ ஆகிய நாவல்களை ஒரேசமயம் படிப்பவர்கள் அவற்றுக்கு இடையேயான ஒற்றுமையை வியப்புடன் கண்டடையக் கூடும். நெஹ்ல்யுடோவின் `குற்றத்தையும் அதன் தண்டனை’-யையும் குறித்து தல்ஸ்தோய் எழுதுகிறார் என்றால் ரஸ்கால்நிகாபின் `புத்துயிர்ப்பு’ குறித்தே தஸ்தயேவ்ஸ்கி எழுதுகிறார். இருநாவல்களிலும் உள்ள வினா ஒன்றுதான். `குற்றம்’ `பாவம்’ என்பதெல்லாம் ஒப்பீட்டளவில் தீர்மானிக்கப்படுபவை. தண்டனையோ முழுமுற்றானது. அப்படியானால் முழுமுற்றாக `குற்றத்தையும்’, `பாவத்தையும்’ வரையறுத்துவிட முடியாதா? நெஹ்ல்யுடோவ் போன்ற ஒரு பிரபுவிற்கு மஸலோவா போன்ற எளிய கிராமத்துப் … Continue reading

>காலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி

> சுந்தர ராமசாமி (`நோபல் பரிசு பெற்ற சில கலைஞர்களையாவது பின்தங்கச் செய்யும் கலைஞனாகப் புதுமைப்பித்தனை உங்கள் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இம்முடிவுக்கு நீங்கள் வந்தததற்கான விமர்சனக் கண்ணோட்டத்தை விளக்க முடியுமா?’ என்கிற கேள்விக்கு சுந்தர ராமசாமி காலச்சுவடு; இதழ் 10, ஜனவரி 1995-_ல் எழுதிய பதிலின் சுருக்கம்.)   புதுமைப்பித்தன் சிறுகதைகளும் கவிதைகளும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அவரின் நாடகங்கள் பலவீனமானவை. கட்டுரைகள் அவ்வடிவத்திற்குள் இன்று உலகெங்கும் உறுதிப்பட்டு-விட்ட வாதத்தின் நீட்சி முழுமை பெறாமல் சிந்தனை-களின் … Continue reading

>மௌனி

>            

>புதுமைப்பித்தன்

>

>கதை மூலம்-கு.ப.ரா

> கு. ப. ராஜகோபாலன் உ.வே. சாமிநாதையருக்குப் பிறகு கி. வா. ஜகந்நாதன் கலைமகளின் ஆசிரியரானார். மிகப்பின்னாடிதான் என்றாலும், 1980களில் முதன்முறையாக கலைமகளின் அட்டையில் ஓவியர் மாருதியின் படம் வெளியான போது கலைமகள் வாசகர்கள் ஆச்சர்யப்பட்டு வாயடைத்துப் போனார்கள் என்பார்கள். அவர்களால் நம்பவே முடியவில்லை. கி.வா. ஜ காலத்திலேவா இது நடந்துவிட்டது! அந்த அளவுக்கு உ.வே.சா தொடங்கிவைத்த பாரம்பரியத்தை கி.வா.ஜகந்நாதன் காப்பாற்றிக்கொண்டு வந்திருக்கிறார். கி.வா.ஜ காலகட்டத்தில்தான் புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், க.நா. சுப்பிரமண்யம், சி.சு. செல்லப்பா, ந. … Continue reading

>ஜி. நாகராஜனின் படைப்புலகம்-மனுஷ்யபுத்திரன்

> மனுஷ்யபுத்திரன் (1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை) தமிழின் நவீன இலக்கிய வெளியில் மத்தியதர வாழ்வின் ஆசாபாசங்களும் பெருமூச்சுகளும் மதிப்பீடுகளும் நம்மை மிகவும் ஆயாசமடைய வைத்துள்ளன. இந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ் வாழ்க்கையின் பரப்பு சின்னஞ்சிறியது; சில உயர் இடைநிலை சாதிகளின் _ வர்க்கங்களின் அனுபவத்திலிருந்தும், கண்ணோட்டத்திலிருந்தும் உருவாக்கப்பட்டது. மத்தியதர வாழ்வின் அறவியல் அழகியல் பிரச்சனைகள் தமிழ் இலக்கியத்தின் … Continue reading