>வாழ்க்கை-சி.சு.செல்லப்பா

> –சி.சு.செல்லப்பா பகவான் கொடுத்த சொத்து, பூமி என்றெல்லாம் தாம் சொல்லிக் கொள்ளும் அந்தக் களிமண் கட்டிப் பரப்பு அத்தனைக்கும் அந்த வெயிலில் கொத்துக்காரன்தான் ராஜா. ”போயும் போயும் நிலம் வந்து வாங்கினோமே, பாழாய்ப்போன ஊரிலே, குடி தண்ணிக்கு வழி இல்லை. எடுத்துக்கிட்டு வாடா அரிவாளை, பெட்டியிலே இருந்து” என்ற வார்த்தைகளுக்கு முன்பு நடந்த விஷயங்கள் வருமாறு: பட்டுப் பட்டுப் பழகிப்போன மிராசுதார் மாமாவுக்கே தாங்க முடியாத வெப்பம். அறுப்புக் களம், பட்டுப் படைக்கிற வெயில். நிழலின் … Continue reading

>ஏதாவது செய்-ஆத்மாநாம்

> ஆத்மாநாம் ஏதாவது செய் ஏதாவது செய் உன் சகோதரன் பைத்தியமாக்கப்படுகிறான் உன் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள் சக்தியற்று வேடிக்கை பார்க்கிறாய் நீ ஏதாவது செய் ஏதாவது செய் கண்டிக்க வேண்டாமா அடி உதை விரட்டிச் செல் ஊர்வலம் போ பேரணி நடத்து ஏதாவது செய் ஏதாவது செய் கூட்டம் கூட்டலாம் மக்களிடம் விளக்கலாம் அவர்கள் கலையுமுன் வேசியின் மக்களே எனக் கூவலாம் ஏதாவது செய் ஏதாவது செய் சக்தியற்று செய்யத் தவறினால் உன் மனம் உன்னைச் … Continue reading

>மெளனியின் சிறுகதைகள் – மரணமும் மகத்துவமும்-பாவண்ணன்

> பாவண்ணன் தற்செயல் என்கிற விஷயம் மனித வாழ்வில் முக்கியமான ஒரு திருப்பம் ஆகும். அதை ஒரு துாண்டுதல் என்றும் கொள்ளலாம். ஏன் எப்படி எதற்காக என்று பல கேள்விகள் அத்தற்செயலின் விளைவாக உருவாகின்றன. திரண்டெழும் விடைகள் வழியாகப் பல துணைக்கேள்விகள் உருவாகின்றன. ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு கேள்வியை உருவாக்கியபடி நீள்கிறது. மனத்தில் ஒரு முழுக்கேள்விச் சங்கிலியும் அதற்கு இணையான விடைச்சங்கிலியும் பின்னிப் பிணைந்தபடி வளர்ந்தவண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு விடையும் ஒரு புதிய புரிதலைத் தருகிறது. ஒவ்வொரு … Continue reading

>அழியாச் சுடர்கள் ஆல்பம்

> சி.சு.செல்லப்பா க.நா.சுப்ரமணியம் பி.எஸ். இராமையா ‘சிட்டி’ பெ.கோ. சுந்தரராஜன் புதுமைப்பித்தன் பிரமிள் கு. அழகிரிசாமி மௌனி ந. பிச்சமூர்த்தி நகுலன் கு.பா.ரா லா.ச.ரா

>அயோத்தி-நகுலன்

> நகுலன் ஒரு வெள்ளிக்கிழமை சீனுவும் அவன் தாயார் சரஸ்வதி அம்மாளும் வெளித் திண்ணையில் மிகவும் சநதோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மணி 10-30, நல்ல வெய்யில். தெருவில் சனசஞ்சாரமில்லை. ஆகாயம் நல்ல நீலம். ஒரு வெள்ளை மேகம் கூட இல்லை. சீனுவின் தகப்பனார் சங்கரய்யர் கடைத்தெருவுக்குப் போயிருந்தார்.  அதனால்தான்… சீனு தொடர்ந்து சிந்திக்க வில்லை. ஒருவேளை அதிகமாகச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் படிப்பதின் விளைவாக இருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் அது அப்படியில்லை என்பதும் அவனுக்குத் … Continue reading

காசி-பாதசாரி

பாதசாரி 1 போன வருஷம் இதே மாதத்தில் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து -விட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம், சவர பிளேடால் கழுத்தை ஆழ அறுத்துக் கொண்டான்.உறைந்த ரத்தப் படுக்கைமீது நினைவிழந்து கிடந்தவனை கதவை உடைத்துப் புகுந்து எடுத்து ஜி.எச்.சில் அட்மிட் செய்தார்கள். ஊரில் நான்கு பேர் ‘மறைலூஸ்’ என்று கருதும் காசியைப் பற்றி எனக்கு அப்படி நினைக்க முடியவில்லை. எல்லோரையும் போல, தனக்கும் இந்த நாக்கு பேருக்கும் இடையிலான ‘ஷாக்’ அப்ஸார்பரை’ பழுது பார்த்து … Continue reading

மதினிமார்கள் கதை-கோணங்கி

.கோணங்கி  ‘மதினிமார்கள் கதை’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து உடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல்; இவன் கேட்ட அதே குரல்; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சலிப்பில்லாத அதே பேச்சு. ஆவுடத்தங்க மதினியா. சாத்தூர் ரயிலடியில் வெள்ளரிக்காய் விக்கிறவனை சேர்த்துக் கொண்டு ஓடி வந்தவளென்று கேள்விப்பட்டிருந்த நம்மூர் மதினியா இப்படி மாறிப் போனாள். என்ன வந்தது இவளுக்கு. இத்து நரம்பாகிப் போனாளே இப்படி. இவளைக் காணவும்தான் பழசெல்லாம் அலைபாய்ந்து வருகிறது. பிரிந்து போனவர்களெல்லாம் என்ன ஆனார்கள். அவர்களெல்லாம் … Continue reading

புலிக்கலைஞன்-அசோகமித்திரன்

பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ஆரம்பிக்கும் நேரமும் பதினொன்றாக இருந்திருக்கிறது. பதினொரு மணி காரியாலயத்திற்கு வீட்டில் பத்தரை பத்தே முக்காலுக்குச் சாப்பிட உட்கார்ந்து காரியாலயத்திற்குப் பதினொன்றரைக்கு வந்து சேர்ந்து, உடனே ஒரு மணிக்கு டிபன் சாப்பிடப் போவது அசாத்தியமாக இருந்திருக்கிறது. அதனால்தான் காண்டீனில் எப்போதும் இரண்டு மணிக்குத்தான் நிஜமான கூட்டம் இருக்கும். இப்போது காலை பதினொரு மணி என்பதைப் பத்தரையாக்கி, … Continue reading

சாத்தான் திருவசனம் ..-ஆ. மாதவன்

ஆ. மாதவன் தைக்காடு மைதானம் தாண்டி, தாணாமுக்கு அம்மன் கோயில் பக்கம் வந்தபோது, தினசரி பேப்பர் கட்டுகளுடன் சைக்கிளை அள்ளிக் கொண்டு ‘சர்’ வென்று நடந்து வருகிறான் நாணக்குட்டன். நேரம், பலபலவென்று வெளிச்சம் பூசத் தொடங்கியிருந்தது, மணி ஐந்தரை. எனது ‘மார்னிங் வாக்’ முடியப் போகும் நேரம்… ”என்ன நாணு நாயரே, இன்னைக்குக் கொஞ்சம் நேரமாயிப் போச்சே… பதிவா, மாடல் ஸ்கூல் பக்கத்தில யல்லவா நம்ம சந்திக்கிறது… புதிசா பேப்பரிலெ ஏதாவது விசேஷம் உண்டுமானா, என் பேப்பரை … Continue reading

தேவதேவனின் கவிதையுலகம்-ஜெயமோகன்

ஜெயமோகன் தமிழ் கவிதையுலகில் தேவதேவனின் இடம் அனேகமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று . முற்றிலும் ஆரவாரமற்ற , எப்போதும் விசித்திரமான தனிமை சூழ்ந்த , இந்த மனிதர் கடந்த 20 வருடங்களாக எழுதி வருகிறார்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர். சகஜமாக பேசவோ , மற்றவர்களிடம் உரையாடவோ முடியாத ஒரு விசித்திரமான அந்தரங்கத் தன்மை உடையவர் . குறிப்பாகச் சொல்லப்போனால் அவர் தன் கவிதைகளை சம்பந்தப்படுத்தாமல் எதையுமே பேசுவது இல்லை. இலக்கிய விஷயங்கள் மட்டுமல்ல ,சாதரண அன்றாட விஷயங்கள் கூட … Continue reading