மீதமிருக்கும் சொற்கள்!-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ். ராமகிருஷ்ணன்  iகதாவிலாசம் அசோகமித்திரன் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் திருடர்களாக நடித்தவர்களில் எவரையாவது நினைவிருக்கிறதா? ‘கர்ணன்’ படத்தில் யுத்தக் காட்சியில் வரும் தேரோட்டிகளில் எவர் முகமா வது ஞாபகத்தில் இருக்கிறதா? நீங்கள் இதற்கான பதிலை யோசித்துக்கொண்டு இருக்கும் போது, நான் கடந்த காலத்தின் சாலையில் சில மைல் பின்னால் போய்விட்டு வந்துவிடுகிறேன். தேனாம்பேட்டையின் குறுகலான ஒரு பிள்ளையார் கோயில் சந்தில் இருக்கிறது ஒரு மரக் கடை. அந்தக் கடைக்கு யார் உரிமையாளர் என்று நான் பார்த்ததே … Continue reading

திரை – கு.ப.ரா

கு.ப.ரா தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான் ஒரு விதமாகவும் பிசகு செய்ததாக அவனுக்குத் தெரியவில்லை. ஆகையால் அவள் கோபித்துக் கொண்டிருப்பாள் என்பதற்கும் இடமில்லை. அதுவுமின்றித் திருமண மான பிறகு, முதல் முதலாக அப்பொழுதுதான் அவளைப் பார்க்க வந்திருந்தான். அதற்கு முன் நேரில் கண்டு பேசினதே இல்லை. ஆகையால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவள் அதற்குள் கோபித்துக் கொள்ள முடியாது. ஒருவருக்கொருவர் இடைவிடாமல் கடிதங்கள் … Continue reading

கயிற்றரவு – புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் “கள்ளிப்பட்டியானால் என்ன? நாகரிக விலாசமிட்டுத் தொங்கும் கைலாசபுரம் ஆனால் என்ன? கங்கையின் வெள்ளம்போல் காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது… ஓடிக்கொண்டே இருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக்கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே. பிளவு-பின்னம் விழாமல் இழுக்கப்பட்டு வரும் ஒரே கம்பி இழையின் தன்மைதானே பெற்றிருக்கிறது. இல்லை, இல்லை. சிலந்திப்பூச்சி தனது வயிற்றிலிருந்து விடும் இழைபோல நீண்டு கொண்டே வருகிறது. இன்று-நேற்று-நாளை என்பது எல்லாம் … Continue reading

வெறும் செருப்பு – ந. பிச்சமூர்த்தி

  ந. பிச்சமூர்த்தி அதுவரையில் தீர்மானத்துடன் வராதிருந்த மனது அன்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. முதலையின் பிளந்த வாயைப்போன்ற செருப்புடன் எத்தனை மணிகள்தான், எத்தனை நாட்கள்தான் ஓட்டமுடியும்? நடக்கும் போதெல்லாம் செருப்பின் கீழ் அட்டை மடித்துக் கொள்ளும். அப்பொழுது ஒட்டகையின் முதுகின்மேல் நடப்பது போன்ற வேதனையும் கஷ்டத்தையும் அடைந்தேன். நல்லவேளை அன்று மனதே உத்தரவு கொடுத்துவிட்டது. விர்ரென்று கடைத்தெருவுக்குச் சென்று நவீன செருப்புக் கடைக்குள் நுழைந்தேன். கடைக்காரப் பையன் விதவிதமான செருப்பு, பூட்ஸ¤ தினுசுகளை என் முன் … Continue reading

>அபிதா- லா.ச.ரா

> லா.ச. ராமாமிர்தம் "மாமீ! மாமாவை எண்ணெய் தேய்ச்சுக்கச் சொல்லுங்கோ! வந்த அன்னிக்கே நான் சொல்லியி ருக்கணும். ஆனால் அப்போ எண்ணெய்ச் சட்டி காலி. ‘கப்சிப்’புனு இருந்துட்டேன். என்ன சொல்றேள், பழக்கமில்லையா? நன்னாச் சொன்னேள் போங்கோ! இந்தக் கந்தக பூமியிலே எண்ணெய் முறை தப்பிப் போச்சுன்னா, நடந்துண்டு இருக்கறத்துலேயே சொக்கப்பானையா எரிஞ்சி போயிடுவோம். வரட்டியே வேண்டாம். நாமா ஏன் பஸ்மாசூரம் பண்ணிக்கணும்? அவரையே மாமா தலையிலே ஒருகை வெக்கச் சொல்றேன். மிளகாய்ப்பழம், இஞ்சி, புழுங்கலரிசி எல்லாம் போட்டுக் … Continue reading

>ஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்-குவளைக் கண்ணன்

> குவளைக் கண்ணன் ”கவிதை என்று பிரிக்க முடியாது. கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக்கொண்டு விடுகிறது. கவிதையானது என்றைக்குமே தனது இருப்பை மொழியின் மீதோ அல்லது அதனைப் பேசும் மக்கள் மீதோ திணித்ததில்லை. திணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை.’” மேற்கூறிய வாசகங்கள் ஆத்மாநாமுடையவை. பெருநகர்களில் தனிமனித இருப்பு சார்ந்த நெருக்கடியைத் தெரிவிக்கிற, ஒரு செடியின் இருப்பு வழியாக மனித இருப்பின் அடிப்படைச் சிக்கலை விளக்கிக்கொள்ள முயல்கிற, … Continue reading

>அலையும் நுரையும்-எஸ்.ராமகிருஷ்ணன்

> எஸ்.ராமகிருஷ்ணன் — கதாவிலாசம் கி.ராஜநாராயணன் இது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு நகையை அடமானம் வைப்பதற்காக வங்கிக்குச் சென்றிருந்தேன். மனைவியின் கழுத்தில் போட்டுப் பார்த்திருந்த நகையை, ஒரு காகிதத்தில் சுருட்டி சட்டைப் பையில் வைத்தபடி வங்கியின் முன்னால் காத்திருந்தபோது, அது வரை நகைக்கு இருந்த வசீகர மும் அழகும் காணாமல்போய் அது வெறும் ஜடப் பொருளாக இருந்தது.   நகையை வாங்கும்போது மிக அழகான வெல்வெட் பெட்டியில் வைத்துத் தந்தது … Continue reading

>நூறுகள் -கரிச்சான்குஞ்சு

> கரிச்சான்குஞ்சு அந்தத் தெருவுக்குள் புகுந்து, அந்த வீட்டை நெருங்கிப் பந்தலையும் வாழை மரத்தையும், டியூப் லைட்டையும் பார்த்த பிறகுதான் எனக்கு ஞாபகம் வந்தது. ”அடாடா, ராமய்யர் வீட்டுக் கல்யாணம் அல்லவா இன்று. காலையில் முகூர்த்தத் துக்குத்தான் போகவில்லை. சாயங்காலம் போய் கல்யாணமாவது விசாரித்துவிட்டு வந்திருக்கலாம். மறந்தே போய்விட்டது. இன்று காலையிலிருந்து வேறு நினைவே இல்லாமல் பணம் தேடிக் கொண்டிருக்கிறேன். என் இரண்டாவது பெண்ணைக் கோயம் புத்தூருக்கு அனுப்பியாக வேண்டும். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு நாளைக்குக் கடைசி … Continue reading

>நேற்றிருந்த வீடு-எஸ்.ராமகிருஷ்ணன்

> எஸ்.ராமகிருஷ்ணன் – – கதாவிலாசம் கரிச்சான குஞ்சு வங்கியில் பணிபுரியும் என் நண்பர் சரவணன், கிழக்குத் தாம்பரத்தின் உள்ளே ஓர் இடம் வாங்கி, புதிதாக வீடு கட்டியிருந்தார். வழக்கமாக புதிய வீடு கட்டிக் கிரகப்பிரவேசம் செய்பவர்கள் காலையில்தான் விழா நடத்துவார்கள். ஆனால், சரவணன் யாவரையும் மாலையில் தனது வீட்டுக்கு அழைத்திருந்தார். நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு. வீட்டின் வெளியே, சிறிய தோட்டம் அமைப்பதற்காக இடம் விட்டிருந்தார்கள். விருந்தினர்களுக்காக இரவு உணவு, ஒரு பக்கம் தயாராகிக்கொண்டு இருந்தது. … Continue reading

>சாலைத் தெரு-எஸ்.ராமகிருஷ்ணன்

> எஸ்.ராமகிருஷ்ணன் –கதாவிலாசம் ஆ.மாதவன் பகல் கனவுகள் பலிப்பதில்லை என்பார்கள். அது நிஜமா எனத் தெரியாது. ஆனால், பள்ளிக் கனவுகள் எதுவும் பலிப்பதேயில்லை என்பதை நானே கண்டிருக்கிறேன். பள்ளியில் பேசிய ரகசியப் பேச்சுகள் யாவும் கண்  விழித்தபடி கண்ட கனவுகள்தானே! வகுப்பறையில் உடைந்த சாக்பீஸ் துண்டுகளைவிடவும் அதிகமாகக் கனவுகள் சிந்திக்கிடந்திருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் திரைப்பட விழாவுக்குத் திருவனந்தபுரம் செல்லும்போதும், சாலைத் தெருவுக்குச் செல்ல மறப்பதேயில்லை. பத்மநாபசுவாமி கோயில் எதிரில் உள்ள பரபரப்பான வணிக வீதி அது. இந்த … Continue reading