>வினோத ரசமஞ்சரி – விக்ரமாதித்யன் நம்பி

> விக்ரமாதித்யன் நம்பி கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது ***** வினோத ரசமஞ்சரி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை மொழி அதுவும் கவிதைமொழி அமைவது பெரும்பேறு கவிதை மொழியே கவித்துவம் போல யாருக்குக் கொடுக்கலாமென பார்த்துக் கொண்டேயிருக்கிறான் கடவுள் நூலறிவாளர்களை நிச்சயமாய் ஒதுக்கிவிடுகிறான் மரபறியாதவர்களை பெரிதாய் மதிப்பதில்லை ஆங்கிலத்தில் சிந்திப்பவர்களை ஒரு பொருட்டாய் கருதுவதில்லை மொழிப்பற்று நிரம்பிய பித்துக்குளி அகப்பட்டதும் மடியில் கட்டிவிட்டு ஓடிப்போகிறான் சந்தோஷமாய் **** பாவக்கதை உன்னைப் பார்க்க பாவமாகத்தான் இருக்கிறது ஆனால் அதற்கு நான் ஒன்றும் … Continue reading

>’பொய்தேவு’ க.நா.சுப்ரமண்யம்

> க.நா.சுப்ரமண்யம் பள்ளிக்கூடத்துநிழல் ‘பொய்தேவு’ க.நா.சுப்ரமண்யம் 1946ல் எழுதிய ஒரு நாவல். சோமு என்ற மேட்டுத் தெரு பையன் சோமு முதலியார் ஆன கதை. வாழ்க்கை தேடல் குறித்த சுவையான படைப்பு. அதிலிருந்து ஒரு அத்தியாயம் இங்கு தரப்படுகிறது. மேட்டுத் தெருவுக்கு வெகு சமீபத்திலுள்ள பிள்ளையார் தெருவிலோ ஏதோ சொல்பந்தான் என்றாலும் கொஞ்சமாவது ‘உடையவர்கள்’ வீட்டிலே சோமசுந்தரம் பிறந்திருப்பானேயானால், ஐந்து வயசு ஆனவுடனே அவனைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்த்திருப்பார்கள். விஜயதசமி அன்று மேளங்கொட்டி அவனுக்குப் புது … Continue reading

>கோபல்லபுரத்து மக்கள் – கி.ராஜநாராயணன்

> கி. ராஜநாராயணன் கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்கள் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் வரவேற்பையும் சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்ற நாவலிலிருந்து சில பகுதிகள்…   முதல் முதலில் அந்தக் கிராமத்தில் ஒரு அரசியல் பொதுக்கூட்டம் நடந்தது. பெரிய பெரிய காங்கிரஸ் பேச்சாளர்கள் வந்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். கூட்டம் ஆரம்பிக்கும் முன்னால் அவர்களில் சிலர் உணர்ச்சி ததும்பப் பாடல்கள் பாடினார்கள். அதைப்போலப் பாடல்கள் கிராமத்துக்குப் புதுசு. ஆவலோடு அவைகளைக் காது கொடுத்துக் கேட்டார்கள். … Continue reading

>கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது

> கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது வழங்கும் விழா   நாள்: 31 ஜனவரி 2010 நேரம்: மாலை 6 மணி இடம்: இக்ஸா செண்டர், 107 பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 8 (எழும்பூர் மியூசியம் எதிரே) வண்ணநிலவன் சி.மோகன் அ.மார்க்ஸ், எஸ்.ராமகிருஷ்ணன் சமயவேல் சங்கர ராம சுப்ரமணியன் வித்யாசங்கர் விக்கிரமாதித்யன் பற்றி பேசுகிறார்கள். கடைசியில் விக்கிரமாதித்யன் ஏற்புரை நிகழ்த்துகிறார். ‘நாடக வெளி’ ரங்கராஜன் ‘விளக்கு விருது’ அமைப்பினர் சார்பாக இக்கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பு செய்துள்ளார். … Continue reading

>எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது

>   நேற்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.  இந்த வருடன் 130 பேர் பத்ம விருது பெறுகின்றனர். 6 பேர் பத்மவிபூஷன் விருது பெறுகிறார்கள்; 43 பேர் பத்மபூஷன் விருது பெறுகிறார்கள்; 81 பேர் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்கள். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் ஜாம்பவனான எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி (வயது 80) கும்பகோணத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கநாதன் பார்த்தசாரதி. கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழில் பட்டம் … Continue reading

>நெருப்புக் கோழி – ந.பிச்சமூர்த்தி

> ந.பிச்சமூர்த்தி நினைத்தால் வியப்பாய் இருக்கிறது. லயன் கரையின் மேல் நந்தியைப் போல் வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டம் நேரும்பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், அதைப்பற்றிப் பிறகு நினைக்கும் பொழுது ஒரு இனிமை தென்படுகிறது; நம்முடைய முட்டாள்தனத்தையோ துயரத்தையோ எண்ணி வியப்படைகிறேன். வாலிபத்தில் ஒரு ஆற்றங்கரை வழியாகப் போவது வழக்கம். லயன் கரையின் புருவத்தில் கொய்யா மரங்கள் நெடுக இருந்தன. ‘கனி வர்க்கத்தில் கொய்யா அப்படி ஒன்றும் சிறந்ததல்ல’ என்று இப்பொழுதுதானே தெரிகிறது? நாட்டு வைத்தியருடன் கறி, … Continue reading

>ஊமைத் துயரம் – நீல பத்மநாபன்

> நீல பத்மநாபன் ஆபீஸிலிருந்து நடக்க நடக்க வீட்டின் தொலைவு கூடிக் கொண்டே போவதுபோல் நாராயணனுக்குத் தோன்றியது. அன்று காலையில் நடந்த நிகழ்ச்சியின் கனம் ஒரு பெரும் சுமையாய் அவனை அழுத்திக் கொண்டிருந்தது. விடைபெற்றுக் கொண்டிருந்த நித்திரை தேவியை வலுக்கட்டாயமாய் பிடித்திழுத்து வைத்துக் கொண்டு அவன் சரசமாடிக் கொண்டிருந்த காலை நேரம்… அழைப்பு மணி வீறிட்டது. வெளிக்கதவு திறக்கும் சப்தம். ஒரு நிமிட நேர நிசப்தம். பிறகு தன் அருகில் வரும் காலடியோசை கோமதியின் குரல்… யாரோ … Continue reading

கபாடபுரம் – புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் 1. கடல் கொண்ட கோவில் நான் கிழக்குக் கோபுர வாசல் திண்ணையில், ‘முருகா’ என்ற கொட்டாவியுடன் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு சாய்ந்தேன். கிழக்குக் கோபுர வாசல் கதவு எப்பொழுதும் சாத்தித்தான் இருக்கும். ஆனால், அதே மாதிரி எப்பொழுதும் அதன் திட்டிவாசல் திறந்தே இருக்கும். திட்டிவாசல் வழியாக சமுத்திர கோஷமும் சமுத்திர அலைகளும் புலன்களில் உராய்ந்துகொண்டு இருக்கும்.   நான் உள்ளிருப்பதைக் கவனியாமல் அர்ச்சகர்கள் கதவைத் தாளிட்டுப் பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்கள். அன்றிரவு நான் கன்னியின் சகபாடியாக … Continue reading

வாடிவாசல் – சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா வாடிவாசலிருந்து சில பகுதிகள்: கிழக்கு சீமையில் பிரசித்தி பெற்ற மாடு அணைகிறவன் மகன் அந்தப் பையன் -பேச்சுக்கு பையன் என்றாலும் -அந்த வாலிபன் என்ற செய்தி அந்த ஷணமே வாய்க்கு வாய் மாறி வாடிவாசல் முன் சூழ்ந்து நின்ற அதனை நூற்றுக்கணக்கானவர்களுக்கும் பரவி எட்டிவிட்டது. தொழிலில் ஈடுபட்ட அத்தனை பேரும் அவனையே ஆராய்ந்தார்கள் .கண் உறுத்து பார்த்து அவனவன் யூகத்திற்கு அகபட்டபடி பேசிகொண்டார்கள் . ” மாடு பிடிகத்தான் வந்திருப்பான் பய.அதுக்கு சம்சயம் வேறேயா?” ” … Continue reading

மனக்குகை ஓவியங்கள் – புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் கர்த்தராகிய பிதா, பரமண்டலத்தின் சாளரங்களில் ஒன்றைத் திறந்து எட்டிப் பார்த்தார்.கீழே, பல யோஜனைகளுக்கு அப்பால், அவர் கற்பித்த பூமண்டலமும் அதன்மீது ஊர்ந்து திரியும் சகல ஜீவராசிகளும் அவர் தமது சாயையில் சிருஷ்டித்து மகிழ்ச்சியுற்ற ஆதாம் ஏவாளின் வாரிசுகளும் தென்பட்டன. ஒரு தாயின் பெருமிதத்துடன், ஒரு சிருஷ்டிகர்த்தரின் கம்பீர மகிழ்ச்சியுடன் அப் பூமண்டலத்தைக் கவனித்தார். அன்று ஏழாம் நாள். தொழிலை (விளையாட்டை?) முடித்துக் கை கழுவிவிட்டுச் சிரமபரிகாரம் செய்து கொண்டிருந்த பொழுது எந்த நிலையில் இருந்தனவோ அதே … Continue reading