>பூ உதிரும் – ஜெயகாந்தன்

>  ஜெயகாந்தன் பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்– நிச்சயம், அவர் பேசுகின்ற விஷயம் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு உலக மகா யுத்தங்களிலும் நேச தேச ராணுவத்தினர் புரிந்த வீரதீரச் சாகசங்கள் பற்றியதாகத்தான் இருக்கும். அவரது வலது புருவத்துக்கு மேல் இருக்கும் ஒரு நீண்ட தழும்பு; முன் பற்களில் ஒன்றுக்கு தங்கமுலாம் பூசிக்கொண்டது; அதற்குக் காரணமாகயிருந்த ஒரு … Continue reading

வண்ணதாசன் – நேர்காணல்

சந்திப்பு : பவுத்த அய்யனார்  வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என்று கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன். 60-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசனுக்கு பத்து சிறுகதைத் தொகுப்புகள், ஏழு கவிதைத் தொகுப்புகள் மற்றும் தேர்ந்தெடுத்த கவிதைகளின் குறுந்தகடு, கல்யாண்ஜி குரலிலேயே வாசிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. `எல்லோர்க்கும் அன்புடன்’ எனும் பெயரில் இவரது கடிதங்கள் … Continue reading

கவிதையின் புதிய உலகங்கள் – விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன் நம்பி நமது தமிழ்மொழி உலகிலுள்ள செவ்வியல் மொழிகளில் ஒன்று. நீண்ட நெடிய  கவிதை மரபு கொண்டது. அகிலத்தின் சிறந்த கவிதைகளுக்கு ஈடு இணையான கவிதை வளம் நிரம்பியது. காலத்தாலும் அழிக்க முடியாத இலக்கியப் பின்புலம் உடையது. சங்கக்கவிதைகளில் தலைவன் – தலைவியின் நுட்பமான காதல் உணர்வுகளும் அனுபவங்களும் அகப்பாடல்களாய் வடிவு கொண்டிருக்கையில், அன்றைய வாழ்வின் இயல்பான வீரம் செறிந்த வாழ்வனுபவங்களும் எதார்த்தமான உணர்வலைகளும் புறப்பாடல்களாய் உருக்கொண்டிருப்பதுதான் நம்முடைய கவிதையின் ஆதிஉலகம். கதையும் கருத்துமாக விரிவுகொள்கிறது காவியகால … Continue reading

பாக்கி – அசோகமித்ரன்

அசோகமித்ரன் போலீஸ் ஸ்டேஷன் எதிர் சந்தில் நுழைய வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் மறந்து விட்டது. சந்தில் திரும்பி நான்கு அடி வைப்பதற்குள் சுந்தரி. நான் சுந்தரியைப் பார்க்காதது போலத் தாண்டிச் சென்றேன். ஆனால் அவள் உரத்த குரலில், ‘என்னாங்க என்னாஙக ‘ ‘ என்று கூப்பிட்டாள். சந்தில் போய்க் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் என்னை பார்த்தார்கள். நான் நின்றேன். சுந்தரி அருகில் வந்து, ‘ரெண்டு நிமிஷம் வீட்டுப் பக்கம் வந்துட்டுப் போங்க ‘, என்றாள். நான் அவளைப் … Continue reading

தரிசனம் – ந. பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தி தரிசனம்      நேற்றிரவு வெகு நேரம் படித்துக் கொண்டிருந்தேன். புஸ்தகம் முடிந்துவிட்டது. வாணி தரிசனம் முடிந்ததும் பிருகிருதி தேவியைக் காண வெளியே சென்றேன். ஆகாயம் ஓர் எல்லையற்ற மைக் கூண்டு. விளையாட்டுத்தனமாய் ஏதோ தெய்வீகக் குழந்தை அதைக் கவிழ்த்து விட்டது போலும்! ஒரே இருள் வெள்ளம். மரங்களெல்லாம் விண்ணைத் தாங்கும் கறுப்புத் தூண்கள். மின்னும் பொழுதெல்லாம் வானம் மூடிமூடித் திறந்தது. கண் சிமிட்டிற்று. நான் கண்ணாமூச்சி விளையாடினேனோ அல்லது மின்னலா?       திரும்பி வீட்டிற்குள் வந்து … Continue reading

அடங்குதல் – வண்ணதாசன்

வண்ணதாசன் ‘எங்கேயோ கிடக்கிற ஊர்லேருந்து வந்து இங்கே டெண்ட் அடிச்சிருக்கோம். இதுதான் நிரந்தரம்னாகூட சரி. நாம இங்கேயே தானே இருக்கப் போறோம்னா எல்லாத்தையும் இங்கேயே முடிச்சிரலாம். ‘ ‘அது சரி ‘ ‘ஒரு கல்லறைத் திருநாள் அது இதுண்ணு வந்தால் வெள்ளை அடிச்சு ரெண்டு மெழுகுதிரி கொளுத்தி வச்சி ஜபம் பண்ணனும்னு நினைச்சால் கூட வரதுக்கு ஏலாது. அடுத்த வருஷம் எங்கெங்கே தூக்கி அடிப்பானோ. நம்ம அதிர்ஷ்டம் தெரிஞ்சதுதான். இந்த ஊர் வேணும்னா எதிர்த்த ஊர்தான் கிடைக்கும் … Continue reading

கோயிலுக்கு – விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன் இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஓர் ஒழுங்கமைவுக்குள்ளும் ஒழுங்கமைப்புக்குள்ளும் தான் இருந்து கொண்டிருக்கின்றன என்றே எனக்குத் தோன்றிக் கொண்டிருக்கின்றது. இயற்கை, சமூகம், வாழ்க்கை இப்படி எல்லாமே ஓர் ஒழுங்கமைவில் (system) அல்லது ஒழுங்கமைப்பில்தான் இருக்கின்றன. தன்னியல்பில் ஓர் ஒழுங்கு கொண்டிருப்பனவற்றை ஒழுங்கமைவு என்றும் ஏற்படுத்திவைத்திருக்கிற ஓர் ஒழுங்கு கொண்டிருப்பனவற்றை ஒழுங்கமைப்பு என்றும் குறிப்பதாகக் கொள்ளவேண்டும். இரண்டுமே ஒழுங்கின் பிற்பட்டவைதான். அதாவது, சீரானதாகவும் சரியானதாகவும் அமைந்தவை/அமைக்கப்பட்டவை ஆகும். மனிதனும் தவிர்க்கமுடியாதபடிக்கு ஓர் ஒழுங்கமைப்புக்குள்ளேயே இருக்க வேண்டியவனாக இருக்கிறான். இப்படி … Continue reading

எலும்பில்லாத நாக்கு – எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் – கதாவிலாசம் நாஞ்சில் நாடன் மதுரை பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த நாட்களில், ரயில்வே நிலையத்தின் வெளியே உள்ள பிளாட்பாரத்தில் உள்ள இட்லிக் கடைகள் தான் எங்களது பசியாற்றுமிடங்கள். நான்கு நட்சத்திர ஓட்டல், ஐந்து நட்சத்திர ஓட்டல் என்பதெல்லாம் இவற்றின் முன் தூசி. (அங்கே இரவில் மர பெஞ்சில் உட்கார்ந்தபடி, கையில் இட்லித் தட்டை வாங்கிக்கொண்டு அண்ணாந்து பார்த்தால், வானில் நூறு நட்சத்திரங்கள் தெரியும்.) மதுரை, ருசி மிக்க உணவுக்குப் பெயர் பெற்ற ஊர். இரவில் … Continue reading

அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல் – ஜெயமோகன்

ஜெயமோகன் சுருண்டோடும் வாழ்க்கை நதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவது இல்லை. அவை துளிகளில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை.அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார். மேலோட்டமான பார்வையில் காலத்தில் உறைந்து நின்று விட்ட துளியையே நாம் காண்கிறோம். ஆனால் நுட்பமாக பார்க்கும்போது அத்துளியின் தொடர்ந்த மாறுதலை நாம் காண முடியும். தங்கு தடையற்ற மகத்தான பிரவாகம் இப்படி ஓர் துளியின் நிலை மாறுதலாக அசோகமித்திரனில் வெளிப்படுகிறது. அவருடைய அத்தனை சிறுகதைகளுக்குமே … Continue reading

இவளோ ? – லா.ச.ராமாமிருதம்

லா.ச.ராமாமிருதம் மதில்கள் போன்ற பாறைகளின் மேல் மேகங்கள் பொங்கித் தளைத்து நுரை கக்கின. சென்னையில் கானல் கொடுமையை வருடக் கணக்கில் அனுபவித்தவனுக்கு இங்கு கோடை தெரியவில்லை. வேர்வையும் மறந்தது. ஆனால் வெய்யிலை மறக்க நான் இங்கு வரவில்லை. உத்யோகம் புருஷ லட்சணம். ‘ராமாமிருதம், உமக்கு மேற்பதவி வேணுமானால் இனி சென்னையில் இல்லை. நீர்  வெளியூரு போகவேண்டியதுதான். நான் சொல்லவில்லை. இது உங்கள் சங்கத்தின் தீர்ப்பு. இருபத்துமூன்று வருடங்களாய் உயர உயர இதே ஆபீசில் இருந்துவிட்டார்களாம். உங்கள் சங்கத்திற்குக் … Continue reading