>அத்துவான வேளை – தேவதச்சன்

> தேவதச்சன் கவிதைகள் நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன் ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன சட்டையை தொளதொள வென்றோ இறுக்கமாகவோ போடுகிறாய் தலைமுடியை நீளமாகவோ குறுகவோ தரிக்கிறாய் உன்னிடமிருந்து பறந்து சென்ற இருபது வயது என்னும் மயில் உன் மகளின் தோள் மீது தோகை விரித்தாடுவதை தொலைவிலிருந்து பார்க்கிறாய் காலியான கிளைகளில் மெல்ல நிரம்புகின்றன, அஸ்தமனங்கள், சூரியோதயங்கள் மற்றும் அன்பின் பதட்டம் * கைலாசத்தில் புதரோரம் ஒட்டாமல் கிடந்த சிவனின் இடது பாகமும் பார்வதியின் வலதும் … Continue reading

>வலி தரும் பரிகாசம் – எஸ்.ராமகிருஷ்ணன்

> கோபி கிருஷ்ணன் இலக்கியச் சிந்தனை 1986ம் ஆண்டு சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்யும்படியாக கோபி  கிருஷ்ணனைக் கேட்டுக்கொண்டபோது அவர் எனது சிறுகதையான தெருவின் சுபாவத்தைத் தேர்வு செய்திருந்தார். அந்தக் கதையைப் பற்றி தபால் கார்டு ஒன்றில் பாராட்டுக் கடிதம் ஒன்றும் எனக்கு எழுதியிருந்தார். அப்படித்தான் கோபி கிருஷ்ணனுக்கும் எனக்குமான உறவு துவங்கியது. அதன் முன்னதாக கோபியின் கதையொன்றை கணையாழியில் வாசித்திருக்கிறேன். அவரது குறு நாவல் ஒன்றும் என்னுடைய குறுநாவல் ஒன்றோடு தி.ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் … Continue reading

>இவ்வாறாக- விக்ரமாதித்யன்

> இவ்வாறாக அன்றைக்குப் போலவே இன்றைக்கும் ஆதரவாயிருக்கும் அம்மாவை ஐயோ பாவம் தாய்ப்பாசமென்று விட்டுவிடலாம் ஆயிரத்தோரு சண்டைகளுக்கு அப்புறமும் அப்பா காட்டும் அக்கறையை அன்புக்கு நேர்வதெல்லாம் துன்பம்தானென்று விட்டுவிடலாம் மார்பில் முகம்புதைத்து மனைவி கேட்கும் கேள்விகளுக்கு மறுமொழியாக மெளனத்தை விட்டுவிடலாம் காலைக்கட்டி மயக்கும் குழந்தைகளை கடவுளின் அற்புதங்களை நம்பி சும்மா விட்டுவிடலாம் முதுகுக்குப் பின் புறம்பேசித் திரிகிற நண்பர்களின் குணத்தை மன்னித்து மறந்துவிட்டு விடலாம் வேண்டியவர்களின் யோசனைகள் வேண்டாதவர்களின் கேவலப்படுத்தல்கள் இரண்டுமே விதியின் முன்புக்கு வீணென்று விட்டுவிடலாம் … Continue reading

>நிகழாத அற்புதம்- ராஜ மார்த்தாண்டன்

> நிகழாத அற்புதம் சிவராத்திரி நள்ளிரவு ஒளிக்கீற்றொன்று இறங்கிற்று வான்விட்டு திறந்தவெளியில் 16எம்எம்மில் திருவிளையாடல் கண்டு பரவசத்தில் உறைந்திருந்த மக்கள் ஏவுகணையோ ஏதோவென்றஞ்சி அலறி ஓடினர் வெடியோசை கேட்டதும் சிதறிப் பறக்கும் கொக்குகளாக குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறுமாய்ச் சுற்றிலும் நோக்கினார் சிவனார் வண்ணத்திரையில் சிவாஜியின் சிம்மகர்ஜனை நிசப்தத்தை நடுங்கவைத்தது பக்தர்கள் எங்கே? துறுதுறுத்த கையை மார்போடணைத்துக்கொண்டார் குமிண்சிரிப்பு மறைந்து ஏமாற்றத்தில் இருண்டது முகம் மறுகணம் நிசப்தமான வெடிச்சிரிப்பு … Continue reading

>பூமாலை- ஆர். சூடாமணி

> அன்புள்ள ரம்யா, உன் கடிதம் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். சக்கையாய் புலம்பித் தீர்த்திருக்கிறாய். என் வருத்தம் நீ துக்கப்படுகிறாயே என்பதற்காக இல்லை. இப்படி இருக்கிறாயே என்பதற்காக.  கடைசியில் உன் துக்கம்தான் என்ன? சிறு வயதில் உன் சித்தி உன்னைக் கொடுமைப்படுத்தினாள். உன் அப்பா தனியாய் உன்னிடம் வந்து ”எனக்காகப் பொறுத்துக்கோம்மா ரமி! அப்பாவுக்கு உன்கிட்ட கொள்ளைப் பிரியம். ஆனா சித்தியை நான் கண்டிக்க முடியாது. அப்புறம் வீட்ல பிரளயம் தான் வரும். எனக்காகப் பொறுத்துக்கோ” என்று … Continue reading

>எறும்பு தின்னி – ஜெயமோகன் கவிதைகள்

> எறும்பு தின்னி * எறும்பு தின்னியின் நிதானம். திடமான கால்களுடன் மந்தமான கண்களுடன் கனமாக அசைந்து செல்கிறது.   அதன் குளிர்ந்த நாக்கு எறும்புப் புற்றுகளுக்குள்ளே நெளிந்தேறுகிறது. அதன் குளிர்ந்த மூச்சு அங்குள்ள கூடுகளைச் சிதறடிக்கிறது. உள்ளே ஓலங்கள் உயிரின் குருட்டு வெறி தினம் அதுகாண்பது அக்காட்சி. மரணம் ஒரு பெரும் பதற்றம் என அது அறிந்தது. எனவே வாழ்வு ஒரு நிதானமான நடை எனப் புரிந்து கொண்டது. இரு பறவைகள் * வல்லூறு ஆற்றல் மிகுந்த … Continue reading

>புலியின் தனிமை-தேவதேவன்

> 1] விரும்பினேன் என் தந்தையே பேயோ தெய்வமோ எந்த ஓர் அச்சம் ஆட்டிப்படைத்தது உம்மை என் தந்தையே நீ படித்தது போதும் எல்லாரும் மேற்படிப்பு படித்தேகிவிட்டால் இருக்கும் பிற வேலைகள் எல்லாம் யார் செய்வார் என்றறைந்தீர். கடும் உழைப்பை அஞ்சினேனா ? கூட்டாகப் புரியும் பணிகளிலே இருக்க வேண்டிய தாளம் இல்லாமை கண்டு அஞ்சினேனா ? விரும்பினேன் நான் என் தந்தையே விண்ணளவு பூமி விரிந்து நிற்கும் நிலங்களிலே ஆடுகள் மேய்த்து புதர்நிழலில் களைத்து அமர்ந்து … Continue reading

>அந்நியமற்ற நதி-கல்யாண்ஜி

> கல்யாண்ஜி கவிதைகள்   1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்பங்களுடன்  தண்ணீர் என் பார்வையை வாங்கிக் கொண்டது முற்றிலும்; உன்னை எதிர்பார்ப்பதையே மறந்து விட்ட ஒரு கணத்தில் உன்னுடைய கைக்கல் பட்டு உடைந்தது கண்ணாடிக்குளம். நீ வந்திருக்க வேண்டாம் இப்போது. 2.தினசரி வழக்கமாகிவிட்டது தபால்பெட்டியைத் திறந்துபார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைவது. இரண்டு நாட்களாகவே எந்தக் கடிதமும் இல்லாத ஏமாற்றம். இன்று எப்படியோ என்று … Continue reading

>சந்நியாசி கரடு- பெருமாள்முருகன் கவிதைகள்

> குவிந்த கை மூக்கால் ஆனவன் அவன் வாசனை பிடிக்குமானால் முகம் மலர்ந்து உள்ளிழுத்து நுகர்ந்து ஆசையாய் அவனே சாப்பிட்டுக்கொள்வான் பிடிக்காதபோது என் கை தேவைப்படும் என் விரல்கள் அவ்வுணவில் கலந்துவிடும் பிரியத்தால் சுவை மாறிவிடுமா நினைந்தூட்டும் தாய் முலைபோல விரல்கள் குவித்துச்  சோறூட்டி ஊட்டித் திரும்புகிறது கை எதையாவது கதைபோலச் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும் அவன் குரலுக்குக் காதுகளை முழுதாகக் கொடுத்துவிட வேண்டும் வெளியே கரையும் காக்கையின் அழைப்புக்குக்கூடக் கவனம் போகக்கூடாது உதிர்ந்த பிஞ்சாய் வதங்கிப்போகும் அவன் … Continue reading

>கன்னியாகுமரியில்…. – பசுவய்யா

> கன்னியாகுமரியில்…. இன்று அபூர்வமாய் மேகமற்ற வானம் மிகப்பெரிய சூரியன் ஒரே ரத்தக் கலங்கல்  எங்கிருந்தோ வந்து சூரியாஸ்தமனத்தை மறைக்கிறது இந்த ஆட்டுக்குட்டி அசடு அபோதம் தன்னிலை அறியாதது இடம்பெயர்வதா நான் அல்லது நின்ற நிலையில் நிற்பதா? மூளையின் தர்க்கம் அறுபட்டு விழித்ததும் நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி சூரியனைக் காணோம் . ******************** வாழ்க்கை நான் என் காலை வைக்கவேண்டிய படி எது? நான் குலுக்க வேண்டிய கை, நான் அணைக்க வேண்டிய தோள், நான் படிக்க வேண்டிய … Continue reading