>என் நினைவுச்சின்னம் – பசுவய்யா

>

இந்த நிழல்

எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லது அதன் அடியிலிருந்தா? sura---drawings-3-kc82
பூமியில் காலுன்றி நிற்கும் போது
நிழல்மேல்தான் நிற்கிறோமா?
காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான்
அந்த யோசனையை நான் ஏற்கவில்லை
பூமியில் நிற்கும் போது
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்
என்பதுதான் எனக்கு தெரியவேண்டும்.

********************
வருத்தம்

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைகலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில்வித்தை
பின் வாள்வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்
ஆயுளின் கடைசித் தேடல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர் வாழும் கானல்.

********************
தனது மரணத்தை பற்றி குறிப்பிடும் போது ”ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் அதில் இல்லை.” என்கிறார் சு.ரா.

என் நினைவுச்சின்னம்

இரங்கற் கூட்டம்போட ஆட்பிடிக்க அலையாதே
நம் கலாச்சாரத் தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மனச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே
.
.
.
இருப்பினும்
நண்ப,
ஒன்று மட்டும் செய்.
என்னை அறியாத உன் நண்பனிடம்
ஓடோடிச் சென்று
‘கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்
மறைந்து விட்டான்’ என்று மட்டும் சொல்.
உன் கண்ணீர் ஒரே ஒரு சொட்டு
இந்த மண்ணில் உதிரும் என்றால்
போதும் எனக்கு.

********************

உன் கவிதையை நீ எழுது

உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது

எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு.

***

(கொல்லிப்பாவை 1985)

Advertisements
Comments
3 Responses to “>என் நினைவுச்சின்னம் – பசுவய்யா”
  1. >பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.நீங்களே எல்லார் படைப்புக்களையும் தட்டச்சு செய்கிறீர்களா அல்லது காப்பி பேஸ்ட் முறையா.நல்ல நல்ல படைப்புக்களை தட்டச்சு செயும் உங்களின் அந்த கைகளுக்கு வணக்கங்கள், நன்றிகள்

  2. >add the words email this post or email this post to friends. click edit html. chekc mark widget template box. find !– email post links — b:if cond='data:post.emailPostUrl' span class='item-action' a expr:href='data:post.emailPostUrl' expr:title='data:top.emailPostMsg' img alt='' class='icon-action' height='25' src='http://lh5.ggpht.com/_DUAY6wf5JzE/TFpxYVz1aDI/AAAAAAAAAIo/xqElNztgm7A/Forward.png' width='30'/>email this post a spannote: see the words email this post. it is absent in ur template. add it. or add email this to friends. u can also change the image of email forward picture. u can get a new picture for email this icon in iconfinder.com. upload it in picasaweb.google.com. right click. get its url. use it in template if u want some other new email icon.

  3. >hey u have kept this email this post icon at top..u should place it at the end of ur essay…most of the people fail to see it…it must be at the end of ur essay..place it at the end…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: