>வெள்ளி விழா – ந.பிச்சமூர்த்தி

>

வெள்ளி விழா

சுதந்திர தின வெள்ளி விழாவுக்கு
மெரினாவில்
காந்தி சிலைமுதல் na_pitchamurthy
விவேகானந்தர் சிலைவரை
சவுக்கு முளை அடித்து
குறுக்குக் கழிகட்டி
வேடிக்கை பார்க்கவரும் வெள்ளம்
அணிவகுப்பை அழிக்காமல் 
வெற்றிக்கு வித்திட்ட கண்டிராக்டர்
மறுநாள் கணக்குப் பார்த்தார்
நல்ல ஆதாயம்.
மக்கள் கணக்குப் பார்த்தார்.
விழாதான் ஆதாயம்
காலைக் கருக்கிருட்டில்
சுள்ளி பொருக்க வந்த கிழவிக்கு
சவுக்கைப் பட்டைகளை
உரித்தெடுத்துக் கொண்டபோது
ஆளரவம் கேட்டதனால்
ஆதாயம் குறைப் பிரசவம்

கொக்கு

படிகக் குளத்தோரம்
கொக்கு.
செங்கால் நெடுக்கு.
வெண்பட்டுடம்புக்
குறுக்கு
முடியில் நீரை நோக்கும்
மஞ்சள் கட்டாரி மூக்கு.

உண்டுண்டு
அழகுக் கண்காட்சிக்
கட்டாயக் கட்டணம்
சிலவேளை மீனும்
பலவேளை நிழலும்…

வாழ்வும் குளம்
செயலும் கலை
நாமும் கொக்கு.
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலகா?
எதுவாயினென்ன?
தவறாது குளப்பரப்பில்
நம்மழகு _
தெரிவதே போதாதா?

லீலை

மண்ணில் பிறந்தால்
வானேற ஆசை,
காலோடிருந்தால்
பறப்பதற்காசை,
வானாயிருந்தால்,
பூமிக்கு வேட்கை,
கொண்டலாயிருந்தால்
மழையாகும் ஆசை.
மின்னாயிருந்தால்
எருக்குழிக்காசை.
எருக்குழியானால்
மலராகும் பித்து
இரும்பாயிருந்தால்
காந்தத்திற்காசை
துரும்பாயிருந்தால்
நெருப்புக்காசை
தனியாயிருந்தால்
வீட்டுக்கு ஆசை.
வீட்டோடிருந்தால்
கைவல்யத்திற்காசை
நானாயிருந்தால் நீயாகும் ஆசை.
உனக்கோ?
உலகாகும் ஆசை.

விஞ்ஞானி

கடவுளால் என்ன முடியும்?
புல்லைச் செய்வார்.
மேயவென்று மாட்டைச் செய்வார்
பொங்கும் நுரைப்
பாலைச் செய்வார்.
ஊட்டவென்று கன்றைச் செய்வார்.
மண்ணென்ற ஒன்றைத் தருவார்.
வளர்ந்திடும் ஏக்கம் தருவார்.
வானத்தினிடையே வீணில்
ஒளியினைக் கொட்டும் கோள்கள்
மந்தையை ஓட்டிச் செல்வார்.
கோடையெனும் பெரிய அன்பின்
மடைகளைப் பிடுங்கி வைப்பார்…
நாமன்றி கடவுளேது?
நாமவர்க் கிளைப்பதேது?
புல்லுக்குப் போட்டியாக
மண்டும் கிருமி குண்டைச் செய்வோம்
மாட்டுக்குக் கன்றைக் காட்டி
பாலினைச் சுரக்கச் செய்யும்
மடமையை,
கலையின் குறைவை
காட்டுவதற்காக வென்றே
வைக்கோலும் தோலும் ஆன
தந்திரம் ஒன்றைச் செய்வோம்,
பாலை யாம் வரவழைப்போம்;
உழைப்புக்கு ஓய்வை அளிக்கும்
உணவு சத்துக்கள் செய்வோம்.
ஆண் பெண்ணின் கல்வியின்றி
உயிரை உற்பத்தி செய்யும்
உயிரியல் மர்மம் தேடி
உழைக்கின்றோம்.
வெற்றி காண்போம்.
நோக்கின்றி சாட்டையின்றி
தானாக விரையும் கிரகமாம்
சந்திரன், செவ்வாய், சுக்ரன்
மீதினில் குதிரை ஏறி
தளங்களை அமைத்துவிடுவோம்.
அருளெனும் ஜாலவித்தை
செலாவணி ஆகாதய்யா.
மடமையால் உலகைச் செய்தால்,
அறிவினால் களைதல் தவறா?

Advertisements
Comments
One Response to “>வெள்ளி விழா – ந.பிச்சமூர்த்தி”
  1. >சார்..இத்தனை எழுத்துக்களையும் எங்கேயிருந்து சேகரித்தீர்கள்..கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய விஷயமாயிற்றே. இந்த வலைப்பூ ஆரம்பித்த பின்னணியைப் பற்றி உங்களிடத்தில் ஏதேனும் பதிவு உள்ளதா? இல்லையென்றால்-விருப்பமிருந்தால் அதைப்பற்றியே ஒரு பதிவு போடலாமே? மிக்க நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: