விடியுமா? – கு.ப.ரா.

தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது. ‘சிவராமையர் – டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது. என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்து விட்டார். க்ஷயத்தின் சின்னம் கொஞ்சம்கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள். ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப் போய் உட்கார்ந்திருந்தாள். எங்கள் எல்லோருடைய … Continue reading

”இன்றைய கவிதையை விளக்க இன்னொருவர் தேவை”-நீல. பத்மநாபன்

எழுத்தாளர் நீல.பத்மநாபன் 1938-ம் ஆண்டு பிறந்தவர். கேரள மாநில மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவரது படைப்புகளில் மண்ணின் தன்மையும், மக்களின் யதார்த்த வாழ்வையும் காணலாம். ”உதயதாரகை” இவர் எழுதிய முதல் நாவல். ஆனால் இவர் பேசப்பட்டது இவரின் நான்காவது நாவலான ‘தலைமுறைகள்’ மூலம்தான். அடுத்தது ‘தேரோடும் வீதி’. இது அவரின் சுயசரிதை என பலர் சொல்வதுண்டு. ஆனால் அவர் இதனை மறுத்து வருகிறார். அண்மையில் தி.ஜானகிராமனின் இலக்கியப் படைப்புகள் பற்றிய விவாதத்திற்காக சென்னை வந்திருந்தபோது, அம்பலம் … Continue reading

பாற்கடல் – லா.ச. ராமாமிர்தம்

நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே … Continue reading

தமிழ் அறிவுஜீவிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள்-ரமேஷ்-பிரேம்

பின் – நவீனத்துவ தத்துவங்கள், விமர்சனக் கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத் தமிழில் அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, தமிழ் அறிவுலக விமர்சனப் போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றியவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ரமேஷ் – பிரேம். பின் நவீனத்துவ படைப்பிலக்கியவாதிகளாகவும் விமர்சகர்களாகவும் அறியப்படுபவர்கள். இலக்கிய இரட்டையர்களாகவும் அறியப்படும் இவர்கள் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் என்று நிறைய எழுதியுள்ளனர். இதுவரை 15 புத்தகங்களும் 4 மொழி பெயர்ப்பு நூல்களும் வெளியாகியுள்ளன. பாண்டிச்சேரி அரசின். “கம்பன் புகழ் … Continue reading

இ.பா……. எண்பது!-பாரதி மணி

என் ஐம்பதுவருட நண்பர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு எண்பது வயதாகிறது. சென்ற ஜூலை மாதம் 9-ம் தேதி உயிர்மை பதிப்பகமும் மணற்கேணியும் இணைந்து நடத்திய கருத்தரங்கிலும், அடுத்தநாள் TAG Centre-ல் இ.பா. குடும்பத்தினர் சேர்ந்து கொண்டாடிய விழாவிலும், தன் நீண்ட, பயனுள்ள வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், இளமைத்துடிப்புடனும் தன் நியதிப்படி வாழ்ந்த ஒரு நல்ல மனிதரைப்பார்க்க முடிந்தது. இ.பா. நண்பர்களிடம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பழகுவார். அவருக்கு யாரும் விரோதிகளில்லை. ‘இலக்கிய அரசியல்’ இல்லாதவர். எதற்கும் விட்டுக்கொடுக்காதவர். தமிழக … Continue reading

நடுகற்களும் நடைகற்களும்-நாஞ்சில் நாடன் கவிதைகள்

நாஞ்சில் நாடன் கவிதைகள் (தேர்வு ஜெயமோகன்) இந்தியரும் எம்மக்களும் உச்சரிக்கவியலாத ஊர்திகள் இராத்தங்க இருபதினாயிரம் வாடகை வான்வழிப்பயணம் கைக்கடிகாரம் காற்சட்டை மேற்சட்டை காலணிகள் கண்ணாடி எண்பதினாயிரம் அக்குள் நாற்றம் மறைக்க ‘தெளிப்பான் ‘ கணிப்பொறி முன்வலை கம்பியில்லாபேசி பிறந்தநாள் மணநாள் காதலர் தினம் புத்தாண்டு ஆயிரத்தாண்டு விழக்கள் காதல்காட்சிக்கும்கனவுக்காட்சிக்கும் மூன்றேகால் கோடி கிரிக்கெட் போரில் கார்கில் போட்டியில் தேசப்பற்று அவிழ்த்துப்போட்டு ஆடும் இந்தியர் கட்டைவண்டியிலும் கால்நடையாகவும் வரப்போ தலைக்காணி வாய்க்காலே பஞ்சுமெத்தை குடிநீர் சுமந்து குடிசைசேர சூரியன் … Continue reading

>தாலியில் பூச்சூடியவர்கள் – பா. செயப்பிரகாசம்

> முதன் முதலாய் ஒரு பெண், அக்கினிச்சட்டி ஏந்தி ஆடுகிற சம்பவம் அந்த ஊரில் நடந்தது. பள்ளத் தெருவில் நடந்தது. அப்போதுதான் கல்யாணமாகி வந்த ஒரு பெண் அக்கினிச் சட்டி ஏந்துவது அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. மங்கலப் புடவையின் கசங்கல் கூட இன்னும் மறையவில்லை. காற்றுக்கு அசைகிற அலைகளின் நொறுங்கல்போல் இன்னும் கருங்கல்கள் இருந்தன. பள்ளரும் சக்கிலியரும் ஒட்டரும் இருக்கிற பள்ளக்குடியில் அல்லாமல், வேறெங்கும் இது நடக்காது. பொய்லான் வீட்டுக்குப் புதுமருமகள் வந்திருக்கிறாள் என்ற செவிச் சேதி … Continue reading

>தங்க ஒரு…- கிருஷ்ணன் நம்பி

> அன்புள்ள செல்லா, உன் கடிதம் கிடைத்தது. என்ன செய்யச் சொல்லுகிறாய்? முயற்சியில் ஒன்றும் குறையில்லை .  ஒவ்வொரு நாள் மாலையும், மந்தைவெளி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் என்று வேகமாக அலையத்தான் செய்கிறேன். மோட்டார்காரனுக்குக் காசு கொடுத்துக் கட்டி வராது என்று விளக்கெண்ணை வேறு வாங்கி வைத்திருக்கிறேன் காலில் போட்டுத் தேக்க. என் காலைப் பிடித்துவிட நீயும் இங்கு உடனே வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் என்ன செய்யச் சொல்லுகிறாய், செல்லா, முப்பது ரூபாய்க்கு மேல் … Continue reading

>சி.சு.செல்லப்பா: சுமந்து சென்ற எழுத்து- எஸ்.ரா

> சி.சு.செல்லப்பா: சுமந்து சென்ற எழுத்து- எஸ்.ராமகிருஷ்ணன் சி.சு.செல்லப்பாவிற்கு விளக்கு விருது அறிவிக்கபட்டதைத் தொடர்ந்து அவரைச் சந்திப்பதற்காக நானும் வெளிரெங்கராஜனும் திருவல்லிக்கேணியில் இருந்த அவரது வீட்டிற்குச் சென்றிருந்தோம். பிள்ளையார்கோவிலின் அரு காமையில் உள்ள சிறிய ஒற்றையறைக் குடித்தனம். வயதான செல்லப்பாவும் அவரது மனைவியும் மட்டும் தனியே வசித்துக் கொண்டிருந்தார்கள். செல்லப்பாவை மதுரையில் இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன். ஆனால் சென்னைக்கு வந்த பிறகு சந்திக்கவேயில்லை. வீடு தேடிச் சென்றதும் அதே உற்சாகம் குறையாமல் உள்ளே அழைத்து பாயில் … Continue reading

மேபல் – தஞ்சை பிரகாஷ்

மேபலுக்கு ரொம்ப பயம். அப்பான்னாலே பயம். அவளுக்கு அப்பா மட்டும்தான் மிச்சம். அம்மா மோனத்திலிருக்கிறாள். கர்த்தரின் மடியில் அம்மா இருக்கிறதை மேபல் பல தடவையும் கனவில் பார்த்திருக்கிறாள். அம்மா ரொம்ப அழகு. சிவப்பு வெள்ளப் பட்டுடுத்தி சம்மனசு மாதிரி கர்த்தரோட மடியில் உட்கார்ந்திருக்கிறதை யாரும் நம்ப மாட்டார்கள். அப்பா கறுப்பு! முரடு. திமுசு மாதிரி, புளியமரத்து அடி மரம் மாதிரி கண்டு முண்டா இருக்கிற அப்பாவெ மேபல் குட்டிக்கு எப்படிப் பிடிக்குமாம்? கொஞ்சம்கூடச் சிரிக்காத மனுஷன் உண்டா? … Continue reading