அக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன்

மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸுக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற ‘வேனு’ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் … Continue reading

தண்ணீர்-கந்தர்வன்

வெயில் குரூரமாயடித்துவிட்டுத் தணியத் தொடங்கிய வேளை; பாசஞ்ஜர் ரயிலின் கூவல் வெகு தொலைவிலிருந்து அருவலாகக் கேட்டது. வல்லநேந்தல் தாண்டியதும் இன்ஜின் டிரைவர்கள் இப்படித்தான் ஒலி எழுப்புவார்கள். திண்ணைக்கு ஓடிவந்து, தூணைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தாள் இந்திரா. தூரத்தில் ரயில் வருவது மங்கலாகத் தெரிந்தது. உள்ளே அம்மா ‘பொட்டுத் தண்ணியில்லை ‘ என்று ரயில் ஊதல் கேட்டு அனிச்சையாகச் சொ ல்லிக் கொண்டிருந்தது. ஐயா, சினை ஆட்டைப் பார்த்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தார். ஐயாவுக்கு எப்போதும் கணக்குத்தான். ஆடு … Continue reading

போர்த்திக் கொள்ளுதல்-வண்ணதாசன்

கடைசியில் ஒரு மட்டுக்கும் போர்வை வாங்கியாகிவிட்டது. அவன் விரித்துப் படுத்தெழுந்த ஜமுக்காளத்தையோ அல்லது இடுப்பில் இருக்கிற கைலியையோ போர்த்திக் கொண்டு தூங்குவதைக் காலையில் பார்க்கும் போதெல்லாம் ஒரு போர்வை எப்படியாவது இந்த மாதம் வாங்கிவிட வேண்டும் என்று சரசு நினைப்பாள். ராத்திரி படுக்கும்வரை படித்துக் கவிழ்ந்து வைத்த வாரப் பத்திரிகையையும் கண்ணாடியையும் எடுத்து ஜன்னலில் வைத்த கையோடு அவனை எழுப்பி நேரே ஒரு போர்வை வாங்கிக் கொண்டுவரச் சொல்லத் தோன்றும். ஆனால் அவனுக்கு இப்படியெல்லாம் உடனுக்குடன் வாங்குகிற … Continue reading

நவீன எழுத்தாளனின் தலைவிதி-சுந்தர ராமசாமி

கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நான்காவது சிறப்பு மாநாட்டின் தொடக்கவுரை – 28.12.90 கன்னியாகுமரி மாவட்டத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நான்காவது சிறப்பு மாநாட்டை ஒட்டி நடைபெறவிருக்கும் இக் கருத்தரங்கின் தொடக்கவுரையை நிகழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நானும் இதில் பங்கு பெற வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த என் நண்பர் டாக்டர். பத்மனாபன் அவர்கட்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல தலைப்புக்களில் பல்வேறு அறிஞர்கள் இங்கு கட்டுரைகள் படிக்க இருக்கிறார்கள். கல்வி, வரலாறு, … Continue reading

உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை – எஸ் . ராமகிருஷ்ணன்

பிரபவ வருடம் சித்திரை இரண்டாம் நாள் முகாம். திருவாவடுதுறை , தேவரீர் பண்டிதமணி துரைச்சாமி முதலியார் சமூகத்திற்கு, தங்கள் அடிப்பொடியான் வலசைஏகாம்பரநாதன் எழுதும் மடல் திருப்புல்லணி பால்வண்ணசாமி எழுதிய பசுபதி விளக்கம் நுாலில் அடிக்குறிப்பாக இடம்பெற்றிருந்த ஆற்காடு ரத்னசாமி முதலியாரால் எழுதப்பட்டதாக சொல்லபடும் (ஒரு வேளை தழுவி எழுதப்பட்டதாக கூட இருக்கலாம் ) உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை என்ற நுாலை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளவேண்டி நான் கடந்த சில மாதங்களாக திருவாவடுதுறை … Continue reading

காடன்விளி-ஜெயமோகன்

தூரத்துச்சொந்தம் என்பதனால் அவர்கள் நேராக எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டார்கள். அம்மாவும் பெண்ணும் சாயந்தர நேரத்தில் ஆற்றுக்கு அக்கரையில் ஒற்றைக்காளை வண்டியில் வந்து இறங்கினார்கள். கிழக்கு திண்ணையின் விளிம்பில் நின்று தூரத்தில் சரிந்த செம்மண் சாலைமீது மஞ்சள் ஒளியில் அவர்கள் மெல்ல நடந்து வருவதைக் கண்டேன். அம்மா வலது இடுப்பில் கனத்த நார்ப்பெட்டியை வைத்து மறுபக்கமாக சரிந்து கைகளை வீசி நடந்தாள் . பெண் சாயப்புடவை கட்டி  முந்தானையை நன்றாக போர்த்து சிலை நடப்பது போல. வண்டிக்காரர் காளையை … Continue reading

சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை- ஷங்கர்ராமசுப்ரமணியன்

சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை தலைப்பிரட்டைகளை மீன்களென்று எண்ணி நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து அள்ளி சட்டைப்பையில் நிரப்பிச்செல்லும் சிறுவர்கள் நீங்கள் அவை உங்கள் விருப்பப்படியே  உங்கள் தலைக்குள்ளும் சில நாட்களுக்கு அவரவர் வசதிக்கேற்ப குப்பிகளிலும் மீனென நீந்தும். மீன்களைப் பிடிப்பதற்கு தேவையான தூண்டில்கள் வலைகள் காத்திருப்பின் இருள் எதையுமே அறியாத சிறுவர்கள் நீங்கள். தலைப்பிரட்டைகளை சட்டைப்பைக்குள் நிரப்பி எடுத்துச்செல்கிறீர்கள். உலகிற்கும் காத்திருக்கும் உங்கள் அம்மாவிற்கும் யாரும் எதிர்பார்த்திராத அரிய உயிர்த்துடிப்புள்ள பரிசை எடுத்துச்செல்வதில் உங்கள் மனம் படபடக்கிறது உங்கள் தோழி … Continue reading

>கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்

> லேட்டி பொன்னுமக்கா முன்வாசல் வழியா போகக்கூடாதுட்டீ… அயித்தம் பாப்பாங்க நம்ம பொழப்பே பொறவாசல் பொறப்புட்டீ. ஏமாத்திம்மா….. அடியேன் வந்திருக்கேன் கும்பிகாந்துகு ஏதெங்கிலும் தரக்கூடாதா கஞ்சி வெள்ளமும் ஒரு துண்டு கருப்பட்டியும் கிட்டியாலே போதும் மனசுவெச்சு ஏமாத்தியம்மா எச்சிச் சோத்துல வெள்ளம் ஊத்தி  கொண்டு தட்டுவா விரிச்ச முந்தியில தண்டிணியெல்லாம் ஒழுகிவிழ கிட்டிய சோத்த அரிச்சுத் தின்போம். சட்டிப்பான கழுவணுமெங்கிலும் எல்லாத்துக்கும் வாற வழியதுதான் ஏமான் வீட்டிலயிருந்தாரெங்கி ஏமாத்தியோ பெண்டுபிள்ளையோ சத்தமிட்டு சிரிக்கப்பிடாது. ஏமான தொடப்பிடாது தண்ணிகொண்டு … Continue reading

>நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது

> இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்காக எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாஞ்சில் நாடனின் ”சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதை தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். நாஞ்சில் நாடன் படைப்புகள் நாஞ்சில் நாடன் இணையத் தளம் சூடிய பூ சூடற்க கிடைக்குமிடம்; தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயாப்பேட்டை, சென்னை..6000014 தொலைபேசி: +91-9884196552 இணையத்தில் வாங்க  : உடுமலை.காம்

>வாள்-சா.கந்தசாமி

> மென்மையான மேகங்கள் மேற்கிலிருந்து கிழக்காகக் குவிந்து கொண்டிருந்தன. பக்கிரி தலையைக் கொஞ்சம்போல் திருப்பிப் பார்த்தார். ஆற்றோரத்துத் தென்னை மரங்கள் ஆடுவது நன்றாகத் தெரிந்தது. மறுபடியும் ஒருமுறை பெரும் காற்று வீசப் போகிறது என்று தனக்குத் தானே தீர்மானம் பண்ணிக் கொண்டார். விட்டு வீசும் காற்று வேலைக்கு ஓர் அறைகூவல் போல் அவருக்குத் தோன்றியது. இடதுகாலை நன்றாக மரத்தில் அழுத்திக் கொண்டு கையிலிருந்த வாளைக் கீழே விட்டார். வாள் மரத்தில் கரகரவென்று இழைந்து கொண்டு சென்றது. அறுபட்ட … Continue reading