வண்ணத்துப்பூச்சியும் கடலும்- பிரமிள்

    வண்ணத்துப்பூச்சியும் கடலும் சமுத்திரக் கரையின் பூந்தோட்டத்து மலர்களிலே தேன்குடிக்க அலைந்தது ஒரு வண்ணத்துப் பூச்சி… வேளை சரிய சிறகின் திசைமீறி காற்றும் புரண்டோட கரையோர மலர்களை நீத்து கடல்நோக்கிப் பறந்து நாளிரவு பாராமல் ஓயாது மலர்கின்ற எல்லையற்ற பூ ஒன்றில் ஓய்ந்து அமர்ந்தது. முதல் கணம் உவர்த்த சமுத்திரம் தேனாய் இனிக்கிறது. ****** (உன்) பெயர் சீர்குலைந்த சொல்லொன்று தன் தலையைத் தானே விழுங்கத் தேடி என்னுள் நுழைந்தது. துடித்துத் திமிறி தன்மீதிறங்கும் இப் … Continue reading

‘மணிக்கொடி’ எழுத்தாளர்களுக்கு இசங்கள் கிடையாது – எம்.வி.வெங்கட் ராம்

சந்திப்பு : அப்பணசாமி, தேனுகா, கண்ணம்மா ‘மணிக்கொடி’ இலக்கியக் கொடியைச் சேர்ந்த எம்.வி. வெங்கட்ராம், எம்.வி.வி. என புதுமைப்பித்தன் முதல் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர் வரை அழைக்கப்படுபவர். அவரது ‘வேள்வித் தீ ‘, ‘அரும்பு’ , ‘நித்திய கன்னி’ முதல் சமீபத்திய ‘காதுகள்’ நாவல் வரை நாவல்களுக்காக தமிழ்  இலக்கிய உலகம் முழுமையாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். இருந்தாலும் இவரது சிறுகதைகள், கவிதைகள் உலகம் பற்றி தமிழ் உலகம் அவ்வளவாக அறியாதது. மிகச் சமீபத்தில் இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு … Continue reading

சுகுமாரன் – நேர்காணல்

துயரத்தின் பாலைவெளி முடிவற்ற நீளம் சந்திப்பு: பெருமாள்முருகன் சுகுமாரன் (11.06.1957): நவீனத் தமிழ்க் கவிதை ஆளுமைகளுள் முக்கியமானவர். எளிமையும் செறிவும் கொண்ட இவர் கவிதைகள் படிமம், உவமை, சொற்சேர்க்கை ஆகியவற்றில் தனித்துவம் மிக்கவை. வடிவம், சொல்முறை ஆகியவற்றில் வெவ்வேறு விதங்களைக் கையாண்டு புதுமைசெய்தவர். அரசியல் சார்ந்த விஷயங்களையும் கவித்துவத்தோடும் சுயபார்வையோடும் கவிதைக்குள் கொண்டுவந்தவர். சுயவிமர்சனத்தைக் கறாராக வைத்துக்கொண்டிருப்பவர். இலக்கியம், இசை, திரைப்படம் ஆகியவை இவரது முப்பெரும் காதல்கள். சிறுகதைகளும் எழுதியுள்ளார். சமீப காலமாக இவர் எழுதிவரும் கட்டுரைகள் … Continue reading

ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்- பவா செல்லதுரை

பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின் துவக்கத்திலேயே அற்புதம் பாட்டிக்கு முழிப்பு தட்டியது. பக்கத்தில் தன் கதகதப்பிலும், வெற்றிலைச் சாறின் கார நெடியிலும் பழக்கப்பட்டு தூக்கத்திலிருந்தவனைக் கிள்ளி எழுப்பினாள். பாட்டியின் நகங்கள் அவனைத் தவிர எல்லோருக்கும் பயமூட்டக்கூடியவை. அவள், நகநுனிகளில் உலகின் பல ஜால வித்தைகளை வைத்திருந்தாள். மூன்றாவது கிள்ளலில் துடித்தெழுந்தான். இருளின் அடர்த்தியைக் குறைக்க வெளியில் ஒரு முயற்சி நடந்தேறிக் கொண்டிருக்கையில், … Continue reading

சாகுருவி – ந.பிச்சமூர்த்தி

கொக்கு படிகக் குளத்தோரம் கொக்கு. செங்கால் நெடுக்கு வெண்பட்டுடம்புக் குறுக்கு முடியில் நீரை நோக்கும் மஞ்சள் கட்டாரி மூக்கு. உண்டுண்டு அழகுக் கண்காட்சிக்குக் கட்டாயக் கட்டணம். சிலவேளை மீனும் பலவேளை நிழலும்… வாழ்வும் குளம் செயலும் கலை நாமும் கொக்கு. சிலவேளை மீனழகு பலவேளை நிழலழகா? எதுவாயினென்ன? தவறாது குளப்பரப்பில் நம்மழகு- தெரிவதே போதாதா? சாகுருவி இருள் பழுத்த இரவினில் விண்ணின் மீன்கள் உதிர்ந்தன. உயிர் முடிந்த சருகுகள் ஊசலாடி விழுந்தன. நிழலும் நீரும் முடிய மாந்தர் … Continue reading

தக்ஷ்ணாமூர்த்தியான..-விக்ரமாதித்யன் நம்பி

    தக்ஷ்ணாமூர்த்தியான… மாமிசம் தின்னாமல் சுருட்டுப் பிடிக்காமல் பட்டை யடிக்காமல் படையல் கேட்காமல் உக்ரம் கொண்டு சன்னதம் வந்தாடும் துடியான கருப்பசாமி இடையில் நெடுங்காலம் கொடைவராதது பொறாமல் பதினெட்டாம்படி விட்டிறங்கி ஊர்ஊராகச் சுற்றியலைந்து மனிதரும் வாழ்க்கையும் உலகமும் கண்டு தேறி அமைதி கவிய திரும்பி வந்தமரும் கடந்தகாலக் கைத்தநினைவுகள் வருத்தவும் எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும் வீடு வீடு பத்திரமான இடம் “புலிப்பால் கொண்டு வரப் போனான் ஐயப்பன்“ புத்தி வளர பேச்சு குறைய அந்தம் கண்டது … Continue reading