சிறுமி கொண்டுவந்த மலர் – விமலாதித்த மாமல்லன்

இரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறித்த பார்வையுடன் படுக்கையிலேயே உட்கார்ந்திருந்தார். காலி டபராசெட் எதிரிலிருந்தது. ஆனால் வேறு யாரோ காபி குடித்ததுபோன்ற பிரமையே அவருக்கு ஏற்பட்டது. உண்மையிலேயே ஒன்றும் புரிபடவில்லை. தலைக்கு நாள் மதியத்திலிருந்து இப்போது படுக்கையில் இப்படி உட்காந்திருப்பது வரை, அனைத்தும் நாட்டுப்புறக்  கட்டுக்கதைகளில் சொல்லப்படுவது போலவே நடந்தேறியிருப்பதாகத் தோன்றியது அவருக்கு. XXX முன்தினம் பகல் உணவை முடித்துக்கொண்டு கடைக்கு … Continue reading

தியாகமூர்த்தி – புதுமைப்பித்தன்

     செங்காணி என்ற திவ்வியப் பிரதேசத்தைப் பற்றி, நீங்கள் எந்தப் பூகோள சாஸ்திரத்தையோ, படங்களையோ, காருண்ய கவர்ண்மெண்டார் மனமுவந்து அருளிய நன்மைகளில் ஒன்றாகிய கெஜட்டுகளையோ திருப்பித் திருப்பிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் எனது வார்த்தையையும் அந்தப் பெயர் தெரியாத புலவர் இசைத்த,      தருவைக்கு மேற்கே செங்காணி வெள்ளம்      தானே வந்தால் இங்கு விடுவானே தோணி  என்ற மேற்கோள் வரிகளையும் நம்புவதாக இருந்தால்தானே மேலே சொல்ல முடியும்.      தானே எப்பொழுதாவது வெள்ளம் வந்தால் … Continue reading

வெளியில் ஒருவன்-சுகுமாரன்

வெளியில் ஒருவன் பரிவில்லாதது வீடு வெளிக் காற்றில் ஏராளம் விஷம் சோகை பிடித்த தாவரங்கள் நீர்நிலைகளில் சாகும் பறவைகள் மிருகங்கள்  . பிச்சைக்காரியின் ஒடுங்கிய குவளையில் சரித்திரம் கெக்கலிக்கும். தேசக் கொடிகளின் மடிப்பவிழ்ந்து எங்கும் பொய்கள் கவியும். ஒன்று அல்லது மற்றொன்று – விலங்குகளை இழுத்து நகரும் மனிதர்கள். திசைகளில் அலைந்து திரும்பிய பறவை சொல்லிற்று மனிதர்கள் எரிக்கப் படுவதை பெண்கள் சிதைக்கப் படுவதை குழந்தைகளும் சங்கீதக் கருவிகளும் பிய்த்தெறியப் படுவதை பூக்களும் கவிதைகளும் மிதிக்கப் படுவதை … Continue reading

மூங்கில் குருத்து – திலீப்குமார்

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே கோவையிலிருந்த தையல் கடைகளில் வாரக்கூலி முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. திரு.கிருஷ்ணாஜிராவ் கடையிலும் அப்படித்தான். வாராவாரம் வியாழக்கிழமை தட்டி-பாஸ் தயவில் ’குலேபகாவலி’, ‘குலமகள் ராதை’ போன்ற ஒப்பற்ற ‘திரைக்காவியங்களை’ இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டுக் கனவுக்கன்னிகளின் திரட்சிகளை மனத்திற்குள் ஆலிங்கனம் செய்து, லுங்கியைக் கறைபடியச் செய்து கெட்டுப்போய்க் கொண்டிருந்த அநேகம் கடைப் பையன்களைப் போலத்தான் நானும். அண்ணன் சென்னைக்கு ஓடித்தொலைத்தாயிற்று. அக்காவை நீலகிரியில் ஒரு எஸ்டேட் மானேஜருக்குத் தாரை வார்த்தாகிவிட்டது. அக்காவின் அழகு அவளுக்குக் கொஞ்சம் … Continue reading

உன் நினைவுகள் – ஆத்மாநாம்

காட்சி முதலில் நீதான் என்னைக் கண்டுகொண்டாய் எனக்குத் தெரியாது மனிதர்களைப் பார்த்தவண்ணம் முன்னே வந்துகொண்டிருந்தேன்  உயிருடைய ஒரு முகத்துடன் பளிச்சிட்டுத் திரும்பினாய் பின்னர் நடந்தவைக்கெல்லாம் நான் பொறுப்பல்ல எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய் அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க காட்சிகள் மாற மாற நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம். உன் நினைவுகள் எனினும் நான் உற்றுப் பார்த்தேன் கூர் வைரக் கற்கள் … Continue reading

வீடியோ மாரியம்மன்-இமையம்

“எதுக்குடா பயலெ அடுப்புக்கட்டிகிட்ட வந்து ஏறிகிட்டு நிக்குறவன்?” “பாயி கொடு.” “பாயி இல்லெ.” “ஊருல இருக்கிற எல்லாப் பசங்களும் எடுத்துகிட்டுப் போறாங்க இல்லெ.” “போனாப் போறாங்க” என்று சொன்ன கம்சலை அடுப்பில் வெந்துகொண்டிருந்த சோற்றைக் கிண்டிவிட ஆரம்பித்தாள். முருகன் லேசாகச் சிணுங்கி அழ ஆரம்பித்தான். சோற்றை இறக்கி வடித்த கம்சலை, குழம்புச் சட்டியைத் தூக்கி அடுப்பில் வைத்தாள். “பாய் தா” என்று சொல்லி முருகன் அடம்பிடிக்க ஆரம்பித்தான். அவனுடைய தொல்லையைத் தாங்க முடியாமல் “இதென்ன வம்பு சனியனா … Continue reading

நினைவோடை: சி. சு. செல்லப்பா – சுந்தர ராமசாமி

நினைவோடை: சி. சு. செல்லப்பா – சுந்தர ராமசாமி (தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்) நான் சென்னைக்குப் போன சமயங்களில் ஒரு தடவை கூட செல்லப்பாவைச் சந்திக்காமல் வந்தது கிடையாது. என்ன தான் இருந்தாலும் அவரைப் போய்ப் பார்த்துவிடுவேன். நிறைய நேரம் அவருடன் இருப்பேன். அவரது வீட்டுக்குப் போனதும் முதல் கேள்வி, ‘என்னிக்கு வந்தாய்?’ என்பதுதான். ‘முந்தா நாள் வந்தேன்’ என்பேன் நான். ‘க. நா. சுவைப் பார்த்தாச்சில்லையா’ என்பார் உடனே. இவர் மட்டுமல்ல பலருக்கும் இந்த வியா … Continue reading