சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருது

எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நூலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. தமிழ் நாவல் எழுத்தாளரான சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராவார். மதுரையில் இவர் வசித்து வருகிறார். இவர் எழுதிய ஒரே நாவல் காவல்கோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.     அழியாச்சுடர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகள். Advertisements

பிம்பம் – லா.ச.ராமாமிருதம்

மாசக் கடைசியில் ஒவ்வொரு மாசமும் அப்படித்தான் –  பருப்புத் தட்டுப்பாடில் ஆரம்பித்து சிறுகச் சேர்ந்து கட்டுக்கடங்காமல், திடீரென்று பெருத்துவிட்ட பூதத்தைச் சமாளிக்க P.F. இல் கடன் வாங்குவது பற்றிப் பாரதியுடன் இறங்கிவிட்ட பேச்சு சுவாரஸ்யத்தில், தான் திடீரென்ற நின்ற இடத்திலிருந்து தள்ளப்படுவதுகூடத் தெளியாத அதிர்ச்சியில் தள்ளாடிப் போனான். ‘ஸாரி மாடம்! மன்னிச்சுடுங்க மாடம்!’ அந்த வாலிபனின் கைகளும் கண்களும் தவித்தன. கன்னங்கள் கருங்குழம்பு. “நான் எதிரே பார்த்துண்டு வரல்லே’’.  அப்போதுதான் விஷயம் புரிந்து கடுங்கோபம் பற்றிக்கொண்டது.  “எதிரே … Continue reading

சாரல் விருது 2012

  ராபர்ட்-ஆரோக்கியம் நினைவாக இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி அளித்துவரும் 2012 ஆம் வருடத்திற்கான சாரல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வண்ணதாசன், வண்ணநிலவன் இருவருக்கும் விருது அளிக்கப்படுகிறது விழா 2012 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது. சிற்பி வித்யாசங்கர் வடிவமைத்த சிற்பமும் ரூ 50000 மும் அடங்கியது விருது.     வண்ணநிலவன் வண்ணதாசன்    வண்ணதாசன்  படைப்புகள் சில வண்ணநிலவன்  படைப்புகள் சில

"என் கணவர்" – செல்லம்மாள் பாரதி

    மகாகவி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921). திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு. எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே! என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்த்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் … Continue reading

பூமணியின் படைப்புலகம்-ஜெயமோகன்

பூக்கும் கருவேலம்–பூமணியின் படைப்புலகம் ஜெயமோகன் விளக்கு அமைப்பின் இலக்கியப் பரிசை எழுத்தாளர் பூமணி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது.பூமணி தமிழின் இயல்புவாத[naturalist] இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது ‘பிறகு ‘ ‘ வெக்கை ‘ ஆகிய இரு நாவல்களும் ‘ ரீதி ‘ என்ற சிறுகதைதொகுப்பும் முக்கியமானவை என்று கூறலாம். இன்றைய தலித் இலக்கியங்கள் பலவற்றிலும் உள்ள ஓங்கிய பிரச்சாரக் குரலோ , பிரச்சினைகளை எளிமைப்படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப்படைப்புகள் அவை.அவரது நாவல்கள் … Continue reading

பூமணி-க்கு விஷ்ணுபுரம் விருது

  விஷ்ணுபுரம் விருது 2011 தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல் பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை கலந்துகொள்ளும் ஆளுமைகள் எழுத்தாளார் ஜெயமோகன், வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம் எழுத்தாளார் யுவன் சந்திரசேகர், எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளார் நாஞ்சில்நாடன் கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார், இயக்குனர் … Continue reading

சிறுகதை எழுதுவது எப்படி?-தி.ஜானகிராமன்

எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் … Continue reading