பள்ளியில் ஒரு நாய்க்குட்டி – சுந்தர ராமசாமி

(சு.ரா. தனது நோட்டுப் புத்தகத்தில் 22.05.2003 தேதியிட்டு எழுதிவைத்திருந்த கதையின் கரட்டு வடிவம்.) இருள் விலகுகிற நேரம் ஒரே மாதிரி இருப்பதில்லை. எத்தனையோ வருடங்களாக இந்தப் பள்ளிக்கு அதிகாலை நடக்கப் போய்க்கொண்டிருக்கிறேன். இருந்தும் தரை வெளுக்கும் நேரத்தை என்னால் மனதில் மட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அன்று காலை சரியான நேரம் என்று கணக்கிட்டவாறு நான் வெளியே வந்தேன். இருள் அடர்த்தியாக இருப்பதாகத் தோன்றியது. அங்கும் இங்குமாக மனித ஜீவன்களின் நிழல்களின் அசைவாகத் தெரிந்தன. இன்னும் புழுதி கிளப்பும் வாகனங்களின் … Continue reading

கொழுத்தாடு பிடிப்பேன் – அ.முத்துலிங்கம்

ஓம் கணபதி துணை The Immigration Officer 94/11/ 22 200, St Catherene Street Ottawa, Ont K2P2K9 ( Please translet Sri Lankan Tamil Language ) [ இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் வசனங்களின் ஓடரை மாற்றாமலும், எனது கருத்துக்கள் சரியாக வரும்படியும் தெட்டத்தெளிவாக எங்கள் கலாச்சார வித்தியாசங்களை விளங்கப்படுத்தியும் மொழிபெயர்க்கும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.] கனம் ஐயா அவர்களுக்கு, சண்முகலிங்கம் கணேசரட்னம் ஆகிய நான் 90 /03 / 18 அன்று மாலை … Continue reading

“நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்?’’-வண்ணநிலவன்

வண்ணநிலவன், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர்: உலகநாதபிள்ளை; தாய்: ராமலட்சுமி அம்மாள். பெற்றோர் இவருக்கு வைத்த இயற்பெயர்: உ.ராமச்சந்திரன். சொந்த ஊர்: திருநெல்வேலி. பள்ளிப் பருவத்துக்குப் பிறகு பணி காரணமாக தாதன்குளம், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, பாண்டிச்சேரி, சென்னை உட்பட பல ஊர்களில் வண்ணநிலவன் வசித்துள்ளார். 07 ஏப்ரல் 1977 அன்று வண்ணநிலவனுக்கு திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர்: சுப்புலட்சுமி. இவர்களுக்கு ஆனந்த் சங்கர் என்ற மகனும் சசி, உமா … Continue reading

வாசகரும் எழுத்தாளரும் – க.நா.சுப்ரமணியம்

இது ஜனநாயக யுகம் – அதனால் வாசகனுக்கு ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.அது உண்மையில் அப்படியில்லை. உலகில் முதல் எழுத்தாளன் தோன்றிய முதலே வாசகர்களின் முக்கியத்துவமும்தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இன்று பழைய காலத்திய முக்கிய இலக்கியாசிரியர்கள்என்று கருதப்படுபவர்களில் பெரும்பாலோர் வாசகர்களை மறந்து விட்டு, தன் பாட்டில், எழுதியவர்கள்தான். வாலிவதத்தைப் பற்றியோ, விபீஷண சரணாகதி பற்றியோ இன்று வரை ஏற்பட்டுள்ள வாசக விவாதங்களை வால்மீகிஎன்கிற கவிமட்டும் கேட்டு அவற்றைக் கொண்டு தன் காரியத்தை … Continue reading

நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்-ஜெயகாந்தன்

ஆமாம்; நான் ஜன்னலண்டைதான் உக்காந்துண்டிருக்கேன்… அதுக்கென்னவாம்? உட்காரப்படாதோ?… அப்படித்தான் உட்காருவேன். இன்னிக்கி நேத்திக்கா நான் இப்படி உக்காந்துண்டிருக்கேன்… அடீ அம்மா! எவ்வளவோ காலமா உக்காந்துண்டுதான் இருக்கேன். இனிமேலும் உக்காந்துண்டுதான் இருப்பேன். என்ன தப்பு? இல்லே, யாருக்கு என்ன நஷ்டம்? பெரீசா எப்போ பார்த்தாலும் இதையே ஒரு வழக்காப் பேசிண்டு இருக்கேளே… ‘ஜன்னலண்டையே உக்காந்துண்டிருக்கா… உக்காந்துண்டிருக்கா’ன்னு. ஜன்னலண்டை உட்காரப்படாதோ? ஜன்னலண்டையே போகப் படாதோ ? அப்படீன்னா வீட்டுக்கு ஜன்னல்னு ஒண்ணு எதுக்காக வெக்கணும்கறேன்! ஒண்ணா? இந்த வீட்டுக்கு ரெண்டு … Continue reading

பாதுகை – பிரபஞ்சன்

இரண்டு பெருச்சாளிகள் பக்கத்தில் பக்கத்தில் நிற்பதுபோல அந்தச் சப்பாத்துகள் இருந்தன. புத்தம் புதிய சப்பாத்துகள். முகம் பார்த்துத் தலை சீவிக் கொள்ளலாம் போன்ற பளபளப்பு. வாசலில் காய்ந்த வெயில் வெளிச்சம் பட்டுக் கறுப்பு மின்னல் மாதிரி அலைகள் ஒளிர்ந்தன. பொன்னுத்தம்பி அந்தச் சப்பாத்துக் குழந்தைகளைப் பார்த்தான். கறுப்பு இரட்டைக் குழந்தைகள். வெள்ளைக்காரத் தெருவில், துரைமார்களுக்கு மட்டுமே பாதுகைகள் செய்யும் மாடன் சிரத்தையோடும் ஆர்வத்தோடும் செய்திருந்தான் அவற்றை. விலை கொஞ்சம் கூடுதல்தான்.  அதற்கென்ன செய்ய முடியும். துரைமார்கள் கொடுக்கிற … Continue reading

ஊமைச் செந்நாய் – ஜெயமோகன்

யானைத்துப்பாக்கியைத் தூக்கி தனக்கு இணையாக நிறுத்திக் கொண்டு துரை என்னைப் பார்த்துக் கண்ணைச்சிமிட்டினான். பெரும்பாலான துரைகளுக்குக் கண்களைச் சிமிட்டும் பழக்கம் உண்டு. சின்னவயதில் நானும் என்ன செய்வதென்று தெரியாமல் பதிலுக்குக் கண்களைச் சிமிட்டிக் காட்டுவேன். அது துரைகளுக்குக் கோபத்தை உருவாக்கும் என்று சீக்கிரமே புரிந்துகொண்டேன். அதன்பின் முப்பதுவருட வேட்டைத்துணைவனின் வாழ்க்கையில் நான் மிகமிக அமைதியாக இருக்கக் கற்றுக் கொண்டேன். வேட்டை நாய் எப்படி இருக்குமோ அப்படி இருப்பேன். நா ன் கூடச்செல்வதே தெரியாது. தேவையான இடத்தில் மட்டும் … Continue reading

அஞ்சலி: ஹெப்ஸிபா ஜேசுதாசன்

நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசன் பிப்ரவரி 9ம் தேதி மாலை  தன் ஊரான புலிப்புனம்[ தக்கலை, குமரிமாவட்டம்] கிராமத்தில் காலமானார். அஞ்சலி, ஹெப்ஸிபா ஜேசுதாசன் – ஜெயமோகன் ஹெப்சிபா ஜேசுதாசன் : நேர்காணல் ஹெப்ஸிபா ஜேசுதாசனின் படைப்புலகமும் கருத்துலகமும் :அ.ராமசாமி

முள்முடி – தி.ஜானகிராமன்

”அப்ப எங்களுக்கு உத்தரவு கொடுக்கிறீங்களா?” என்று கண்ணுசாமி எழுந்ததும் கூடத்தை அடைத்து உட்கார்ந்திருந்த கூட்டமும் எழுந்து கொண்டது. ”நான் வரேன் சார்” ”நான் வரேன் சார்” ”சார். போய்ட்டு வரேன் சார்!” நடுவில் ஒரு பையன் அவர் காலைத்தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண் டான். சட்டென்று காலை இழுத்துக்கொண்டார் அனுகூலசாமி. ”அட. இதென்னடா தம்பி” ”செய்யபட்டும் சார். இந்த மாதிரி யார் கிடைக்கப் போறாங்க அவங்களுக்கு?. நல்லாயிருக்கணும்னு உங்க வாயாலே சொல்லுங்க நடக்கும்” என்றார் கண்ணுசாமி. அந்தப் பையனைப் … Continue reading

சுரேஷ்குமார இந்திரஜித் – நேர்காணல்

மறைந்து திரியும் கலைஞன் சந்திப்பு: அரவிந்தன் அவரது எழுத்தைப் போலவே பேச்சும் இருக்கிறது. சுருக்கமாக, அளந்தெடுத்த வார்த்தைகள் கொண்டதாக, பதற்றம் சிறிதும் இல்லாததாக. மறைந்து திரியும் கிழவன் தொகுப்பின் மூலம் தீவிர எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் தனிக் கவனம் பெற்ற சுரேஷ்குமார இந்திரஜித்தை (53) சந்தித்துப் பேசக் கண்ணன், நெய்தல் கிருஷ்ணன் மற்றும் நான் ஆகியோர் ஆகஸ்ட் மாத நடுவில் மதுரைக்குச் சென்றோம். அப்போது மதுரையில் வசித்த கவிஞர் தேவேந்திர பூபதியும் எங்களுடன் இணைந்துகொண்டார். சுரேஷ்குமார் … Continue reading