ந. பிச்சமூர்த்தி – ‘எழுத்து’ நேர்காணல்

ந. பிச்சமூர்த்தி 1900 ஆகஸ்ட் பதினைந்து அன்று தஞ்சை ஜில்லா கும்பகோணத்தில் பிறந்தவர். ஹரி கதை காலட்சேபம், நாடகத்துறை, ஆயுர்வேத வைத்யம், தாந்தீரிக உபாசனையில் ஈடுபாடு, நான்கு மொழிகளில் சாகித்யம் இயற்றல் இவைகளில் வல்லுநரும், சகலகலா வல்லவருமான அவரது தந்தை நடேச தீட்சதர் காலம்சென்றபோது அவருக்கு வயது ஏழு. தாயின் பராமரிப்பில் வளர்ந்த பிச்சமூர்த்தி கும்பகோணம் டவுன் உயர்தரப் பாடசாலையில் படித்து, கும்பகோணம் நேடிவ் கலாசாலையில் படித்து பிலாசபி எடுத்துக்கொண்டு பி.ஏ பட்டம் பெற்று பின் சட்டப்படிப்பு … Continue reading

சிந்தாநதி – லா.ச. ராமாமிருதம்

1967/68 நாகர்கோவிலில் ஒரு நண்பர் வீட்டில் நான் குடும்பத்துடன் தங்க நேரிட்டது. சென்னையில் ஓரிரண்டு இலக்கியக் கூட்டங்களிலும் அவரை சந்தித்ததோடு எங்கள் பரிச்சயம் அப்போது நின்றது. ஆனாலும் அந்த வீட்டாரின் வரவேற்பு விருந்தோம்பலின் சிறப்பு பற்றி எள்ளளவும் சந்தேகமில்லை. என்றாலும் ஒரு சங்கோஜம் எங்களுக்கிடையே இடறிற்று. ஆனால் நண்பரின் தாயாரை சந்திக்கும் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது. அந்த அம்மா என் நாவல் “புத்ர“ வைப் படித்திருந்தார் என்று சொன்னால் மட்டும் போதாது. ஆங்காங்கே வாக்கியங்களை ஒப்பித்து … Continue reading

மொழி அதிர்ச்சி – கோபிகிருஷ்ணன்

”பிரச்சனெ பெரிஸ்ஸா ஒண்ணுமில்லீங்க.” ”பரவாயில்லெ, எதுவானாலும் சொல்லுங்க..அவங்களுக்கு என்ன பிரச்சினென்னு முழுஸ்ஸாத் தெரிஞ்சாத்தான் உதவி செய்யிறதுக்கு எங்களுக்குச் சுலபமா இருக்கும்.” ”கொஞ்ச நாளாவே சிடுசிடுங்கறது, எங்கிட்டே எரிஞ்சு விழுறது, கொழந்தைகங்களெப் போட்டு மொத்தறது இப்பிடியாயிருக்குதுங்க.  சமாதானப்படுத்துனாகூட கோபம் தணியிறதில்லெ..” ”வீட்டுலெ ஏதாச்சும் சிக்கலாச்சா?” ”சிக்கலுன்னு என்னெத்தெங்க சொல்றது?  கொஞ்ச நாளா யாபாரம் அவ்வளவு சொகமில்லீங்க.. ஒருவேளை அதனாலெதான் ரிலேக்ஸேஸனாயி ஒரு மாதிரி ஆயிட்டாளோன்னு நெனெக்கிறேன்.” ”என்ன ஆயிடுச்சின்னு சொன்னீங்க?” ”அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு என்ன வெவரம் வேணும்னு … Continue reading

நான் – நகுலன்

. நான் வழக்கம்போல் என் அறையில் நான் என்னுடன் இருந்தேன் கதவு தட்டுகிற மாதிரி கேட்டது ”யார்” என்று கேட்டேன் ”நான் தான் சுசீலா கதவைத் திற “என்றாள் எந்த சமயத்தில் எந்தக் கதவு திறக்கும் என்று யார்தான் சொல்ல முடியும்? நான்(2) நேற்றுப் பிற்பகல் 4:30சுசீலா வந்திருந்தாள் கறுப்புப் புள்ளிகள் தாங்கிய சிவப்புப் புடவை வெள்ளை ரவிக்கை அதேவிந்தைப் புன்முறுவல் உன் கண்காண வந்திருக்கிறேன் போதுமா என்று சொல்லிவிட்டுச் சென்றாள் என் கண் முன் நீல … Continue reading

அம்மா வந்தாள்-தி. ஜானகிராமன்

அம்மா வந்தாள் நாவலின் சிறு பகுதி பகலும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. இரவும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. முதல் நாள் நினைத்தது போல் இரைச்சலாக இல்லை. கார் ஓடுகிறது. குழாய்ச் சண்டை கூச்சலிடுகிறது. எருமை ஓயாமல் கத்துகிறது. கடல் இரவெல்லாம் சீறுகிறது. கூர்க்காக்காரன் தடியால் இரவைத் தட்டித் தட்டி எழுப்பிக்கொண்டேயிருக்கிறான். கொளகொளவென்று குழாய் நீர் குறை சொல்லிக் கொண்டேயிருக்கிறது. எதிர்வீட்டுப் பையன் திண்ணையில் உட்கார்ந்து ஊர்ப் பையன்கள் எல்லாம் ஒரு குரலாகக் குவித்தது போல பாடத்தைக் கத்திக் கொண்டேயிருக்கிறான். அப்பா … Continue reading