பாத மலர் – எஸ். வைத்தீஸ்வரன்

பாத மலர் மலரற்ற தார் ரோடில் பாதங்கள் விழிக்கு மலர். கார் அலையும் தெருக்கடலில் பாதங்கள் மிதக்கும் மலர். வெயில் எரிக்கும் வெறுந் தரையில் வழி யெதிரில் பாவாடை நிழலுக்குள் பதுங்கி வரும் வெண் முயல்கள். மண்ணை மிதித்து மனதைக் கலைத்தது, முன்னே நகர்ந்து மலரைப் பழித்தது பாதங்கள். மனிதனுக்கு மேக நிழல் மிக மெல்லிய நைலான் துணியாய் நிலத்தில் புரளும், பகல். தார் ரோடில் தன் நிழலை நசுக்கி மிதித்து வாழ்க்கையின் மூலச்சூட்டால் கொதித்தோடும் மனித … Continue reading

எழுத்தாளுமைகள் பற்றிய ரவிசுப்ரமணியனின் ஆவணப்படங்கள்

1. ஜெயகாந்தன்:எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் “ஒரு எழுத்தாளனை எதற்காக ஆவணப்படம் எடுக்க வேண்டும்? அவனுக்காக அவனது எழுத்துக்கள் பேசும். அவன் போனபின்னும் அவை பேசிக் கொண்டிருக்கும். கலைஞனின் சொற்கள் அழியாது. தன் ஆக்கங்களில் பேசியவற்றுக்கு அப்பால், அவன் ஒரு பேட்டியிலோ அல்லது ஆவணப்படத்திலோ ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை. இலக்கியம் சார்ந்த நோக்கில் இத்தகைய ஆவணப்படுத்தல்களுக்கு எந்த இடமும் இல்லை. ஆனால் நமக்கு இலக்கியவாதி என்ற ஆளுமை தேவைப்படுகிறது.  வள்ளுவரும் கம்பனும் எப்படி இருந்தார்கள் என நாம் அறிவதில்லை. … Continue reading

ராஜகுமாரி-லா.ச.ரா

நிழல்கள் நீளத் தொடங்கிவிட்டன. பொழுதின் உருவச் சோதனைகளாய் வானத்தில் வண்ணங்கள் குமைகின்றன. கோணக்கிழக்கில் அடிவானத் திருப்பத்தில் தோன்றியிருக்கும் நீலச் சிரிப்பின் குறுக்கே பக்ஷிகள் மூன்று கோலப் புள்ளிகள் போலும் ஒரே அச்சில் பறக்கின்றன. அந்தரத்தில் கூடு கட்ட இடந்தேடுகின்றனவா? தொடுவானிற்கும் பூமிக்கும் பாலம் விழுந்த ஒளி தூலத்தின் குழல்   வழி வர்ணங்கள் விதவிதமாய்ப் பெய்கின்றன. எதிரிலிருந்து எதில்? வானத்திலிருந்து பூமிக்கா? பூமியிலிருந்து வானிற்கா என்றுதான் புரியவில்லை. ஆனால் ஒன்று புரிகிறது. சாயும் பொழுதில் தோயும் வண்ணக் குழைவில் … Continue reading

சிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு !சி.சு.செல்லப்பா

சிறுகதைக்காரர்கள் தங்கள் கதைக்கான விஷயத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்ட பிறகு அடுத்து கவனிக்க வேண்டியது அதை அவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதுதான். இங்குதான் உருவம் என்கிற பேச்சு எழுகிறது. உருவம் என்றால் ஏதோ ஒரு வரையறை ஏற்படுத்தி இந்த மாதிரி இருந்தால்தான் அது ஒரு சிறுகதை என்று ஒரு ஆரம்ப சட்டம் இட்டு, ஒரு கட்டுப்பாட்டுக்குள், அடாபிடித்தனமாக, இயங்க வைக்கப்பட்ட ஒன்று என்று கொண்டு விட முடியாது. ஆரம்பகாலப் படைப்பு ஒன்று தனக்குள் அடக்கி இருக்கும் ஒரு அமைப்பு … Continue reading

‘எழுத்து’ முதல் ‘கொல்லிப்பாவை’ வரை-ராஜமார்த்தாண்டன்

கனவுகளும் யதார்த்தமும்: 1970களின் ஆரம்பத்தில் கேரளம் பாலக்காடு அருகிலுள்ள சித்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ் முதுகலைப் படிப்பில் சேரும்வரையிலும் இலக்கியப் பத்திரிகைகள் என்றால் எனக்குக் கல்கி, ஆனந்த விகடன், குமுதம், கல்கண்டு என்பவைதான். இலக்கியப் படைப்பாளிகள் என்றால் அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், சாண்டில்யன், தமிழ்வாணன் போன்றவர்கள்தான். தி. ஜானகிராமனும் ஜெயகாந்தனும் கல்கி, ஆனந்த விகடனில் எழுதியதால் ஓரளவு அறிமுகம். எங்கள் பேராசிரியர் ஜேசுதாசன்தான் மணிக்கொடி எழுத்தாளர்கள், எழுத்து, இலக்கிய வட்டம் இதழ்கள் குறித்தும் அறிமுகப்படுத்தினார். … Continue reading