பூனைக்குட்டிகள்-கா.நா.சுப்ரமணியம்

க.நா.சு.100 பூனைக்குட்டிகள் மேஜை மேல் படுத்துறங்கும் கருப்புக் குட்டி என்னைப் பேனா எடுக்க விடாமல் தடுக்கிறது  நாற்காலியில் படுத்துறங்கும் கபில நிறக்குட்டி என்னை உட்கார அனுமதிக்க மறுக்கிறது அடுப்பிலே பூனைக்குட்டி உறங்குகிறது சமையல் இன்று நேரமாகும் என்கிறாள் என் மனைவி   கஞ்சிஞ்ஜங்கா எனக்குப் பதினாறு வயதாக இருக்கும்போது டார்ஜிலிங்கில் இந்த இடத்தில் நின்று கஞ்சிஞ்ஜிங்கா மலை மேலே பனி மூடியிருப்பதைப் பார்த்திருக்கிறேன், ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பார்க்கிறேன், வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை, என் கண் … Continue reading

எழுதிக்கொண்டே இருந்த க.நா.சு – அசோகமித்திரன்

க.நா.சு.100 புத்தக அறிமுகம் எழுதிக்கொண்டே இருந்த க.நா.சுப்பிரமணியம் கி.அ.சச்சிதானந்தம்  வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை – 600017. விலை – ரூ75/- மன்ச்சி மனுஷிக்கு ம -ரணமே சாட்சி’ என்று ஒரு பழமொழி தெலுங்கில் உண்டு. எல்லா நல்லவர்களுக்கும் அனாயாச மரணம் கிடைப்பதில்லை. ஒரு குழந்தையுடையது போன்ற மனது கொண்ட பாரதியார் கடைசி நாட்களில் ஒரு நொடிப்போதாவது ‘காலா, நீ உடனே வா’ என்று எண்ணியிருக்கக் கூடும். செப்டம்பர் 12-ஆம் தேதி வரை அவர் உடலில் உயிர் … Continue reading

என்னை பாதித்த புத்தகங்கள்’ -க.நா.சு

க.நா.சு 100 என்னை பாதித்த புத்தகங்கள்’ என்ற க.நா.சு எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: நான் தமிழில் சிறுகதைகள் எழுதத் தொடங்குகிறபோது Joyce-னுடைய Dubliners கதைகளை முன் மாதிரியாகக் கொண்டு நகராத, Emotionless கதைகளைத்தான் எழுத முயன்றேன். எனக்கு Stream of consciousness என்கிற கயிற்றரவு உத்தி அவ்வளவாகத் தமிழுக்கு ஏற்ற விஷயமாகப்படவில்லை; அதற்கு ஒரு வசன வார்த்தை வளம் வேண்டும்; தமிழில் அது இன்னும் ஏற்படவில்லை என்று எண்ணுகிறேன். புதுமைப்பித்தனின் கயிற்றரவு, நினைவுப்பாதை முதலிய சிறுகதைகளிலும், … Continue reading

க.நா. சுப்ரமணியம்(1912-1988)

க.நா.சு 100 சமகால படைப்பாளிகள் மீது மிகக் கறாரான மதிப்பீடுகளை முன்வைத்த விமர்சகர். க.நா. சுப்ரமணியத்தை இலக்கியச் சிற்றிதழ்களில் இயங்கிய விமர்சகர்களுள் முன்னோடியாகக் குறிப்பிட வேண்டும். மணிக்கொடி இதழில் முன்னோடிகளைத் தொடர்ந்து இரண்டாம் தலைமுறை படைப்பாளியாகத் தன் படைப்புலக வாழ்வைத் துவங்கிய க.நா. சுப்ரமணியம் வாழ்வின் இறுதிவரைத் தொடர்ந்து இயங்கினார். இடையில் சிலகாலம் வாழ்விற்கான பொருளைத்தேட ஆங்கில இதழ்களில் எழுதினாலும் வாழ்வின் பிற்பகுதியில் தமிழில் தொடர்ந்து இயங்கினார். சிறுகதை, நாவல் என்னும் புனைகதையின் இரு வடிவங்களிலும் பங்களிப்பு … Continue reading

க.நா.சு: ஓர் எழுத்தியக்கம்-பழ. அதியமான்

க.நா.சு.100 க. நா. சுப்ரமண்யம் (1912- 1988) எழுதிய நூல்களை நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என ஆறு வகையாகப் பிரிக்கலாம். இலக்கிய வரலாறு அவரை விமர்சகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பதிவு செய்துகொண்டு அவரது மற்றவகைப் படைப்புகளைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. என்றாலும் நாவல்களும் மொழிபெயர்ப்புகளும் எண்ணிக்கையில் முதலிரு இடங்களைப் பெற்றுவிடுகின்றன. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் என்ற வரிசையில் எண்ணிக்கை வகையில் மற்ற படைப்புகள் அமையும். மொழி பெயர்ப்புகளில் பிறமொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குமானவை அடங்கும். … Continue reading

அவனுடைய நாட்கள்-வண்ணநிலவன்

கம்பெனிக்குப் போகும்போதே எதிரே ஆட்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கும் வேலை இல்லையென்பது தெரிந்து போயிற்று. வெங்கடேஸ்வரா கபே திருப்பத்திலேயே கம்பெனியிலிருந்து ஆட்கள் வந்து கொண்டிருந்ததை அவனும் ஆவுடையும் பார்த்து விட்டார்கள். பேசாமல் அப்படியே வீட்டுக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால் ஆவுடை வீட்டுக்குத் திரும்பவில்லை. அவள் வராவிட்டாலும் பரவாயில்லை. அவனையும் வீட்டுக்குப் போக விட மாட்டாள். சங்கரனுக்கு அம்மா மேல் கோபம் கோபமாக வந்தது. இன்றைக்கும் வேலை இல்லாமல் ஆட்கள் திரும்புகிறார்கள் என்றதுமே சங்கரனுக்குச் சந்தோஷமாக இருந்தது. ஆனால் … Continue reading

சிறைவாசம்-ஹெப்சிபா ஜேசுதாசன்

(‘புத்தம் வீடு’ புதினத்தின் அத்தியாயம் 5) வருஷங்கள் எப்படித்தான் ஓடி விடுகின்றன! வாழ்க்கை முறைதான் எப்படி எப்படி மாறி விடுகின்றது! சுயேச்சையாக ஓடியாடித் திரிந்து, நெல்லி மரத்தில் கல்லெறிந்து, குளத்தில் குதித்து நீச்சலடித்து, கூச்சலிட்டுச் சண்டை போட்டு, கலகலவென்று சிரித்து மகிழ்ந்து, எப்படி எப்படியெல்லாமோ இருந்த ஒரு குழந்தை பாவாடைக்கு மேல் ஒற்றைத் தாவணி அணிந்து கொண்டு, அது தோளிலிருந்து நழுவிவிடாதபடி இடுப்பில் இழுத்துக் கட்டிக் கொண்டு, கதவு மறைவில் பாதி முகம் வெளியில் தெரியும்படி குற்றவாளிபோல் … Continue reading

வழி – புதுமைப்பித்தன்

அன்று அலமிக்குத் தூக்கம் வரவில்லை. நினைவுகள் குவிந்தன. சொல்லமுடியாத சோகம் நெஞ்சையடைத்தது. மனக்குரங்கு கட்டுக்கடங்காமல் ஓடியது. தன்னருகில் இருந்த ஒற்றை விளக்கைச் சற்று தூண்டினாள். உடல் வியர்க்கிறது. தேகம், என்னமோ ஒருமாதிரியாக, சொல்ல முடியாதபடி தவித்தது. அவள் விதவை. நினைவு ஐந்து வருஷங்களுக்கு முன்பு ஓடியது. ஒரு வருஷம் சென்றது தெரியாதபடி வாழ்க்கை இன்பத்தின் முன்னொளி போலத் துரிதமாகச் சென்றது. பிறகு அந்த நான்கு வருஷங்களும் பிணிவாய்ப்பட்ட கணவனின் சிச்ருஷை என்ற தியாகத்தில், வாழ்க்கையின் முன்னொளி செவ்வானமாக … Continue reading

புதுப் பேய்-மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

13 மே 1916                                            நள சித்திரை 21 வேதபுரம் எலிக்குஞ்சு செட்டியார் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது. பெயர் காந்திமதி. பெண் நல்ல அழகு. சிவப்பு நிறம். முகத்தில் ஒரு மாசு மறு இல்லாமல் நிலா வீசும். மென்மையான பூங்கொடியைப் போல் இருப்பாள். இரண்டு மூன்று பாஷைகள் தெரியும். நேர்த்தியாகப் பாடுவாள். வீணை வாசிப்பாள். தினந்தோறும் வர்த்தமானப் பத்திரிகைகள் படித்து உலகத்தில் நடைபெறும் செய்திகளை வெகு நுட்பமாகத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வாள். யாரேனும் ஒரு மந்திரி, அல்லது ஒரு … Continue reading

தொலைவு – இந்திரா பார்த்தசாரதி

கும்பகோணத்தில் 1-7-1930-இல் பிறந்தவர். ‘இ.பா’ (இயற் பெயர் – ஆர். பார்த்தசாரதி) டில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர், வைணவ சித்தாந்தம் குறித்த ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். அறுபதுகளில் எழுதத் தொடங்கிய இவர் நாவல், சிறுகதை, நாடகம், இலக்கியத் திறனாய்வு ஆகிய பல துறைகளில் சாதனை புரிந்து ‘குருதிப்புனல்’என்னும் நாவலுக்காக 1978-இல் சாகித்ய அகாதமி விருது பெற்றார். நூலுருவில் பதினைந்துக்கு மேல் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. அங்கதச்சுவை பரிமளிக்கும் உரைநடை இவருடைய தனிச்சிறப்பு. ஆங்கிலம் மற்றும் … Continue reading