நுஃமானுக்கு விளக்கு விருது (2011)

இலக்கிய விமரிசகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்,பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் அவர்கள் 2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திறனாய்வு, மொழியியற்சிந்தனை, கவிதை, மொழிபெயர்ப்பு, கல்வித்துறை சார்ந்த கருத்தியல் உருவாக்கம் போன்ற பலதிறப்பட்ட பங்களிப்பைத் தமிழுக்குச் செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு பேராசிரியர் ராமசாமி, கவி சிபிச்செல்வன், எழுத்தாளர் சபாநாயகம் ஆகியோர் கொண்ட நடுவர்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நுஃமான் அவர்களை நடுவர்குழு தெரிவு செய்தது. பேராசிரியர் நுஃமான் முப்பது நூல்களுக்கு ஆசிரியர். … Continue reading

பிரபஞ்சனுக்கு சாரல் விருது 2013

  ஜேடி-ஜெர்ரி நிர்வகிக்கும் அறக்கட்டளை சார்பில், எழுத்தாளர்கள் மா.அரங்கநாதன், தேனுகா, ரவி சுப்பிரமணியன் ஆகியோரை நடுவராகக்கொண்டு வருடாவருடம் சாரல் விருது இலக்கிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு சாரல் விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் இந்த விருதைப் பெற்றவர்கள்: 2009- திலீப்குமார் 2010- ஞானக்கூத்தன் 2011-அசோகமித்திரன் 2012-வண்ணநிலவன், வண்ணதாசன் விழா ஜனவரி 26 சனிக்கிழமை நடைபெறுகிறது. அனைவரும் வருக. விழா அழைப்பிதழ்

36-வது சென்னை புத்தகக் கண்காட்சி -2013

சென்னையில் 36-வது புத்தகக் க‌ண்காட்சி வரு‌ம் ஜனவரி 11-ம் தேதி முதல் ஜனவரி 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் புத்தகக் காட்சி நடைபெற்றது.இப்போது அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் அங்கு கண்காட்சியை நடத்த முடியவில்லை.2013ஆ‌ம் ஆ‌ண்டு‌க்கான பு‌த்தக‌க் க‌ண்கா‌ட்‌சியை  நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்பயிற்சி கல்லூரி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இ‌ந்த க‌ண்கா‌ட்ச‌ி ஜனவரி 11-ம் தேதி … Continue reading