வந்தான்,வருவான்,வாராநின்றான் – நாஞ்சில்நாடன்

ஜீன்மாத மழையில் நனைந்து கொள்ளலாம் என மே மாத வெயில் சாலைகளையும் உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களையும் சாக்கு படுதாவும் பாலிதீன் கூரையும் வேய்ந்த குடிசைகளையும் ஓட்டுக்கூரை வரி வீடுகளையும் பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தது.அபூர்வமாய் தென்பட்ட மரங்களின் நாசித் துவாரங்களில் எல்லாம் தூசி அடைத்துக் கொண்டு வெயில் அதனை இறுக்கிக் கொண்டிருந்தது. காலை ஒன்பது மணி முதல் மதியம் இரண்டு மணி வரை வெயிலில் அலைவதென்பது அன்றாடம். தலையில் இருந்து மயிர்க்காடுகள் வழியாக நீரூற்றுக்கள் வழிந்தன. அன்று வெயில் … Continue reading

கனவு-அன்று-கனவு -அபி

கனவு-அன்று-கனவு எல்லாம் முடிந்துவிட்டது எனக் கடைசியாக வெளியேறிய போது கவனித்தான் பின்புலமற்ற தூய நிலவிரிவு ஒன்று அவனுக்காகக் காத்திருப்பதை கனவுபோன்று இருந்தாலும் கனவு அன்று அது ஒளியிலிருந்து இருளை நோக்கிப் பாதிவழி வந்திருந்தது அந்த இடம் கிழக்கும் மேற்கும் ஒன்றாகவே இருந்தன தூரமும் கூடத் தணிந்தே தெரிந்தது தெரிந்ததில் எப்போதாவது ஒரு மனிதமுகம் தெரிந்து மறைந்தது ஒரு பறவையும் கூடத் தொலைவிலிருந்து தொலைவுக்குப் பறந்துகொண்டிருந்தது சஞ்சரிக்கலாம் மறந்து மறந்து மறந்து மடிவுற்றிருக்கலாம் அதில் நடக்க நடக்க நடையற்றிருக்கலாம் … Continue reading

வறுமையிலும் வாழ்வைக் கொண்டாடிய கரிச்சான்குஞ்சு-ரவிசுப்ரமணியன்

தன் படைப்புகளை முன்நிறுத்தாது தன்னை முன்னிறுத்தும் போக்கு மலிந்த தமிழ்ச் சூழலில் தன் படைப்புகளின் மேன்மை வழியே தன்னை அறிந்துகொள்ளவைத்தவர் கரிச்சான் குஞ்சு. நம் காலத்தில் வாழ்ந்து மறைந்திருந்தாலும் கீழான வகைதொகைகளில் அவர் சிக்கிவிடவில்லை. கலைக்குள் இயங்குவதை ஒரு நோன்பென நோற்று ஆழமான அமைதியோடு படைப்புக்கு உண்மையாய் இருந்து அதற்குச் செழுமை சேர்த்தவர் கரிச்சான் குஞ்சு. அவரது படைப்புகளைத் தேடுபவர்களே கண்டடைய முடியும். அதனால் தான் அவர் போன்ற கலைஞர்களை, அவர்கள் வாழ்ந்த காலங்கடந்தே நாம் முழுமையாகக் … Continue reading

புவியீர்ப்புக் கட்டணம் – அ.முத்துலிங்கம்

கடிதத்தை உடைக்கும்போதே அவனுக்கு கை நடுங்கியது. அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும். இது மூன்றாவது நினைவூட்டல். மூன்று மாதங்களாக அவன் புவியீர்ப்பு கட்டணம் கட்டவில்லை. இப்போது உடனே கட்டவேண்டும் என்று இறுதிக் கடிதம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இந்த தொல்லை. அதற்கு முன் இப்படி விபரீதமான ஒரு துறை – புவியீர்ப்பு துறை – உண்டாகியிருக்கவில்லை. ‘அம்மையே!’ ‘சொல்லுங்கள், நான் உங்களுக்கு இன்று எப்படி உதவலாம்?’  ‘புவியீர்ப்பு கட்டணத்தை கட்டும்படி மீண்டும் நினைவூட்டல் கடிதம் … Continue reading

மா. அரங்கநாதன் நேர்காணல்

நேர்காணல்: ஆர்.சி.ஜெயந்தன்   படங்கள் : செழியன் ஓவியம்- ஜேகே உங்கள் கதைகளில் முத்துக்கருப்பன் என்ற பாத்திரம் தொடர;ந்து வருகிறது. உண்மையில் முத்துக்கருப்பன் யார்? ‘‘என்னால் விளக்கிச் சொல்ல முழயாத சில உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவதற்கு உதவி செய்கிறவன் முத்துக்கருப்பன். கதை என்றால் என்ன – கவிதை என்றால் என்ன என்று கேட்டால் சரியான பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அது என்னவென்று தொpந்தால் அது இனிமேல் இருக்காது இல்லையா? கடவுள் சமாச்சாரம்கூட அப்படித்தானே!’’ பிராமண … Continue reading

மைத்ரேயி – ஸில்வியா

பொய்சொல்லியாகிய நீ மைத்ரேயியை உன் கட்டுரையில் சாகக்கிடத்தியபோது மழை பிடித்துக்கொண்டது. சித்தப்பிரமையின்பாற்பட்ட அந்த மழை விடாமல் பெய்துகொண்டே இருந்ததை  ஏதேனும் சங்கேத மொழியில் பதிவு செய்ய நீ முடிவு செய்தாய். அரசாங்க அதிகாரிகள், நாய்கள், குடும்பிகள், மந்திரவாதிகள், தேசங்கள், கொரில்லாக்குரங்குகள், பெண்கள், இலக்கிய ஆசிரியர்கள், காமுகர்கள், குற்றவாளிகள், பாம்புகள், தத்துவ அறிஞர்கள், பேய்கள், ஆயுத வியாபாரிகள், அரசியல்வாதிகள், செருப்பு நக்கிகள், உளவியல் அறிஞர்கள், ஆகியோர் விளையாடும் விளையாட்டுக்களைப் பற்றிய கட்டுரை எழுதுமாறு நீ பணிக்கப்பட்டிருந்தாய். தமிழைத் தாய்மொழியாகக் … Continue reading

தம்பி – கௌதம சித்தார்த்தன்

என் யு.கே.ஜி பையன் ஆத்மார்த்தன் அன்றும் வழக்கம் போல தன் தம்பியைப் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தான். நான் உற்சாகம் முகத்தில் ததும்ப மெதுவாக ரசித்துக் கொண்டிருந்தேன். தம்பி ஸ்டூலில் அமர்ந்து வெட்கத்துடன் நகம் கடித்துக் கொண்டிருந்தான். அங்கு வந்த என் மனைவி எங்கள் பேச்சை அலட்சியம் செய்தவளாய் அனாயசத்துடன் ஸ்டூலைத் தூக்கினாள். உடனே, “அய்யய்யோ… அம்மா அம்மா, அதில தம்பி உக்காந்திருக்காம்மா…” என்று அலறியடித்துக் கொண்டு வந்து அவள் கைகளைப் பிடித்தான் ஆத்மா. “வேற வேலையே கெடையாதா … Continue reading

சி.சு.செல்லப்பாவின் அரிய புகைப்படங்கள்

                    நன்றி: சொல்வனம் புகைப்படங்கள் உதவி: செல்லப்பாவின் புதல்வர் திரு.செ.சுப்ரமணியம் ஒவியங்கள்: ஜேகே,  மருது