மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள் – அ.முத்துலிங்கம்

பச்சை, மஞ்சள், வெள்ளை பரிசாரகி உடையணிந்து நிற்பவள் ஓர் அகதிப் பெண்; இலங்கை அல்லது இந்தியப் பெண்ணாக இருக்கும். கயானாவாகக்கூட இருக்கலாம். கறுப்பு சருமம், கறுப்பு தலைமயிர், கறுப்பு கண்கள். அவள் உதட்டுச் சாயம், நகப்பூச்சுக்கூட கறுப்பாகவே இருந்தது. அவள் பெயர் நீளமாகவும் அதிக மெய்யெழுத்துக்கள் நிரம்பியதாகவும் இருந்திருக்கக்கூடும். அதைச் சுருக்கி ‘ரத்ன’ என்று தன் உடையின் ஒரு பக்கத்தில் குத்தி வைத்திருந்தாள். பரிசாரகப் பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுத்ததுபோல அவள் மேசைக்கு சற்று தூரத்தில் நின்றாள். … Continue reading

ஞானக்கூத்தன்-நேர்காணல்

“ஒரு மொழிக்கு 50 வருஷம் என்பது மிகக் குறைந்த காலம்” – சந்திப்பு : குவளைக்கண்ணன் புதுக்கவிதைன்னு பேர் வந்து ஐம்பது வருஷம் ஆகுது. இது ஏன் கொண்டாடப்படணும்னு நினைக்கிறீங்க? தமிழ் இலக்கியத்துல பெரிய இயக்கங்கள் நடந்திருக்கு. சங்க இலக்கியம்னு சொல்றோமே அதெல்லாம் இயக்கமாத்தான் ஆரம்பிச்சிருக்கு, ஆனா யாரு அதை ஆரம்பிச்சாங்கன்னு தெரியாது. குறிப்பு உள்ளடக்கமெல்லாம் வெண்பாவுலதான் எழுதத் தொடங்கியிருக்காங்க. அப்புறம் ஆசிரியப்பாவுல எழுதறாங்க, அத ஏன் செஞ்சாங்கன்னு தெரியாது. அப்புறம் சங்க இலக்கியம் நலிவடைஞ்சு பக்தி … Continue reading

நீல.பத்மநாபன்-நேர்காணல்

தமிழில் மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான நீல. பத்மநாபன் தமிழில் ஓர் அசலான படைப்பாளி. இதுவரை ”தலைமுறைகள்’” ”தேரோடும் வீதி” ”பள்ளிக் கொண்டபுரம்” ”உறவுகள்” உள்ளிட்ட இருபது நாவல்களும், 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். இதில் ஒரு நாடகத்தையும் சேர்த்துக் கொள்வது அவசியம். 2004-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்ற இவர், தமிழிலிருந்து ஆங்கிலம், மலையாளத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்ப்புகளிலும் இயங்கி வருகிறார். திருவனந்தபுரத்தில் 1938-ல் பிறந்த நீல.பத்மநாபன் மின்வாரியத்துறையில் இன்ஜினீயராக இருந்து … Continue reading

தேவதேவன் – நேர்காணல்

‘சிற்பி இலக்கிய விருது’ பெற்றுள்ள தேவதேவனின் இயற்பெயர் பிச்சுமணி கைவல்யம்.வயது 51.ஆசிரியராக பணிபுரிகின்றார்.அம்ருதா , அரவிந்தன் என்று இரண்டு குழந்தைகள். பள்ளியிறுதிவரை படித்தபின் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார்.வேலை கிடைக்காத்தினால் தன் வீட்டின் ஒரு பகுதியிலே அச்சகம் வைத்து நடத்தினார்.அதிகமான அறிமுகம் இல்லாத நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் வீட்டை பிணையாக்கினார். கடன் வாங்கிய நண்பர் ஒடிப்போனபின் வங்கி அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு , நீதி மன்றத்திற்கு அலைந்து இறுதியாக பெருந்தொகை கொடுத்து தன் வீட்டை பிணையிலிருந்து மீட்டார். … Continue reading

அசோகமித்திரன் – நேர்காணல்

தமிழ் இலக்கியவெளியில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆளுமை அசோகமித்திரன். சாகித்ய அகாதெமி விருது (1996) டால்மியா மத நல்லிணக்க விருது (1995) தேவன் விருது (1997) என்று பல விருதுகள் பெற்றவர். இதில் டால்மியா விருதை அன்னை தெரசா வழங்கி கெளரவித்தார். எழுபத்தைந்து வயதைத் தாண்டியும் பங்களிப்பு செய்பவர். தண்டீஸ்வர் நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் தீராநதிக்காக சந்தித்தோம். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட அவரின் பேச்சில் மையப் புள்ளியாக Non violence கருத்து … Continue reading

ஒரு புளியமரம்-ஆத்மாநாம்

ஒரு புளியமரம் ஒரு புளியமரம் சமீபத்தில் என் நண்பனாயிற்று தற்செயலாய் அப்புறம் நான் சென்றபோது நிழலிலிருந்து ஒரு குரல் என்னைத் தெரிகிறதா திடுக்கிட்டேன் அப்புளியமரம் கண்டு நினைவிருக்கிறதா அன்றொரு நாள் நீ புளியம்பழங்கள் பொறுக்க வந்தபோது என் தமக்கையின் மடியின் அயர்ந்துபோனாய் அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே உன் முகத்தில் உடலில் எங்கும் வா எப்படியும் என் மடிக்கு. -o00o- அந்தப் புளியமரத்தை நேற்றிலிருந்து அந்தப் புளியமரத்தை வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் முதலில் புளியமரத்தின் உச்சியை அடைந்தார்கள் சிறிய சிறிய … Continue reading

பாவண்ணன்-நேர்காணல்

பாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் (1958). பதின்மூன்று சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் இரண்டு குறுநாவல்களும் மூன்று கவிதைத்தொகுதிகளும் பதினைந்து கட்டுரைத்தொகுதிகளும் இரண்டு குழந்தைப்பாடல் தொகுதிகளும் இவருடைய சொந்தப் படைப்புகள். வேலையின் காரணமாக தனது இருபத்து நான்காவது வயதில் கர்நாடக மாநிலம் சென்றார். சென்ற ஆரம்ப காலத்திலேயே சுயமாக கன்னட மொழியைக் கற்றுக்கொண்டார். ஆச்சரியிக்கத்தக்க வகையில் நான்கு நாவல்கள், நான்கு நாடகங்கள், இரண்டு தலித் சுயசரிதைகள், ஒரு சிறுகதைத் தொகுதி, கன்னட தலித் எழுத்துகளைப் பற்றிய ஓர் அறிமுக … Continue reading