மனிதனும் பறவையும்-ராஜமார்த்தாண்டன்

மனிதனும் பறவையும் சாலையோரம் கிடக்கிறது அந்தக் காக்கை அனாதைப் பிணமாக. சற்று முன்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் அதன் மரணம். விபத்தா? எதிரிகளின் தாக்குதலா? இயற்கை மரணமா? எதுவென்று தெரியவில்லை. மரக்கிளைகளில் மதில்சுவர்களில் கரைந்திரங்கல் தெரிவித்து கலைந்து போயிற்று உறவுக்கூட்டம் அனாதையாகக் கிடக்கிறது அது. சற்று முன்னதாக ஏதேனும் வீட்டு வாசலில் அல்லது கொல்லை மரக்கிளையில் உறவின் வருகையறிவித்து அதற்கான உணவை யாசித்திருக்கலாம். செத்துக்கிடந்த எலியை இனத்துடன் சேர்ந்து கொத்திக் குதறியிருக்கலாம். மைனாக் குருவியை விரட்டிச் சென்றிருக்கலாம். கருங்குருவியால் … Continue reading

பகல் உறவுகள் – ஜெயந்தன்

காலை மணி ஒன்பது.கதவைப் பூட்டிக்கொண்டு அவர்கள் இருவரும் தெருவில்இறங்கினார்கள்.அந்தக் கனம் அவர்கள் இருவருக்குமிடையேயுள்ள அந்த ஒப்பந்தம் அமலுக்குவந்தது. அது தினசரி வழக்கம். டெரிகாட்டன் பேண்ட்,டெரிலின் சட்டை,கூலிங்கிளாஸ், மிடுக்கான நடை இவையோடுஅவனும்.கலர் மேச் ஆகின்ற உல்லி உல்லி சேலை,ஃபுல்வாயில் ஜாக்கெட்,செருப்பு,கைப்பைஇவையுடன் அவளும். அந்த ஜோடி நடை தினம் வேடிக்கைப் பார்க்கப்படுகின்ற ஒன்று. கடந்தமூன்று வருடங்களாக அவர்கள் அப்படித்தான் புறப்படுகிறார்கள்,வந்து சேருகிறார்கள் என்றாலும்சிலரது கவனத்தை இன்னமும் ஈர்க்கத் தவறாத ஒன்று. சிலருக்கு அவர்கள்மேல் பொறாமைகூட,குறிப்பாக அவள்மேல். ஏனென்றால் அவள் உள்ளூர்க்காரி.’அட,சின்னப்பிள்ளையில் … Continue reading

காலவழுவமைதி-ஞானக்கூத்தன்

காலவழுவமைதி “தலைவரார்களேங்… தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம். தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த் தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம் கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம் காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்” ‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’ “வளமான தாமிழர்கள் வாட லாமா? கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா? தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக் கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய் நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர் தலைவரார்களேங் பொதுமாக்களேங் நானின்னும் யிருகூட்டம் … Continue reading