அசோகமித்திரன் – நேர்காணல்

தமிழ் இலக்கியவெளியில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆளுமை அசோகமித்திரன். சாகித்ய அகாதெமி விருது (1996) டால்மியா மத நல்லிணக்க விருது (1995) தேவன் விருது (1997) என்று பல விருதுகள் பெற்றவர். இதில் டால்மியா விருதை அன்னை தெரசா வழங்கி கெளரவித்தார். எழுபத்தைந்து வயதைத் தாண்டியும் பங்களிப்பு செய்பவர். தண்டீஸ்வர் நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் தீராநதிக்காக சந்தித்தோம். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட அவரின் பேச்சில் மையப் புள்ளியாக Non violence கருத்து … Continue reading

எழுதிக்கொண்டே இருந்த க.நா.சு – அசோகமித்திரன்

க.நா.சு.100 புத்தக அறிமுகம் எழுதிக்கொண்டே இருந்த க.நா.சுப்பிரமணியம் கி.அ.சச்சிதானந்தம்  வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை – 600017. விலை – ரூ75/- மன்ச்சி மனுஷிக்கு ம -ரணமே சாட்சி’ என்று ஒரு பழமொழி தெலுங்கில் உண்டு. எல்லா நல்லவர்களுக்கும் அனாயாச மரணம் கிடைப்பதில்லை. ஒரு குழந்தையுடையது போன்ற மனது கொண்ட பாரதியார் கடைசி நாட்களில் ஒரு நொடிப்போதாவது ‘காலா, நீ உடனே வா’ என்று எண்ணியிருக்கக் கூடும். செப்டம்பர் 12-ஆம் தேதி வரை அவர் உடலில் உயிர் … Continue reading

அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் – அசோகமித்திரன்

ஸ்ரீராமுக்கு வயது இருபத்தொன்று நடந்துகொண்டிருந்தது. பி. ஏ. பரிக்ஷை எழுதியிருந்தான். பரிக்ஷை முடிவுகள் ஜூன் மாதத்தில் வரும். நடந்து கொண்டிருந்தது ஏப்ரல் மாதம். ராமஸ்வாமி ஐயர் ஸ்ரீராமின் அடுத்த வீட்டுக்காரர். மருந்துக் கம்பெனி ஒன்றில் குமாஸ்தாவாக இருந்தார். அவருக்கு ஐந்து குழந்தைகள். முதல் மூன்றும் பெண்கள். அப்புறம் நான்கு வயதில் ஒரு பிள்ளை. கடைசியாக ஒரு பெண். அது பிறந்து ஒன்பது மாதங்கள்தான் ஆகியிருந்தன. ஸ்ரீராம் ஒரு ஆங்கில தினசரிக்குச் சந்தாதாரர். பத்திரிகை தினமும் காலை ஆறு … Continue reading

>காந்தி – அசோகமித்திரன்

> அன்று காபி அவனுக்கு மிகவும் கசப்பாக இருந்தது. கசப்பு அவனுக்கு என்றுமே பிடித்தமானதொன்று. பத்து நண்பர்களோடு இருக்கும்போதுகூட ‘பத்து கப், ஒன்றில் மட்டும் சர்க்கரை இல்லாமல்’ என்று அவன்தான் காபி கொண்டு வருபவனிடம் கூறுவான். அந்தக் காபியைக் குடிப்பதில் ஆரம்ப நாட்களில் இருந்த பெருமை விலகிப் போய், அதுவே பழக்கமாகப் போய்விட்டு  வெகு நாட்களாகியும், அன்றுதான் காபியின் கசப்பை கசப்பாக, ருசிக்கத்தக்கதல்லாததாக உணர முடிந்தது. ‘சர்க்கரை கொண்டு வா’ என்று சொல்லத் திடமில்லாமல் கோப்பையில் பாதிக்கு … Continue reading

>கண்ணாடி-அசோகமித்ரன்

> டிசம்பர் குளிருக்கு அந்தக் கோட்டு மிகவும் இதமாக இருந்தது. ஏனோ தினமும் அதைப் போட்டுக் கொள்ள முடிவதில்லை. கோட்டைப் போட்டுக் கொண்டு செருப்புக் காலுடன் வெளியே போனது கிடையாது. ஆதலால் பூட்ஸ். ஆனால் அந்தப் பூட்ஸைப் போட்டுக்கொள்ளும்போதே சுண்டுவிரல் வலித்தது. அரை மைல் நடந்து, நகர ஆரம்பித்துவிட்ட பஸ் பின்னால் ஓடி அதில் தொத்திக் கொண்டதும் வலி பொறுக்க முடியாத அளவுக்குப் போய்விட்டது. இவ்வளவிற்கும் அந்த பூட்ஸ் நான் குறைந்தது இரண்டாண்டு காலம் தினமும் போட்டுக்கொண் … Continue reading

>எலி-அசோகமித்திரன்

> இரண்டாவது நாளாக இப்படிச் செய்ததில் கணேசனுக்கு மிகவும் கோபம் வந்தது. இன்றைக்கும் இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு ஒன்றையும் மீதம் வைக்காமல் சமையலிடத்தை ஒழித்துப் போட்டு அவன் வீட்டுப் பெண் மணிகள் படுத்துவிட்டார்கள். அப்படி ஒன்றும் விவரம் தெரியாதவர்களில்லை. அக்காவுக்கு ஐம்பது வயதாகிறது. மனைவிக்கு நாற்பது முடியப்போகிறது. மகளுக்குப் பதிமூன்று வயது வரப்போகிறது. ஒரு தோசைத் துண்டு, ஒரு அப்பளத்துண்டு, ஒரு தேங்காய்ச் சில்லு கிடையாது. எலிப் பொறிக்கு எதை வைக்கிறது ? எக்கேடு கெட்டுப் போங்கள் … Continue reading

எண்கள் – அசோகமித்ரன்

இந்த ஆள் எப்போ முடிப்பார்னு தெரியலை. தினம் இந்த மாதிரிதான் ஆயிடறது. ஒவ்வொருநாளும் கொஞ்சம் முன்னாலே வந்து பேப்பரை முழுக்கப் பாத்துட்டுப் போகலாம்னா நாம வரத்துக்குள்ளே நாலு பேராவது ஏற்கனவே வந்துடறாங்க. இவங்க வீடெல்லாம் பக்கத்திலேயே இருக்கோ என்னவோ. இந்த ஆள் வீடு ரொம்பப் பக்கத்திலே இருக்கணும். ரொம்ப ரொம்பப் பக்கத்திலே இருக்கணும். இந்தச் சாலையிலே இரண்டு சாரிலேயும் ஒரே பாங்குகளும் கடைகளுந்தான் இருக்கு . இந்தப் பாங்குகளையும் கடைகளையும் எட்டு மணிக்குத்தான் திறக்கிறான். இந்த ஒரு … Continue reading

>விழா மாலைப் போதில்- அசோகமித்திரன்

> அறை வெளியே நிறைய நடமாட்டம் கேட்டது. நான் வெளியே வந்தேன். ஒரு அதிகாரி என்னைத் தடுத்து நிறுத்தி, ”இனாகுரேஷனுக்கு முந்தி ஒரு இன்டர்வியூவும் கிடையாது என்று உனக்குத் தெரியாது? உன் கார்டைத் தடுத்து நிறுத்தி விடுகிறேன் பார், நீ ·பெஸ்டிவல் உள்ளேயே நுழைய முடியாது” என்றான். அப்போது புடைசூழ ஜெயதேவியும் வெளியே வந்தாள். என்னைப் பார்த்து, ”மறக்காதீங்க சார். கட்டாயம் ஹோட்டலுக்கு வாங்க” என்று சொல்லிவிட்டு என்னைக் கடந்து போனாள். அந்த அதிகாரி அவளைப் பின் … Continue reading

>பிரயாணம் – அசோகமித்திரன்

>       மீண்டும் முனகல் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் குருதேவரின் கண்கள் பொறுக்க முடியாத வலியினால் இடுங்கியிருந்தன. அவரைப் படுக்க வைத்து நான் இழுத்து வந்த நீளப் பலகை நனைந்திருந்தது. ஒரே எட்டில் அவரிடம் சென்றேன். “இனிமேலும் முடியாது” என்றார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த நேரத்தில் ஆகாயத்தில் ஒரு வெள்ளைக் கீறல் கூட இல்லை. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்துகிடந்த மலைச்சாரலைச் சிறுசிறு மேகங்கள் அணைத்தபடி இருந்தன. நாங்கள் நடந்து வந்த … Continue reading

>காலமும் ஐந்து குழந்தைகளும்- அசோகமித்திரன்

>   அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம் இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து விட்டது. ”ஹோல்டான்! ஹோல்டான்!” என்று கத்தியபடி முன்னே பாய்ந்தான். கைப்பெட்டி அவ்வளவு உபாதைப் படுத்தவில்லை. ஆனால் தோளிலிருந்து தொங்கிய கான்வாஸ் பைதான் பயங்கரமாக அங்குமிங்கும் ஆடி, அவனை நிலை தடுமாற வைத்துக்கொண்டிருந்தது. அந்தப் பையில் ஓர் அலுமினியத் தம்ளரை ஓர் ஓரத்தில் இடுக்கியிருந்தான். அது அவன் விலா எலும்பைத் தாக்கியவண்ணம் இருந்தது. பை … Continue reading