கவிஞர் அபி – நேர்காணல்

சமரசம் – ஜனவரி 2000 இதழிலிருந்து ‘அபி ‘ என்கிற கவிஞரின் இயற்பெயர் ஹபீபுல்லா. சொந்த ஊர் போடிநாயக்கனூர். மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கிறார். (வரும் மே மாதம் 2000- இல் ஓய்வு பெறுகிறார்). லா.ச.ராவின் நாவல் உத்திகளை ஆய்வு செய்து, ‘டாக்டர் பட்டம் பெற்றார். இருபத்தைந்து ஆண்டுகளாக எழுதிவரும் அபியின் கவிதைகள் மூண்று தொகுதிகளாய் வெளிவந்துள்ளன. 1. மெளனத்தின் நாவுகள். (1974) 2. அந்தர நடை (1978) 3. என்ற ஒன்று … Continue reading

கனவு-அன்று-கனவு -அபி

கனவு-அன்று-கனவு எல்லாம் முடிந்துவிட்டது எனக் கடைசியாக வெளியேறிய போது கவனித்தான் பின்புலமற்ற தூய நிலவிரிவு ஒன்று அவனுக்காகக் காத்திருப்பதை கனவுபோன்று இருந்தாலும் கனவு அன்று அது ஒளியிலிருந்து இருளை நோக்கிப் பாதிவழி வந்திருந்தது அந்த இடம் கிழக்கும் மேற்கும் ஒன்றாகவே இருந்தன தூரமும் கூடத் தணிந்தே தெரிந்தது தெரிந்ததில் எப்போதாவது ஒரு மனிதமுகம் தெரிந்து மறைந்தது ஒரு பறவையும் கூடத் தொலைவிலிருந்து தொலைவுக்குப் பறந்துகொண்டிருந்தது சஞ்சரிக்கலாம் மறந்து மறந்து மறந்து மடிவுற்றிருக்கலாம் அதில் நடக்க நடக்க நடையற்றிருக்கலாம் … Continue reading