>விமலாதித்த மாமல்லனின் சிறுகதைகள்-ஆத்மாநாம்

> இன்றைக்கு எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறுகதைக்கு அறிமுகமாயிருக்க வேண்டும். அந்த அளவுக்கு பெரும்பத்திரிகைகள் கவர்ச்சி அரசியல் சினிமா மதம் மற்ற மசாலா அம்சங்களோடு வணிக இலக்கியத்தை காலம் தவறாது ஒரு உபாதையை நீக்கிக்கொள்வதுபோல் செயல் பட்டு வருகின்றன. இந்தப் போக்குகளிலிருந்து விடுபட்டு ஒரு ஈடுபாட்டுடன் கலை இலக்கியத்தைப் படைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலரே. அப்படி உள்ளவர்களுக்கு இலக்கியத்தை செழுமைப்படுத்துவதுதான் முதல் நோக்கமாக இருக்கிறது. அவர்கள் வாழும் ஒவ்வொரு கணத்திலிருந்தும் … Continue reading

>போய்யா போ – ஆத்மநாம்

>   போய்யா போ நான் ஒரு கெட்டவன் நான் பீடி குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் இலைச்சுருள் குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் ஒரு சிகரெட் குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் பில்டர் சிகரெட் குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் பில்டர் கிங்ஸ் குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் சுருட்டு குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் பைப் குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் மூக்குப்பொடி போடுபவன் … Continue reading

>ஆத்மாநாமின் ஆத்ம தரிசனம்

> பாரதிராமன் ஒரு கவிஞனின் படைப்புகள் எல்லாம் அவனுடைய சுயத்தின் வெளிப்பாடுகளே.தன்னைத்தானே தரிசித்துக்கொள்ளும் அவன் பிறருக்கும் தன்னை தரிசனப்படுத்துகிறான்.எனினும் பார்க்கும் அனைவருக்கும் இத்தோற்றங்கள் ஒரேமாதிரி அமைவதில்லை, அக்கவிஞனுக்கு உள்பட ‘ கொள்கைகளைப் பற்றிய அதிகப்படிப்பு இவருக்கு இல்லாததால் வாழ்வில் சொந்த அனுபவங்களிலிருந்துமட்டுமே கவிதை எழுதுகிறார். ஒவ்வொரு கவிதையும் புதிதாகப் பிறக்கும் பச்சைக் குழந்தையைப்போல. அதனால் கவிதைகளைக் குத்திக் கிளறிப் பார்க்காமல் ஆர்வத்தோடு நாசூக்காக ஏன் எப்படி எவ்வாறு என்று கேள்விகளுடன் அணுகிவந்தால் அதன் முழு வர்ணங்களும் தெரிய … Continue reading

>ஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்-குவளைக் கண்ணன்

> குவளைக் கண்ணன் ”கவிதை என்று பிரிக்க முடியாது. கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக்கொண்டு விடுகிறது. கவிதையானது என்றைக்குமே தனது இருப்பை மொழியின் மீதோ அல்லது அதனைப் பேசும் மக்கள் மீதோ திணித்ததில்லை. திணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை.’” மேற்கூறிய வாசகங்கள் ஆத்மாநாமுடையவை. பெருநகர்களில் தனிமனித இருப்பு சார்ந்த நெருக்கடியைத் தெரிவிக்கிற, ஒரு செடியின் இருப்பு வழியாக மனித இருப்பின் அடிப்படைச் சிக்கலை விளக்கிக்கொள்ள முயல்கிற, … Continue reading

>ஏதாவது செய்-ஆத்மாநாம்

> ஆத்மாநாம் ஏதாவது செய் ஏதாவது செய் உன் சகோதரன் பைத்தியமாக்கப்படுகிறான் உன் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள் சக்தியற்று வேடிக்கை பார்க்கிறாய் நீ ஏதாவது செய் ஏதாவது செய் கண்டிக்க வேண்டாமா அடி உதை விரட்டிச் செல் ஊர்வலம் போ பேரணி நடத்து ஏதாவது செய் ஏதாவது செய் கூட்டம் கூட்டலாம் மக்களிடம் விளக்கலாம் அவர்கள் கலையுமுன் வேசியின் மக்களே எனக் கூவலாம் ஏதாவது செய் ஏதாவது செய் சக்தியற்று செய்யத் தவறினால் உன் மனம் உன்னைச் … Continue reading

>குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்-ஆத்மாநாம்

> ஆத்மாநாம் ஹலோ என்ன சௌக்கியமா இப்பொழுது புதிதாக என்ன விளையாட்டுக் கண்டுபிடித்துள்ளாய் உன்னுடைய குஞிச்ட்ணீ எப்படி இருக்கிறது பூச்செடிகளுக்கிடையே புல்தலைகளின் மேல் நெடிய பசும் மரங்களின் கீழ் சுற்றிலும் வண்ணாத்திப்பூச்சி மரச்சுவர்களுக்கிடையே சிவப்பு வீட்டின் உள்ளேயிருந்து ஷிநீணீனீஜீ எட்டிப் பார்க்கிறான் வெளியே பழுப்புநாய் இருந்தான் என்ன விஷயமென்று குஞிச்ட்ணீ வெளியே வந்தான் தெரியாதா நம்முடைய கூட்டம் மரத்தடியில் சீக்கிரம் வந்துவிடு என்றான் பலவர்ண நாய்களுக்கிடையே தாவி நுழைந்தான் கேட்டது ஒரு கேள்வி எங்கள் தலைவனை கௌரவிக்க … Continue reading

>ஆத்மாநாம்

> பிரக்ஞை பூர்வமாக எதிர் கவிதை எழுதியவர்களில் ஆத்மாநாம் முதன்மையானவர். அவரின் சமூகக் கவிதைகளிலும் சரி, நம்பிக்கையின்மைக்கு மத்தியிலும் சரி, ஒரு மெல்லிய கீற்றாக நம்பிக்கை துளிர்த்து நிற்கிறது. ஆத்மாநாமின் இயற்பெயர் எஸ்.கே. மதுசூதனன். 1951ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி பிறந்தவர். 1978இல் மனநலத்தாக்குதல் ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஆத்மாநாம் 1983 ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். ஆனால் பின்பு பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த அவர் 6_7_1984_ல் கிணற்றில் … Continue reading

>முத்தம்-ஆத்மாநாம்

> ஆத்மாநாம் முத்தம் கொடுங்கள் பரபரத்து நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கையில் உங்கள் நண்பி வந்தால் எந்தத் தயக்கமும் இன்றி இறுகக் கட்டித் தழுவி இதமாக தொடர்ந்து நீண்டதாக முத்தம் கொடுங்கள் உங்களைப் பார்த்து மற்றவர்களும் அவரவர் நண்பிகளுக்கு முத்தம் கொடுக்கட்டும் விடுதலையின் சின்னம் முத்தம் முத்தம் கொடுத்ததும் மறந்துவிட்டு சங்கமமாகிவிடுவீர்கள் பஸ் நிலையத்தில் ரயிலடியில் நூலகத்தில் நெரிசற் பூங்காக்களில் விற்பனை அங்காடிகளில் வீடு சிறுத்து நகர் பெருத்த சந்தடி மிகுந்த தெருக்களில் முத்தம் ஒன்றுதான் ஒரே வழி … Continue reading

>என் ரோஜாப் பதியன்கள்-ஆத்மாநாம்

> ஆத்மாநாம் என்னுடைய இரண்டு ரோஜாப்பதியன்களை இன்றுமாலை சந்திக்கப் போகிறேன் நான் வருவது அதற்குத் தெரியும் மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள் பரபரத்து என்னை வரவேற்கத் தயாராவது எனக்குப் புரிகிறது நான் மெல்லப் படியேறி வருகிறேன் தோழமையுடன் அவை என்னைப் பார்க்கின்றன புன்னகைத்து அறைக்குள் நுழைகிறேன் செருப்பைக் கழற்றி முகம் கழுவி பூத்துவாலையால் துடைத்துக் கொண்டு கண்ணாடியால் எனைப்பார்த்து வெளி வருகிறேன் ஒரு குவளைத் தண்ணீரைக் கையிலேந்தி என் ரோஜாப் பதியன்களுக்கு ஊற்றுகிறேன் நான் ஊற்றும் நீரைவிட … Continue reading