ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு முன்னுரை-இ.பா

ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு”  – இந்திரா பார்த்தசாரதி முன்னுரை ‘கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவே இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போடலாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும், சோர்வுகளையும், ஆரோகண அவரோகங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்.’ ‘முதலில் இரவு வரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில், ஆதவன் தம்முடைய சிறுகதைகளைப் … Continue reading

தொலைவு – இந்திரா பார்த்தசாரதி

கும்பகோணத்தில் 1-7-1930-இல் பிறந்தவர். ‘இ.பா’ (இயற் பெயர் – ஆர். பார்த்தசாரதி) டில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர், வைணவ சித்தாந்தம் குறித்த ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். அறுபதுகளில் எழுதத் தொடங்கிய இவர் நாவல், சிறுகதை, நாடகம், இலக்கியத் திறனாய்வு ஆகிய பல துறைகளில் சாதனை புரிந்து ‘குருதிப்புனல்’என்னும் நாவலுக்காக 1978-இல் சாகித்ய அகாதமி விருது பெற்றார். நூலுருவில் பதினைந்துக்கு மேல் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. அங்கதச்சுவை பரிமளிக்கும் உரைநடை இவருடைய தனிச்சிறப்பு. ஆங்கிலம் மற்றும் … Continue reading

எழுத்தாளுமைகள் பற்றிய ரவிசுப்ரமணியனின் ஆவணப்படங்கள்

1. ஜெயகாந்தன்:எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் “ஒரு எழுத்தாளனை எதற்காக ஆவணப்படம் எடுக்க வேண்டும்? அவனுக்காக அவனது எழுத்துக்கள் பேசும். அவன் போனபின்னும் அவை பேசிக் கொண்டிருக்கும். கலைஞனின் சொற்கள் அழியாது. தன் ஆக்கங்களில் பேசியவற்றுக்கு அப்பால், அவன் ஒரு பேட்டியிலோ அல்லது ஆவணப்படத்திலோ ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை. இலக்கியம் சார்ந்த நோக்கில் இத்தகைய ஆவணப்படுத்தல்களுக்கு எந்த இடமும் இல்லை. ஆனால் நமக்கு இலக்கியவாதி என்ற ஆளுமை தேவைப்படுகிறது.  வள்ளுவரும் கம்பனும் எப்படி இருந்தார்கள் என நாம் அறிவதில்லை. … Continue reading

அவஸ்தைகள்-இந்திரா பார்த்தசாரதி

சாமான்களை சரிபார்த்து, நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு, என் சீட்டில் உட்காரப் போனபோதுதான் அவரை கவனித்தேன். பவளம் போன்ற திருமேனி. என் உள்ளுணர்வு சொல்லிற்று, வயது அறுபத்தைந்திருக்கலாமென்று. ஆனால் கண், கண்ட வயது ஐம்பது. நிரந்தர ‘ஸினிஸிஸ’த்தின் நிழற் கீற்றாய் படிந்த ஏளனப்   புன்னகை. கை விரல் ஒன்பதில் ஒவ்வொரு கல்லென்று நவரத்தின மோதிரங்கள். அவர் அணிந்திருந்த உடையும், அவருடைய தோற்றமும் அவரை ஹிந்தி மாநிலத்தவர் என்று அறிவித்தது. தும்மைப் பூ போல் பளீரென்ற வேட்டி, குர்த்தா. அவர் … Continue reading

>கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்-இந்திரா பார்த்தசாரதி

> சிலப்பதிகாரத்தைப் பற்றி ஒரு மிகப் பெரிய தமிழ்ப் பேராசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்படியான சோதனை எனக்கு ஒரு தடவை ஏற்பட்டது. அவர் எழுதியிருந்தார்: ‘கண்ணகி பழங்குடிமகளிர் வழி வந்த பச்சைத் தமிழ்ப்பெண். மழலைப் பருவத்திலேயே தமிழிப் பண்பாம் கற்பு நெறி உணர்ந்த பொற்பின் செல்வி. எல்லாக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற ஆரணங்கு….. ‘ ‘மழலைப் பருவத்திலேயே தமிழ்ப் பண்பாம் கற்புநெறி உணர்ந்த பொற்பின் செல்வி ‘ என்ற வரிதான் எனக்கு மிகவும் … Continue reading

>இ.பா: நெடுவழிப் பயணம்-எஸ்.ரா

> இந்திரா பார்த்தசாரதி கதாவிலாசம் ஊர் சுற்றிகளின் மீது எனக்கு எப்போதுமே தனி ப்ரியம் உண்டு. அதிலும், நெடுஞ்சாலை திறந்து கிடக்கிறது என்பதால், நோக்கமற்று எங்குவேண்டுமானாலும் சுற்றித் திரியும் மனிதர்கள் வரம் பெற்றவர்கள்! ருஷ்யாவின் புகழ்பெற்ற தத்துவஞானியான குர்ஜீப், ஒரு ஊர்சுற்றி! அவரும் அவரது நண்பர்களும் மனம் போன போக்கில் சுற்றி அலைவார்கள். போகுமிடங்களில் என்ன கிடைக்கிறதோ, அவற்றை வாங்கி பிளாட்பாரத்தில் கடை போட்டு விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை ஈட்டிக்கொண்டு, அடுத்த ஊருக்குப் புறப்பட்டுச் … Continue reading

இ.பா……. எண்பது!-பாரதி மணி

என் ஐம்பதுவருட நண்பர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு எண்பது வயதாகிறது. சென்ற ஜூலை மாதம் 9-ம் தேதி உயிர்மை பதிப்பகமும் மணற்கேணியும் இணைந்து நடத்திய கருத்தரங்கிலும், அடுத்தநாள் TAG Centre-ல் இ.பா. குடும்பத்தினர் சேர்ந்து கொண்டாடிய விழாவிலும், தன் நீண்ட, பயனுள்ள வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், இளமைத்துடிப்புடனும் தன் நியதிப்படி வாழ்ந்த ஒரு நல்ல மனிதரைப்பார்க்க முடிந்தது. இ.பா. நண்பர்களிடம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பழகுவார். அவருக்கு யாரும் விரோதிகளில்லை. ‘இலக்கிய அரசியல்’ இல்லாதவர். எதற்கும் விட்டுக்கொடுக்காதவர். தமிழக … Continue reading

>ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி

> ராஜப்பா திடீரென எழுந்து உட்கார்ந்தான். அவன் உடம்பு வியர்வையினால் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த பழுப்பேறிய சாயத் துண்டினால் முதுகைத் துடைத்துக்கொண்டான். என்ன விசித்திரமான சொப்பனம். ’வனாந்திரமான இடம். பாம்புப் புற்று போல் ஓங்கி வளர்ந்திருந்த மண்மேடிட்ட பெரிய குகைகள். அவன் தனியாக அந்தப் பிரதேசத்தின் வழியாகப் போய்க் கொண்டிருக்கிறான். அங்கு நிலவிய நிசப்தம் ஒரு பாரமாகச் சூழ்ந்து அவன் நெஞ்சை அழுத்தியது. குகைகளிலிருந்து பாம்புகள் புறப்பட்டுத் தன்னைத் தாக்க வருமோ என்ற பயம் அவனை வேகமாக … Continue reading

>எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது

>   நேற்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.  இந்த வருடன் 130 பேர் பத்ம விருது பெறுகின்றனர். 6 பேர் பத்மவிபூஷன் விருது பெறுகிறார்கள்; 43 பேர் பத்மபூஷன் விருது பெறுகிறார்கள்; 81 பேர் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்கள். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் ஜாம்பவனான எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி (வயது 80) கும்பகோணத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கநாதன் பார்த்தசாரதி. கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழில் பட்டம் … Continue reading