வீடியோ மாரியம்மன்-இமையம்

“எதுக்குடா பயலெ அடுப்புக்கட்டிகிட்ட வந்து ஏறிகிட்டு நிக்குறவன்?” “பாயி கொடு.” “பாயி இல்லெ.” “ஊருல இருக்கிற எல்லாப் பசங்களும் எடுத்துகிட்டுப் போறாங்க இல்லெ.” “போனாப் போறாங்க” என்று சொன்ன கம்சலை அடுப்பில் வெந்துகொண்டிருந்த சோற்றைக் கிண்டிவிட ஆரம்பித்தாள். முருகன் லேசாகச் சிணுங்கி அழ ஆரம்பித்தான். சோற்றை இறக்கி வடித்த கம்சலை, குழம்புச் சட்டியைத் தூக்கி அடுப்பில் வைத்தாள். “பாய் தா” என்று சொல்லி முருகன் அடம்பிடிக்க ஆரம்பித்தான். அவனுடைய தொல்லையைத் தாங்க முடியாமல் “இதென்ன வம்பு சனியனா … Continue reading

நிஜமும் பொய்யும் – இமையம்

“நீ மொதல்லெ எயிதுறத எயிதன். அப்பறமா நான் சொல்றன்” “நீ விசயத்தை பூராத்தயும் ஒரே முட்டா சொல்லிப்புடு. நான் எல்லாத்தயும் எயிதிப்புட்டு படிச்சிக் காட்டுறன். ஏதாச்சும் வுட்டுப் போயிருந்தா படிச்சிக் காட்டும்போது சொல்லு, சேத்து எயிதிப்புடுறன்” “இல்லெ தம்பி. மொதல்லெ ‘என்னோட ஆச மவனுக்கு, ஒன்னோட அம்மா எயிதிக்கொண்டது, நான் ஊருலே நல்ல சொவமா இருக்கன். அங்கே ஒன்னோட சொவம் எப்பிடி, ஒடம்பு எப்பிடி’ன்னு எயிதுவ இல்லெ. அதெ எயிதிப்புடு. நான் பொறத்தாலெ சொல்றன்”. எதிரில் பித்துக்குளி … Continue reading