>சாசனம் – கந்தர்வன்

> அப்பா வெளியூருக்குப் போகையில் வண்டிக்குள் யார் பேச்சுக் கொடுத்தாலும், எவ்வளவு முக்கியமாக அது இருந்தாலும் தலையை வெளியே நீட்டி அந்தப் புளிய மரத்தை ஒரு தடவை பார்த்துக் கொள்வார். ஊர்க்கோடியில் குறவர் குடிசைகளுக்கு மத்தியில் பிரம்மாண்டமான மரம் அது. அடியில் பன்றி அடைந்து உரம் கொடுக்க ஊர் பூராவிலும் உள்ள மரங்களில் செழித்துக் கொழித்து நிற்கும் அது. அப்பாவுக்குச் சொந்தமான மரம். ஒரு செவ்வகவாக்கில் ஐந்து மைல் விஸ்தீரணத்தில் ஆறு சின்னக் கிராமங்களிலும் இந்தத் தாய்க் … Continue reading

தண்ணீர்-கந்தர்வன்

வெயில் குரூரமாயடித்துவிட்டுத் தணியத் தொடங்கிய வேளை; பாசஞ்ஜர் ரயிலின் கூவல் வெகு தொலைவிலிருந்து அருவலாகக் கேட்டது. வல்லநேந்தல் தாண்டியதும் இன்ஜின் டிரைவர்கள் இப்படித்தான் ஒலி எழுப்புவார்கள். திண்ணைக்கு ஓடிவந்து, தூணைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தாள் இந்திரா. தூரத்தில் ரயில் வருவது மங்கலாகத் தெரிந்தது. உள்ளே அம்மா ‘பொட்டுத் தண்ணியில்லை ‘ என்று ரயில் ஊதல் கேட்டு அனிச்சையாகச் சொ ல்லிக் கொண்டிருந்தது. ஐயா, சினை ஆட்டைப் பார்த்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தார். ஐயாவுக்கு எப்போதும் கணக்குத்தான். ஆடு … Continue reading

>மைதானத்து மரங்கள் – கந்தர்வன்

>     இவன் வீட்டை விட்டுத் திரும்பி நடந்தால் நூறடி தூரத்திலிருக்கிறது அந்த மைதானம். ஊரின் ஒரு கோடிக்கு ஒதுங்கி விட்ட இவன் வீட்டுக்கு ஒரே மரியாதை, அது அந்த மைதானத்திலிருக்கிறது என்பதுதான். புதியவர்கள் யாரும் இவனிடத்தில் வீட்டு முகவரி கேட்கும்போது இவன் இந்த மைதானத்தை அடையாளங் காட்டித்தான் சொல்லிக் கொள்வான். உலகத்தின் பெரிய பெரிய வாழ்க்கையிலிருந்தும் பெரிய பெரிய சம்பவங்களிலிருந்தும் இவன் ஒதுங்கி, ஒடுங்கியிருப்பது போல இந்த வீடும் நிசப்தத்தைத் திண்ணையில் விரித்துக்கொண்டு ஒடுங்கி ஒதுங்கிப் … Continue reading

கதை – கந்தர்வன்

மரியம்மா டீச்சர் வீடு ஒன்றுதான் இந்த ஊரிலேயே வேதக்கார வீடு. டீச்சருக்கு இது ஒன்றும் சொந்த ஊரில்லை. பக்கமாயிருக்கும் கிடாரத்திலிருந்து பெரிய ஸாரும் மரியம்மா டீச்சரும் புருஷன் பெஞ்சாதியாய் இங்கு வேலைக்குவந்தவர்கள்தான். கிடாரம் ஊரே வேதக்கார ஊராம். பெரிய ஸாருக்கு அவ்வளவாய் வேதக்கார வழக்கமெல்லாம் பிடிக்காது. இந்த ஆள்களா உள்ள ஊரில் பள்ளிக்கூடம் நடத்தவேண்டியிருந்தாலோ என்னவோ ஸார் ரொம்ப நீக்குப் போக்காயிருப்பார். ஆனால் இந்த மரியம்மா டீச்சர்தான் மூச்சுக்கு முன்னூறு முறை ‘கர்த்தரே கர்த்தரே’ என்று சொல்லிக்கொண்டு … Continue reading

>உயிர்-கந்தர்வன்

> ஒரு உச்சி வெயிலில் கடலோடித் திரும்பிய மீனவர் ஒருவர் தான் போட் ஜெட்டியில் அந்த சேதியைச் சொன்னார். தீவில் ஒரு திமிங்கலம் ஒதுங்கிக் கிடப்பதாக. சேதி கிராமத்தின் வழியாகச் செல்லும் பஸ்களிலும் லாரிகளிலும் நகரத்திற்கு அன்று மாலைக்குள் வந்து சேர்ந்துவிட்டது. நகரத்திலிருந்தும் வேறு எங்கிருந்தும் போட் ஜெட்டிக்கு பஸ்களில் வரவேண்டும். பிறகு முக்கால் மணி நேர படகு சவாரிக்குப் பின் தீவிற்குப் போகலாம் என்றார்கள்.   முதலில் சில ஆண்கள்தான் பஸ் பயணம். கடல் சவாரி … Continue reading

தெரியாமலே – கந்தர்வன்

கந்தர்வன் இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த அன்று திருதிருவென்று சுற்றுமுற்றும் கவனித்ததில் பலதும் கண்ணில் பட்டன. அதில் முக்கியமானது எல்லோரும் சில குறிப்பிட்ட நேரங்களில் தேநீர் அருந்தப் போய் வந்தார்கள் என்பது. அடுத்த சில தினங்களில் அவர்கள் யாரும் தனியாய்ப் போகவில்லையென்றும் குழுக்களாய்ப் போய் வருவதையும் பார்த்தேன். என் பக்கத்து சீட் சாமிநாதன் இடம்பெற்ற குழுதான் இந்தக் குழுக்களிலேயே பெரியது என்று அவனோடு சிநேகமாகி அந்தக் குழுவோடு கேன்டானில் நின்றபோது தெரிந்தது. தேநீர் அருந்தியதும் குழுக்கள் உடன் … Continue reading

>கந்தர்வன் – கல் தடம்-எஸ்.ராமகிருஷ்ணன்

> எஸ்.ராமகிருஷ்ணன் கோயில், வழிபாட்டுக்கு உரிய இடம் மட்டுமல்ல; அதன் ஊடாக இசையும் கலையும் சிறுவணிகமும், மருத்துவ மும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்திருக் கின்றன. கோயில் ஒரு கூட்டு வெளி. அது யாருமற்றவர்களுக்கான போக்கிட மாகவும், காலத்தின் மாபெரும் சாட்சியாக வும், கோடிக்கோடி மனிதர்களின் ஆசைகளும் கனவுகளும் சமர்ப்பிக்கப் படும் இடமாகவும் இருக்கிறது. ஆனால், பிரார்த்தனை என்பது வெறும் சடங்காகிவிட்ட சூழலில், தெய்வத்தைத் தவிர மற்ற யாவும் கவனிப்பாரற்றுப் போகத் துவங்கி விட்டிருக்கின்றன. ஓதுவார்களின் தேவாரப் பாடலும், … Continue reading