>நினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்-ஷங்கர்ராமசுப்ரமணியன்

> நினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள் கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள் கட்டுரை நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை ‘அந்த உலகம் மிகச் சமீபத்தில் தோன்றியது. அங்குள்ள பல பொருள்களுக்குப் பெயரில்லை. அவற்றைக் குறிப்பதற்கு சுட்டிக் காட்டுவதுதான் அவசியமாக இருந்தது.’ இது மார்க்வெசின் ‘நூற்றாண்டு காலத்தனிமை’ நாவலின் தொடக்கத்தில் மக்காந்தோ ஊரைப் பற்றி வரும் சித்தரிப்பு. கவிஞர் கலாப்ரியாவின் பிராயகால நினைவுக் குறிப்புகளான ‘நினைவின் தாழ்வாரங்கள்’ நூலைப் படித்து முடித்தபோது அதுகுறித்த பேச்சைத் தூண்டுவதற்கு இந்த விவரணை பொருத்தமாக இருக்கக்கூடும் … Continue reading

>பிரிவுகள் – கலாப்ரியா

> கலாப்ரியா பிரிவுகள் நாளை இந்தக் குளத்தில் நீர் வந்து விடும் இதன் ஊடே ஊர்ந்து நடந்து ஓடிச் செல்லும் வண்டித் தடங்களை இனி காண முடியாது இன்று புல்லைத்  தின்று கொண்டிருக்கும் ஆடு, நாளை அந்த இடத்தை வெறுமையுடன் சந்திக்கும் மேலே பறக்கும் கழுகின் நிழல் கீழே கட்டாந்தரையில் பறப்பதை நாளை பார்க்க முடியாது இந்தக் குளத்தில் நாளை நீர் வந்து விடும் *****

>சினேகிதனின் தாழ்வான வீடு – கலாப்ரியா

> கலாப்ரியா கறுப்பேறிப் போன உத்திரம், வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு கையெட்டும் உயரத்தில். காலேஜ் படிக்கும் அண்ணன் அதில் அவ்வப்போது திருக்குறள், பொன்மொழிகள் சினிமாப் பாட்டின் நல்லவரிகள் – என எழுதியெழுதி அழிப்பான் எழுதுவான். படிப்பை நிறுத்திவிட்டு பழையபேட்டை மில்லில் வேலை பார்க்கும் அண்ணன் பாஸிங்ஷோ சிகரெட்டும் தலைகொடுத்தான் தம்பி விளம்பரம் ஒட்டிய வெட்டும்புலி தீப்பெட்டியும் உத்திரத்தின் கடைசி இடைவெளியில் (ஒளித்து) வைத்திருப்பான். அப்பா வெறுமனே பத்திரப்படுத்தி வந்த தாத்தாவின் – பல தல புராணங்கள் சிவஞானபோதம் … Continue reading