கு. அழகிரிசாமியின் அரிய புகைப்படங்கள்

எழுத்து வேலையில் சீதாவுடன் – 19 Jan 1956 பேச்சு நவசக்தியில் பம்பாய்த் தமிழ் சங்கத்தில் – Dec 1, 1963 Sri Lanka, Hakkalai Gardens, Sep 15, 1967 நன்றி : sarangarajan alagiriswamy Advertisements

தியாகம் – கு அழகிரிசாமி

கோவில்பட்டி மளிகைக் கடை கதிரேசன் செட்டியார் காலையில் பலகாரம் சாப்பிடப் பத்து மணி ஆகும். அப்பறம் ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்துச் சாப்பிட்டச் சிரமத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் கடையை நோக்கிப் புறப்படுவார். சரியாகப் பதினைந்து நிமிஷ நடை. பத்து இருபத்தைந்துக்குக் கடையில் வந்து உட்காருவார். கையில் கடிகாரம் கட்டாமலே நிமிஷக் கணக்குத் தவறாமல் வருஷம் முன்னூற்றி அறுபத்தைந்து நாளும் ஒரே மாதிரியாக அவர்க் கடைக்கு வருவதும் வீடு திரும்புவதும் இந்தக் காலத்து கடை … Continue reading

சுயரூபம் – கு. அழகிரிசாமி

வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ மழைகள் சரிவரப் பெய்யாமலும், வேலை வெட்டிகள் கிடைக்காமலும் போய், அகவிலைகளும் தாறுமாறாக ஏறிக்கொண்டுவிடவே, அந்தக் கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் ‘உண்டு’ என்று சொல்லுவதற்கு அந்தப் பழம்பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது. பழம்பெருமை படைத்த இந்த வேப்பங்குளத்தில் பிறந்த எத்தனையோ பேரில், தற்சமயம் ஐம்பதாம் வயதைத் தாண்டிய வீ.க. மாடசாமித் தேவரும் ஒருவர். அப்படிச் சொல்லிக் கொள்ளுவதைவிட, வீரப்பத் … Continue reading

அன்பளிப்பு – கு. அழகிரிசாமி

மறுநாள் ஞாயிற்றுக்கிழமைதானே என்று, இரவு வெகுநேரம் கண்விழித்துப் படித்துக் கொண்டிருந்து விட்டேன். சனிக்கிழமை இரவு படுத்துக் கொள்ளும் போது மணி இரண்டிருக்கும். எவ்வளவு காலதாமதமாகித் தூங்கப் போனாலும், தூக்கம் வருவதற்கு மேற்கொண்டு ஒரு அரைமணி நேரமாவது எனக்கு ஆகும். எனவே இரண்டரைக்குத்தான் தூங்க ஆரம்பித்திருப்பேன். சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது, முதுகில் நாலைந்து கைகள் வந்து பலமாக அடிக்க ஆரம்பித்து விட்டன. அடிகளால் ஏற்பட்ட வலியை விட, அவற்றால் ஏற்பட்ட ஓசை  மிகப் பெரியதாக இருந்தது. தூக்கம் கலைந்து … Continue reading

இருவர் கண்ட ஒரே கனவு – கு. அழகிரிசாமி

வெள்ளையம்மாள் ஐந்தாறு நாட்களாகக் கூலிவேலைக்குப் போகவில்லை; போக முடியவில்லை. குளிர்காய்ச்சலோடு படுத்துக் கிடந்தாள் என்பது இங்கே ஒரு காரணமாகாது. உடம்பு சரியாக இருந்தாலும் அவளால் வேலைக்குப் போயிருக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை. அதனால், வேலைக்குப் போகாததற்குக் காரணம் உடுத்திக் கொள்ளத் துணி இல்லாமல் போனதுதான். சிற்சில வருஷங்களில், வேலை கிடைக்கும் காலத்தில் கிராமத்துக்கு நாலைந்து விதவைகள் இதேபோல் துணியில்லாமல் வீட்டை அடைத்துக் கொண்டு அரைப்பட்டினியோ, முழுப் பட்டினியோ கிடப்பது சகஜம் என்பது வெள்ளையம்மாளுக்கும் தெரியும். அதனால், … Continue reading

>முழுத்தொகுப்புகள்,நாவல்கள்

> காலச்சுவடு பதிப்பகம்      அடையாளம்           கு.ப.ரா கதைகள் ,பிரமிள் கவிதைகள்      தி.ஜானகிராமன் படைப்புகள் – ஐந்திணை

>ராஜா வந்திருக்கிறார் – கு. அழகிரிசாமி

> எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா! என்று கெட்டிக்காரத் தனமாகக் கேட்டான் ராமசாமி. செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்; தம்பையா ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்; மங்கம்மாள் மூக்கின் மேல் ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டும் கண்ணை இலேசாக மூடிக்கொண்டும் லேசாக யோசனை செய்தாள். அந்த மூவரும் ராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்றப் பிள்ளைகள். அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு … Continue reading

>கற்பக விருட்சம்-கு.அழகிரிசாமி

>   மாலை ஐந்து மணி அடிப்பதற்கு முன்பே சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் வந்து உட்கார்ந்து விட்டான் ஸ்ரீனிவாசன். கையில் ஒரு காசுகூடக் கிடையாது. இருந்ததெல்லாம் ஒரு மலிவு விலைப் பவுண்டன்பேனா, ஒரு வேஷ்டி, ஒரு சட்டை, சட்டையில் இரண்டு பிளாஷ்டிக் பித்தான்கள், அன்று மாலைப் பதிப்பாக வெளிவந்த  ஒரு தமிழ்த் தினசரி, சந்தேகத் தெளிவுக்காக வாங்கிய ஓர் ஆங்கில தினசரிப் பத்திரிக்கை–இவ்வளவுதான். பிளாட்பாரத்தின் கோடியில் கிடந்த ஒரு பெஞ்சில் தனியாளாக ஒரு மணி நேரத்துக்கு மேலேயே … Continue reading

>ஒரு பிடி சோறு-எஸ்.ராமகிருஷ்ணன்

> எஸ்.ராமகிருஷ்ணன் – கதாவிலாசம் கு.அழகிரிசாமி எனது நண்பனும், ஆங்கிலத்தில் எழுதும் கவிஞனுமான ரஞ்சன் மகோபாத்ரா வந்திருந்தான். அவன் அமெரிக்காவில் ஆங்கில இலக்கியத்தில் ஆய்வு செய்பவன். பல வருடங்களுக்குப் பிறகு சென்னைக்கு வருகிறான். மாநகர வாழ்வும், கடற்கரையும், சாப்பாடும் அவனுக்குத் தன் சொந்த ஊரில் இருப்பது போலவே தோன்றுவதாகச் சொன்னான். நூலகம், சினிமா என இரு வார காலம் கடந்து போன பிறகு, ‘தமிழ்நாட்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என்று ஏதாவது இருந்தால் சொல்லு, போகலாம்!’ … Continue reading

>விட்டகுறை தொட்டகுறை – கு. அழகிரிசாமி

> கு. அழகிரிசாமி ”அந்தப் பாதையில் அவளும் நானும் எப்படியோ வந்து சேர்ந்தோம். பிரயாணத்தைத் தொடங்கினோம். ஒரே திசையை நோக்கிப் பக்கம் பக்கமாக நடந்து சென்றோம். இப்படி நடந்து செல்கிறவர்கள் பேசாமல் இருக்க முடியுமா? அறிமுகப்படுத்திக் கொள்ளாமலும் இருக்க முடியுமா? சில மைல் தூரம் சென்ற பிறகு பேசினோம். நான் யார், அவள் யார் என்பவை அறிமுகமாகாவிட்டாலும் அவரவர்களைப் பற்றிய விவரங்களைப் பரஸ்பரம் சொல்லித் தெரிந்து கொண்டோம். பேச்சு துணையோடு எங்கள் நடை தொடர்ந்தது. ‘மேலும் சில … Continue reading