பண்ணைச் செங்கான் – கு ப ரா

“இதோ இந்த மாமரம் ஒங்க பாட்டன், மவராசன், வச்ச மரம். பனம் கல்கண்டு கணக்கா சுவையா இருக்கும் ! இந்தத் தென்ன மரம் அவரு கையாலே போட்ட நெத்து. இப்படித் தடத்தோடேயே வாங்க. வரப்புல நடந்து பளக்கமில்லே. பட்டண வாசத்துப் புள்ளே!” என்று வேகமாக விடாமல் பேசினான் செங்கான். நானும் அவனும் என் நிலத்தின் ஒரு புறத்து வரப்பின் மேல் நடந்து போய்க் கொண்டிருந்தோம். “இதை எப்போப்பா அறுக்கலாம்?” என்றேன். நிலத்தில் நின்ற பயிரைக் காட்டிக் கொண்டு … Continue reading

தாயாரின் திருப்தி-கு.ப.ரா

பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சி கால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கை கூட வாயைத்திறந்துகொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தன. நாய்கள் மட்டும் எச்சில் இலைகளுக்காக பிரமாதமாக ரகளை செய்துகொண்டிருந்தன. பிராமணர்கள் துடித்துக்கொண்டு நடந்துவந்து சோ்ந்தார்கள் புரோஹிதர் கண்ணை மூடிக்கொண்டு மந்திரங்களை அர்த்தமில்லாமல் ஓட்டினார். “பிராசீநவிதி“ “பவித்ரம் த்ருத்வா“ என்பவைகளையும் மந்திரத்துடன் சேர்த்து ஒரு ராகத்தில் பாடிக்கொண்டே போனார். பிராமணர்களுக்கு வஸ்திரம் கும்பம் தட்சிணை இவைகள் கொடுக்கப்பட்டு சாப்பிட உட்கார்ந்தார்கள். … Continue reading

>முழுத்தொகுப்புகள்,நாவல்கள்

> காலச்சுவடு பதிப்பகம்      அடையாளம்           கு.ப.ரா கதைகள் ,பிரமிள் கவிதைகள்      தி.ஜானகிராமன் படைப்புகள் – ஐந்திணை

>கடிதம்: கு.அழகிரிசாமி கி.ராஜ நாராயணனுக்கு எழுதியது.

> கு.அழகிரிசாமியும், கி. ராஜநாராயணனும் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு தெருவின் புழுதியில் ஒன்றாய்க் கட்டிப் புரண்டு விளையாடியவர்கள். பின்னால் அழகிரிசாமி வேலை கிடைத்து வெளியூர் போனபோது குறைந்தது நாள் ஒன்றுக்கு ஒரு கடிதமாவது எழுதுவது என்கிற பழக்கம் அவர்களைத் தொற்றிக்கொண்டது. ‘‘தூங்கி எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து, குளித்துவிட்டு பூஜைக்கு உட்காருவது போல், கடிதம் எழுத உட்காரும் பழக்கம் எங்களிடமிருந்தது’’ என்கிறார் ராஜநாராயணன். இவற்றில் கு. அழகிரிசாமியின் கடிதங்கள் தொகுக்கப்பட்டு 1987ஆம் ஆண்டு … Continue reading

விடியுமா? – கு.ப.ரா.

தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது. ‘சிவராமையர் – டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது. என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்து விட்டார். க்ஷயத்தின் சின்னம் கொஞ்சம்கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள். ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப் போய் உட்கார்ந்திருந்தாள். எங்கள் எல்லோருடைய … Continue reading

கனகாம்பரம் – கு.ப.ரா.

1 ‘மணி!’ வாசலில் நின்று கொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம். ‘எங்கேயோ வெளிலே போயிருக்கா. நீங்க யாரு?’ மணியின் மனைவி கதவண்டை நின்றுகொண்டு மெல்லிய குரலில் கேட்டான். ராமுவுக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப்போட்டுவிட்டது. மணியும் அவனும் கலாசாலையில் சேர்ந்து படித்தவர்கள். மணியின் மனைவியைப் பற்றி அவனுக்கு அதிகமாகத் தெரியாது. அவளை அவன் அதுவரையில் பார்த்ததுகூட இல்லை. புதுக்குடித்தனம் நடத்த அவள் சென்னைக்கு வந்து ஒரு மாதந்தான் ஆகியிருந்தது. அந்த … Continue reading

கு.ப.ரா: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி- ஜெயமோகன்

 ஜெயமோகன் கு.ப.ராஜகோபாலனின் படைப்புகளைப்பற்றி மிகுந்த பிரேமை கொண்ட ஒரு எழுத்தாள நண்பரும் நானும் பேசிக் கொண்டிருதோம். கு. ப. ராஜகோபாலன்தான் தமிழிலக்கியத்தின் உச்சம் என்ற எண்ணம் கொண்டவர் அந்நண்பர். ‘ஒவ்வொரு சொல்லையும் செதுக்கிச் செதுக்கி அடுக்குபவர் ‘ என்று அவர் கு.ப.ராஜகோபாலன் பற்றி சொன்னார். ‘செதுக்கிச் செதுக்கி ஒரு நகைபோல கதைகளை உருவாக்கியவர். ஒரு வார்த்தையைக்கூட வெளியே எடுக்கமுடியாது. ஒரு வார்த்தையைக்கூட சேர்த்துவிடவும் முடியாது. .தமிழ் இலக்கியத்தின் உச்ச சாதனைகள் சிறுகதைகளில் மட்டுமே உள்ளன. தமிழ்ச் சிறுகதைகளின் … Continue reading

திரை – கு.ப.ரா

கு.ப.ரா தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான் ஒரு விதமாகவும் பிசகு செய்ததாக அவனுக்குத் தெரியவில்லை. ஆகையால் அவள் கோபித்துக் கொண்டிருப்பாள் என்பதற்கும் இடமில்லை. அதுவுமின்றித் திருமண மான பிறகு, முதல் முதலாக அப்பொழுதுதான் அவளைப் பார்க்க வந்திருந்தான். அதற்கு முன் நேரில் கண்டு பேசினதே இல்லை. ஆகையால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவள் அதற்குள் கோபித்துக் கொள்ள முடியாது. ஒருவருக்கொருவர் இடைவிடாமல் கடிதங்கள் … Continue reading

>நூருன்னிசா-கு.ப.ரா

> கு.ப.ராஜகோபாலன் நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒருவாரம் இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப்போகிறதோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். நான் கைகொண்டு செய்யக் கூடிய காரியமாக எனக்கு ஒன்றும் தென்படவில்லை. தேசிய இயக்கத்திலோ ஒரு தேக்கம்; காங்கிரஸ் நிர்மாணத் திட்டம் அப்பொழுதும் சிதைவுற்றுக் கிடந்தது. தபாற்காரன் ஒரு கற்றைத் தமிழ்ப் பத்திரிகைகளுடன் ஒரு கவரையும் கொண்டு வந்து கொடுத்தான். தன்னந்தனியாக எனக்கு இவ்வுலகில் … Continue reading

>கு.ப.ராஜகோபாலன் நினைவு முகம்-எஸ்.ராமகிருஷ்ணன்

> எஸ்.ராமகிருஷ்ணன் திருப்பதி செல்லும் ரயிலில் அந்தத் தம்பதியைப் பார்த்தேன். இருவருக்கும் அறுபதைக் கடந்த வயது. தாத்தா ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்தார். அன்றைக்கு ரயிலில் கூட்டம் இல்லை. அவர் படிப்பதற்காக வாங்கி வைத்திருந்த ஆங்கில பேப்பர், பிளாஸ்டிக் கூடையில் செருகப்பட்டிருந்தது. ரயில் வேகமாகக் கடந்து செல்லும்போது, அவர் தொலைவில் உள்ள வயலில் வந்திறங்கும் கொக்குகளைக் காட்ட, ஒரு குழந்தையின் வியப்பில் வெளியே எட்டிப் பார்த்தார் அந்தப் பாட்டி. பயணம் முழுவதும் அவர்கள் தணிவான குரலில் எதையோ பேசிச் … Continue reading