>அரைக் கணத்தின் புத்தகம் -சமயவேல்

> அரைக் கணத்தின் புத்தகம் ஏய், நில், நில்லு- சொல்லி முடிப்பதற்குள் மாடிப்படிகளில் என் குட்டி மகள் உருண்டுகொண்டிருக்கிறாள் பார்த்துக்கொண்டு அந்த அரைக் கணத்தின் துணுக்கில் அவள் உருள்வதை நான்  பார்த்துக்கொண்டு மட்டும். அவளது சொந்த கணம் அவளை எறிந்துவிட அவள் உருண்டுகொண்டிருக்கிறாள். என் சகலமும் உறிஞ்சப்பட்டு ஒன்றுமற்ற உடலமாய் நான் அந்த அரைக் கணத்தின் முன் ஓடிக்கொண்டிருக்கிறேன். ஒரு வீறலுடன் அக்கணம் உடைய நெற்றியில் அடியுடன் அழும் மகளை அள்ளுகிறேன் – கணங்களின் மீட்சி என் … Continue reading

>விடுமுறை வேண்டும் உடல்-சமயவேல்

> விடுமுறை வேண்டும் உடல் எதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு தன்னைப் பற்றியே பெரும் கவலை கொள்கிற உடல் முடிந்த போதெல்லாம் விடுமுறை கேட்டு நச்சரிக்கிறது பேருந்துப் பயணம் ரயில் பயணம் அலுவலகம் என எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறது சும்மா ஒரு பனை மரத்தைச் சுற்றியிருக்கும் முசுமுசுக்கைச் செடி (சாறுண்ணி) போல் அல்லது வற்றிய கண்மாயின் அளிச்சகதியில் புரளும் எருமை என எப்படியும் இருப்பேன் என்கிறது விடுமுறை விடுமுறை எனும் யாசகச் சொற்களை … Continue reading

>ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் – சமயவேல்

> இந்த இரவு நான் அருந்திக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்த ரம் இல்லை வெறும் ஆப்பிள் ரஸம் தான் எனினும் இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது நாம் நடந்து வரும் பொழுது எவ்வளவோ வாகனங்கள் நம்மைக் கடந்தன எவ்வளவோ நாம் பார்த்துவிட்டோம் நாம் விவாதிப்பதற்கு ஒரு பொருளும் இல்லை நடந்த மரணங்களும் வரும் மரணங்களும் உறையச் செய்த நம் மெளனங்களின் இடைவெளிகளில் இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது பக்கத்தில் ஆளுக்கொரு பானம் அருந்தியபடி சிரித்துக் … Continue reading