சாமியார் ஜுவுக்குப் போகிறார்… – சம்பத்

தினகரன் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பார். ‘அன்னா ஜுக்கு’ என்ற குமாரின் கீச்சுக்குரல் அவரை எழுப்பியது. எழுந்து கொண்டார். முகம் அலம்பிக் கொண்டு உடை அணிந்து கொண்டார். மனைவியும் தயாரானாள். குமாருக்கு கௌபாய் ட்ரெஸ்! வெளியே முதல்நாள் பெய்த மழையில் புல் பாத்திகளில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரைப் பூமி மெள்ள மெள்ள முடிந்தமட்டும் உறிஞசிவிட்டன பிறகும், வேறு வழியில்லாமல் தேங்கிக் கிடந்தது. இப்போது நல்ல வெயிலில் ஆவியாக மாறிக் கொண்டிருக்கிறது. புல், கலங்கலான மழைத் தண்ணீர் … Continue reading

>பிரிவு- சம்பத்

> சரியாக மூன்று பதினேழுக்கு டிக்கட்டுடன் பிளாட்பாரத்தில் நுழைந்தார் தினகரன். எப்போதும் ‘ராஜதானி’ எக்ஸ்பிரஸ் முதற் ஃபிளாட்பாரத்திலிருந்துதான் புறப்படும். ஆனால் இப்போது, இன்று, மூன்றாவது ஃபிளாட்பாரத்திலிருந்து புறப்படுகிறது. ‘இன்னமும் இரண்டே மணி நேரங்களில் அவள் என்னை விட்டுவிட்டு கன வேகத்தில் ‘ஹவ்ரா’ பக்கம் போய்க்கொண்டிருப்பாள்,’ என்று நினைத்தார் தினகரன். தன்னில் ஏதோ செத்துக்கொண்டிருப்பதாக அவருக்குப் பட்டது. பத்மாவைப் பற்றி இவ்வளவு தீவிரமாக எப்போதாவது நினைத்திருப்போமா? என்று பட்டது. "தீவிரங்களெல்லாம் சொல்லிக்கொண்டா வருகிறது?’ என்று சொல்லி எதையெல்லாமோ சபித்தார். … Continue reading

>ஒற்றை அறை-எஸ்.ராமகிருஷ்ணன்

> எஸ்.ராமகிருஷ்ணன் – கதாவிலாசம் எஸ்.சம்பத் எல்லா மேன்ஷன்களி லும் ஐம்பது வயதைத் தொட் டும் திருமணம் செய்துகொள்ளாத ஒரு பிரம்மச்சாரி இருக்கிறார். கல்யாணம் செய்துகொள்ள விரும்பாமல் அவர் இப்படி வாழ் கிறார் என்று சொல்ல முடியாது. சரியான வேலையின்மை, குடும்பப் பிரச்னைகள், வெளியில் தெரியாத தோல்விகள் என ஏதேதோ சிக்கல்கள் அவர்களது கால்களில் கொடியாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறது. மற்ற அறைகளைப் போல இன்றி அவர்களது அறையில் தினமும் சரியான பூஜை நடக்கிறது. மாலை நேரம் ஜன்ன … Continue reading

>“இடைவெளி” சம்பத்

> சம்பத் நாராயணன் என்கிற எஸ். சம்பத், 1941_ம் ஆண்டு அக்டோபர் 13_ம் தேதி பிறந்தார். அப்போது சம்பத்தின் தந்தை சேஷாத்திரி ஐயங்கார் டில்லியில் ரயில்வே போர்ட் அதிகாரியாக பணியாற்றினார். எனவே சம்பத்தின் இள மைப்பருவம் முழுவதும் டில்லியிலேயே கழிந்தது. பொருளாதாரத்தில் எம்.ஏ.பி.எட். பட்டம் பெற்ற சம்பத் டில்லியிலேயே தனியார் நிறுவனங்களிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் தொடர்ந்து பணியாற்றினார். தன் உறவுப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட சம்பத்துக்கு மூன்று குழந்தைகள், சேஷாத்திரி ஐயங்கார் பதவி ஓய்வு பெற்று சென்னை … Continue reading

>சம்பத்தும் தஸ்தாவெஸ்கியும்-எஸ்.ராமகிருஷ்ணன்

> எஸ். ராமகிருஷ்ணன் (சென்னையில் சென்றவாரம் 11ஆம் தேதி நடைபெற்ற சம்பத் நினைவுகள் குறித்த கூட்டத்தில் பேசியது — தொகுப்பு : தளவாய் சுந்தரம்) சம்பத்தினுடைய `இடைவெளி’ நாவலை, நான் என்னுடைய கல்லூரி நாட்களில் படித்தேன். அப்போது எனக்கு அது, ஒரு பெரிய எழுச்சித் தரக்கூடிய நாவலாக இல்லை. ஒருவேளை கல்லூரிப் பருவ வயது அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். அப்புறம் ஒரு நாள், நாகர்கோவிலில் சுந்தர ராமசாமியை பார்த்தபோது அவர் கேட்டார் : “நீங்கள் சம்பத்தை முக்கியமான … Continue reading

>இடைவெளி (நாவலிலிருந்து ஒரு பகுதி) – சம்பத்

> அத்தியாயம் _ 4 தான் ரொம்பவும் பெரிய மனிதனாகி விட்டோம் என்று நினைத்துக் கொண்டார் தினகரன். இப்படித் தோன்றும் போது, இவான்ஸ் மனக்கண் முன் தோற்றம் கொண்டு `உன்னுடைய சாதனை என்ன? அல்லது நீ சாதிக்கப்போவது என்ன?’ என்பான் சிரித்துக்கொண்டே. யாருடைய அங்கீகரிப்பை நான் நாட வேண்டும்? அவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? வாழ்ந்து கொண்டே, அவர்களிலும் யாராவது என்னைப் போன்று சாவோடு சம்பாஷணை செய்து கொண்டிருப்பார்களா? பெரியப்பாவைப் பார்க்கப் போகும்போது, சாரதி வாயிலாக சாவுதான் … Continue reading

>சம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்

> சி. மோகன் (சென்னையில் சென்றவாரம் 11ஆம் தேதி சம்பத் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை) 1975ஆம் ஆண்டு கவிஞர் உமாபதியின் முயற்சியில் ‘தெறிகள்’ காலாண்டிதழ் வெளிவந்தது. அச்சமயம் அறிவிக்கப்பட்ட நெருக்கடி கால நிலையின் காரணமாக உமாபதிக்கு ‘தெறிகள்’ நடத்தியது தொடர்பாக அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து அவ்விதழ் தொடர்ந்து வெளிவராமல் போனது. ஓர் இதழ் மட்டுமே வெளிவந்த தெறிகளில் இரண்டு மிக முக்கியமான படைப்புகள் வெளிவந்திருந்தன. ஒன்று : கலாப்ரியாவின் ‘சுயம்வரம்’ குறுங்காவியம் ; … Continue reading