பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதா

தில்லியில் இதுவரை ஏழு வீடுகள் மாற்றி இப்போது இந்த மயூர் விஹார் வீடு எட்டாவது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சினை. வீடு என்றால் எதுவும் தனி வீடு அல்ல. ஒண்டுக்குடித்தனம்தான். அநேகமாக எல்லா வீடுகளிலும் வீட்டுச் சொந்தக்காரர்களுடன் தான் குடியிருக்க நேர்ந்தது. ஒரு வீட்டில் வீட்டுக்காரர் தீவிர ராமபக்தர். குளிர்காலத்தில் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து ராமபஜனை. குளிர்காலமாக இருப்பதால் கண்ணாடி ஜன்னல்களெல்லாம் மூடியிருக்கும். வீட்டுக்காரர் தொண்டையைக் கிழித்துக் கொண்டு கத்தும் ‘ஓம் ஜெய ஜெகதீச ஹரி! … Continue reading

அவ்வா – சாரு நிவேதிதா

ஒரு ஐப்பசி மாதத்து அடைமழை இரவின் போது தான் அந்த நாயின் தீனமான அழுகைச் சத்தம் கேட்டது. அந்தத் திரு.வி.க. வீதியில் நாய்கள் அதிகம். அதிலும் விதவிதமான நாய்கள். பல இனத்தைச் சேர்ந்த நாய்கள் நறுக்கி விட்டதைப் போல் குட்டி வாலும் நீண்டு மெலிந்த உடலும் கொண்ட டாபர்மேன் வகை நாய்கள் கூட தெருவில் கேட்பாரற்று அலைந்து கொண்டிருக்கும். எனக்கானால் நாய்களைக் கண்டால் பிடிக்காது. இரவுகளில் இந்த நாய்கள் தான் பெரும் பிரச்சினை. மரணத்தின் வருகையை அறிவிப்பது … Continue reading

>நகுலன் கதைகள் : வேத மனவெளியில் அலைவுறுதல்-சாரு நிவேதிதா

> நகுலன் கதைகள் : வேத மனவெளியில் அலைவுறுதல் (கோட்ட விளையில் நடந்த `வானவில் இலக்கிய வட்டம்’ கருத்தரங்கில் மார்ச் 28 , 1999 அன்று வாசிக்கப்பட்ட கட்டுரை) மேலோட்டமான பார்வையில் நகுலனின் கதைகள் மிகவும் எளிமையாகவும், சுய சரிதச் சம்பவங்களாகவும், சுலபத்தில் `இலீடேட்’ செய்யக் கூடியனவாகவும் தோற்றம் தந்தாலும் அது ஒரு மாயத் தோற்றம் தான். இந்த எளிமைக்குப் பின்னால் மனித வாதை குறித்த பெரும் துக்கம் `ஹம்பி’ இடிபாடுகளாய் விரிந்து கிடக்கிறது. மனிதத் தனிமை … Continue reading

முள் – சாரு நிவேதிதா

இன்றோடு பதினஞ்சு நாளைக்கு மேல் இருக்கும் தொண்டையில் இந்த முள் சிக்கி. மீன் சாப்பிட்ட போதுதான் சிக்கியிருக்க வேண்டும். இதுக்குத்தான் நான் ருசியா இருக்கிற மீனாயிருந்தாலும் முள் மீனாக இருந்தால் தொடுவதேயில்லை. சில மீன்களில் நடுமுள் மட்டும் இருக்கும். கோழிச் சிறகு மாதிரி. சில மீன்களில் சதைக்கு உள்ளேயெல்லாம் ஒரே முள்ளாயிருக்கும். கார்த்திகை வாளை, முள்ளு வாளை எல்லாம் இந்த வகையறாதான். ஆனால் இந்த இரண்டு ரகத்திலும் சேராத ஒரு மீன்… கோலா மீன். இதுக்கும் நடுமுள் … Continue reading