ஒரு வருடம் சென்றது – சா. கந்தசாமி

நான்கு எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு நூலாகிய ‘கோணல்கள்’ மூலம் பரவலான இலக்கிய ரசிகர்களின் கவனத்துக்கு வந்த சா. கந்தசாமி மாயவரத்தில் பிறந்தவர் (23-7-1940). தற்போது சென்னைத் துறைமுகத்தில் பணி புரிகிறார். இலக்கிய வட்டாரங்களில் பெரிதும் மதிக்கப்படும் ‘கசடதபற’ இலக்கிய இதழில் இவர் பெரும் பொறுப்பு வகித்தவர். தொழிற்சாலை ஒன்று நிறுவுவதற்காகச் சிறிய வனம் ஒன்று அழிக்கப்படுவது பற்றிய ‘சாயா வனம்’ (1969) என்ற நாவல் இவருடைய முக்கியமான நூல். ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ (சிறுகதைகள், … Continue reading

>வாள்-சா.கந்தசாமி

> மென்மையான மேகங்கள் மேற்கிலிருந்து கிழக்காகக் குவிந்து கொண்டிருந்தன. பக்கிரி தலையைக் கொஞ்சம்போல் திருப்பிப் பார்த்தார். ஆற்றோரத்துத் தென்னை மரங்கள் ஆடுவது நன்றாகத் தெரிந்தது. மறுபடியும் ஒருமுறை பெரும் காற்று வீசப் போகிறது என்று தனக்குத் தானே தீர்மானம் பண்ணிக் கொண்டார். விட்டு வீசும் காற்று வேலைக்கு ஓர் அறைகூவல் போல் அவருக்குத் தோன்றியது. இடதுகாலை நன்றாக மரத்தில் அழுத்திக் கொண்டு கையிலிருந்த வாளைக் கீழே விட்டார். வாள் மரத்தில் கரகரவென்று இழைந்து கொண்டு சென்றது. அறுபட்ட … Continue reading

>நிழல் குதிரை-எஸ்.ராமகிருஷ்ணன்

> சா.கந்தசாமி நமண சமுத்திரம். புதுக்கோட்டை அருகில் உள்ள சிற்றூர்.இங்கே நடைபெறும் குதிரை எடுப்புத் திருவிழாவைக் காண்பதற்காகச் சென்றிருந் தேன். அய்யனார் கோயிலுக்கு நேர்சை செய்து, காணிக்கையாக மண் குதிரைகள் செய்து வந்து செலுத்துவது பிரார்த்தனை! மரங்கள் அடர்ந்த சோலையின் நடுவில் நூற்றுக்கணக்கில் மண் குதிரைகள் நிற்பதைக் காணும்போது, போர்க்களக் காட்சி போலத் தோணும். குதிரைகளின் கம்பீரமும், அவை கால் தூக்கி நிற்கும் அழகும் வியப்பளிக்கும். குறிப்பாக, குதிரையின் மிரட்டும் கண்கள், அதன் வேகம் சொல்லும். மண் … Continue reading

>தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி

> மாணிக்கம் பெரிய விசிறி வலையைப் பரக்க விரித்துப் போட்டபடி ராமுவைக் கூப்பிட்டார். ஒருமுறைக்கு இன்னொரு முறை அவருடைய குரல் உயர்ந்து கொண்டே இருந்தது. நான்காம் தடவையாக, "எலே ராமு" என்று அவர் குரல் பலமாகக் கேட்டபோது, "இப்பத்தான் வெளியே போனான்" என்று அவர் மனைவி உள்ளேயிருந்து பதிலளித்தாள். ராமு வெற்றிலை இடித்துத் தரும் நேரம் அது. இரண்டு மூன்று வருடமாக அவன்தான் வெற்றிலை இடித்துத் தருகிறான். அநேகமாக அதில் மாறுதல் ஏற்படவில்லை. ஒருநாள் தூண்டில் முள் … Continue reading