சி.சு.செல்லப்பாவின் அரிய புகைப்படங்கள்

                    நன்றி: சொல்வனம் புகைப்படங்கள் உதவி: செல்லப்பாவின் புதல்வர் திரு.செ.சுப்ரமணியம் ஒவியங்கள்: ஜேகே,  மருது Advertisements

சிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு !சி.சு.செல்லப்பா

சிறுகதைக்காரர்கள் தங்கள் கதைக்கான விஷயத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்ட பிறகு அடுத்து கவனிக்க வேண்டியது அதை அவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதுதான். இங்குதான் உருவம் என்கிற பேச்சு எழுகிறது. உருவம் என்றால் ஏதோ ஒரு வரையறை ஏற்படுத்தி இந்த மாதிரி இருந்தால்தான் அது ஒரு சிறுகதை என்று ஒரு ஆரம்ப சட்டம் இட்டு, ஒரு கட்டுப்பாட்டுக்குள், அடாபிடித்தனமாக, இயங்க வைக்கப்பட்ட ஒன்று என்று கொண்டு விட முடியாது. ஆரம்பகாலப் படைப்பு ஒன்று தனக்குள் அடக்கி இருக்கும் ஒரு அமைப்பு … Continue reading

நினைவோடை: சி. சு. செல்லப்பா – சுந்தர ராமசாமி

நினைவோடை: சி. சு. செல்லப்பா – சுந்தர ராமசாமி (தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்) நான் சென்னைக்குப் போன சமயங்களில் ஒரு தடவை கூட செல்லப்பாவைச் சந்திக்காமல் வந்தது கிடையாது. என்ன தான் இருந்தாலும் அவரைப் போய்ப் பார்த்துவிடுவேன். நிறைய நேரம் அவருடன் இருப்பேன். அவரது வீட்டுக்குப் போனதும் முதல் கேள்வி, ‘என்னிக்கு வந்தாய்?’ என்பதுதான். ‘முந்தா நாள் வந்தேன்’ என்பேன் நான். ‘க. நா. சுவைப் பார்த்தாச்சில்லையா’ என்பார் உடனே. இவர் மட்டுமல்ல பலருக்கும் இந்த வியா … Continue reading

>சி.சு.செல்லப்பா: சுமந்து சென்ற எழுத்து- எஸ்.ரா

> சி.சு.செல்லப்பா: சுமந்து சென்ற எழுத்து- எஸ்.ராமகிருஷ்ணன் சி.சு.செல்லப்பாவிற்கு விளக்கு விருது அறிவிக்கபட்டதைத் தொடர்ந்து அவரைச் சந்திப்பதற்காக நானும் வெளிரெங்கராஜனும் திருவல்லிக்கேணியில் இருந்த அவரது வீட்டிற்குச் சென்றிருந்தோம். பிள்ளையார்கோவிலின் அரு காமையில் உள்ள சிறிய ஒற்றையறைக் குடித்தனம். வயதான செல்லப்பாவும் அவரது மனைவியும் மட்டும் தனியே வசித்துக் கொண்டிருந்தார்கள். செல்லப்பாவை மதுரையில் இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன். ஆனால் சென்னைக்கு வந்த பிறகு சந்திக்கவேயில்லை. வீடு தேடிச் சென்றதும் அதே உற்சாகம் குறையாமல் உள்ளே அழைத்து பாயில் … Continue reading

>சி சு செல்லப்பா

> சி சு செல்லப்பா (29.9.1912 – 18.12.1998) சி சு செல்லப்பாவின் மறைவு தன்னலத்தை முதன்மைப்படுத்தாமல் கொள்கையை முன்வைத்துப் போராடும் எழுத்தாளனுக்கு மற்றுமொரு நம்பிக்கைத்தூண் சரிந்துவிட்ட சங்கடத்தைத் தரக்கூடியது. கடைசிவரையிலும் எழுதிற்று அவர் கை. அந்தவகையில் அது நிறைவுகூடிய வாழ்க்கை. பரிசு, பணம், புகழ் ஆகியவற்றைக் கண்டு மிரள கடைசிவரையிலும் மறுத்த படைப்பாளி அவர். விமர்சனம், மறுபார்வை, விழிப்பு நிலை அளிக்கும் தார்மீகக்கோபம் இவையின்றி ஒரு படைப்பாளி இல்லை. செல்லப்பா பிறந்தது மதுரை மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு. … Continue reading

வாடிவாசல் – சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா வாடிவாசலிருந்து சில பகுதிகள்: கிழக்கு சீமையில் பிரசித்தி பெற்ற மாடு அணைகிறவன் மகன் அந்தப் பையன் -பேச்சுக்கு பையன் என்றாலும் -அந்த வாலிபன் என்ற செய்தி அந்த ஷணமே வாய்க்கு வாய் மாறி வாடிவாசல் முன் சூழ்ந்து நின்ற அதனை நூற்றுக்கணக்கானவர்களுக்கும் பரவி எட்டிவிட்டது. தொழிலில் ஈடுபட்ட அத்தனை பேரும் அவனையே ஆராய்ந்தார்கள் .கண் உறுத்து பார்த்து அவனவன் யூகத்திற்கு அகபட்டபடி பேசிகொண்டார்கள் . ” மாடு பிடிகத்தான் வந்திருப்பான் பய.அதுக்கு சம்சயம் வேறேயா?” ” … Continue reading

>வாழ்க்கை-சி.சு.செல்லப்பா

> –சி.சு.செல்லப்பா பகவான் கொடுத்த சொத்து, பூமி என்றெல்லாம் தாம் சொல்லிக் கொள்ளும் அந்தக் களிமண் கட்டிப் பரப்பு அத்தனைக்கும் அந்த வெயிலில் கொத்துக்காரன்தான் ராஜா. ”போயும் போயும் நிலம் வந்து வாங்கினோமே, பாழாய்ப்போன ஊரிலே, குடி தண்ணிக்கு வழி இல்லை. எடுத்துக்கிட்டு வாடா அரிவாளை, பெட்டியிலே இருந்து” என்ற வார்த்தைகளுக்கு முன்பு நடந்த விஷயங்கள் வருமாறு: பட்டுப் பட்டுப் பழகிப்போன மிராசுதார் மாமாவுக்கே தாங்க முடியாத வெப்பம். அறுப்புக் களம், பட்டுப் படைக்கிற வெயில். நிழலின் … Continue reading

மூடி இருந்தது-சி.சு.செல்லப்பா

சி.சு. செல்லப்பா நாளை! நாளை எனக்கு விடுதலை, நான் எதிர்பார்க்காமல் அது என் அருகில் வந்துவிடவில்லை. வாஸ்தவமாக! மாதங்கள் வாரங்கள், நாட்கள், மணிகள், நிமிஷங்கள், ஏன் வினாடிகளும் கூட. அவைகள் ஒவ்வொன்றின் கால அளவையும், கணக்குப் போட்டுப் போட்டுப் பார்த்துவிட்ட பிறகு தான் என்னை நெருங்கி வந்தன. எப்படி அந்தக் கடைசி மின்வெட்டு நேரம். சாசுவதமான விடுதலையை தரும் கணப் பொழுது, சாவு என்பது உயிர் வாழ்க்கை முழுதும் கண் எதிரில் தோன்றித் தோன்றி ஒரு நாள் … Continue reading