>ஜி. நாகராஜன் – கடைசி தினம்!-சி.மோகன்

> * ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றொரு நாளே’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Tomorrow One more Day’ நூல் வெளியீட்டில், சி.மோகன் பேசியது. பென்குயின் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் வணக்கம். என் நெடுநாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறியிருக்கும் நாள் இது. எஸ் சம்பத்தின் ‘இடைவெளி”, ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, ஜி. நாகராஜனின் ”நாளை மற்றுமொரு நாளே’ ஆகிய மூன்று நாவல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது உலக இலக்கியத்திற்கு நம்முடைய பெறுமதியான கொடையாக இருக்குமென்ற என் … Continue reading

>ஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்

> சி. மோகன் நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளை அபாரமாக விஸ்தரித்தவர் ஜி. நாகராஜன். அது வரையான தமிழ்எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம். வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல நியாயங்களோடும் கெளரவத்தோடும் வாழும் உலகமது. ஜெயகாந்தனின் படைப்புலகில் இவர்கள் இடம் பெறுகிற போதிலும் அவருடைய மொண்ணையான மதிப்பீடுகளினால் அந்த உலகம் சிதைவுறுவதைப் போலல்லாமல் இயல்பான மலர்ச்சியைக் கொண்டிருக்கும் உலகம் ஜி. நாகராஜனுடையது. அவருடைய இரு நாவல்களுக்கும் தொடக்கமாக முன்வைத்திருக்கும் சிறு … Continue reading

>ஜி. நாகராஜனின் படைப்புலகம்-சி. மோகன்

> சி. மோகன்    (ஜி. நாகராஜன் படைப்புகள் _ புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் முன்னுறையின் சுருக்கம்.) நவீன தமிழ்ப் புனைகதை இலக்கியப் பரப்பில் ஜி. நாகராஜனின் எழுத்து தனிப் பிராந்தியம். தன் கால வாழ்வோடு கொண்ட தீர்க்கமான, இயல்புணர்வோடு திளைத்த உறவில் அவருடைய படைப்பு மனம் உருவாக்கிய பிராந்தியம். மனிதனின் இயல்புணர்வு களைக் கொண்டாடிய மனத்திலிருந்து விரிந்த பிராந்தியம். சமூகக் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் அதன் சம்பிரதாய ஒழுக்க நியதிகளும் பாலியல் கட்டுப்பாடுகளும் வாழ்வின் சிறகுகளைக் கத்தரித்து யந்திரரீதியான … Continue reading

>க.நா.சுப்ரமணியம்-சி. மோகன்

> சி. மோகன், நன்றி : நடைவழிக் குறிப்புகள் . அகரம் வெளியீடு.    தற்காலத் தமிழ் இலக்கியத்தின் வளமான பரப்பை வடிவமைத்த உழைப்பு க. நா. சுப்ரமணியத்தினுடையது. இவருடைய தார்மீக உந்துதலும் சலிக்காத செயல் வேகமும் தற்காலத் தமிழ் இலக்கியச் சூழலின் 20 ஆண்டுகளை (1945_65) நிர்மாணித்தன. நாவல், சிறுகதை, கவிதை ஆகிய சாதனங்களில் இவர் தம் படைப்புகளை உருவாக்கியிருக்கிற போதிலும் படைபெழுச்சிமிக்க சிறந்த படைப்பாளி என்று இவரைக் கருத முடியாது. எனினும் 50 ஆண்டுகளுக்கும் … Continue reading

>சம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்

> சி. மோகன் (சென்னையில் சென்றவாரம் 11ஆம் தேதி சம்பத் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை) 1975ஆம் ஆண்டு கவிஞர் உமாபதியின் முயற்சியில் ‘தெறிகள்’ காலாண்டிதழ் வெளிவந்தது. அச்சமயம் அறிவிக்கப்பட்ட நெருக்கடி கால நிலையின் காரணமாக உமாபதிக்கு ‘தெறிகள்’ நடத்தியது தொடர்பாக அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து அவ்விதழ் தொடர்ந்து வெளிவராமல் போனது. ஓர் இதழ் மட்டுமே வெளிவந்த தெறிகளில் இரண்டு மிக முக்கியமான படைப்புகள் வெளிவந்திருந்தன. ஒன்று : கலாப்ரியாவின் ‘சுயம்வரம்’ குறுங்காவியம் ; … Continue reading