க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம்-சுகுமாரன்

க.நா.சு.100 ‘காலச்சுவடு ‘ பதிப்பகம் வெளியிடும் புதிய நூல்களின் அறிமுக அரங்கில் பங்கேற்றுப் பேசக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. என் மனதில் உருவாகும் சில நினைவோட்டங்களும் இந்த மகிழ்ச்சிக்குக் காரணம். திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த க.நா.சுப்ரமண்யத்தைச் சந்திக்க இருபத்து மூன்று வயது இளைஞரான சுந்தர ராமசாமி, அம்புஜவிலாசம் ரோட்டில் முன்னும் பின்னும் நடந்ததுபோல, நாகர்கோவில் மணிமேடைக்குச் சமீபமுள்ள ஜவுளிக்கடையை இலக்காகக்கொண்டு இருபத்தைந்து வயது இளைஞனொருவன் நடந்துபோகும் காட்சி மனதில் விரிகிறது.க.நா.சு.தங்கியிருந்த வீடு பூட்டியிருந்தது. ஜவுளிக்கடை ‘சாமி ‘ … Continue reading

க.நா.சுவின் எழுத்து மேஜை – சுகுமாரன்

க.நா.சு.100 ஓவியம்: ஆதிமூலம் என்னைப் பற்றி அக்கப்போர்கள் அவ்வப்போது எழுந்து அடங்கி யிருக்கின்றன. யார் யாரோ அந்தந்தச் சமயத்துக்கு ஏதோ சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். இன்றும் சொல்கிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று எண்ண வில்லை. காலம் பதில் சொல்லட்டும். என் அபிப்பிராயத்தில் வலுவில்லாவிட்டால் காலம் அடித்துக்கொண்டு போய்விடும். வலுவிருந்தால் என் அபிப்பிராயம் தானாக நிற்கும். – க.நா.சு. இலக்கிய வாசிப்பு முக்கால் நேரத் தொழி தொழிலாக இருந்த நாட்களில் க.நா.சுவின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். கதைகளிலும் … Continue reading

வெளியில் ஒருவன்-சுகுமாரன்

வெளியில் ஒருவன் பரிவில்லாதது வீடு வெளிக் காற்றில் ஏராளம் விஷம் சோகை பிடித்த தாவரங்கள் நீர்நிலைகளில் சாகும் பறவைகள் மிருகங்கள்  . பிச்சைக்காரியின் ஒடுங்கிய குவளையில் சரித்திரம் கெக்கலிக்கும். தேசக் கொடிகளின் மடிப்பவிழ்ந்து எங்கும் பொய்கள் கவியும். ஒன்று அல்லது மற்றொன்று – விலங்குகளை இழுத்து நகரும் மனிதர்கள். திசைகளில் அலைந்து திரும்பிய பறவை சொல்லிற்று மனிதர்கள் எரிக்கப் படுவதை பெண்கள் சிதைக்கப் படுவதை குழந்தைகளும் சங்கீதக் கருவிகளும் பிய்த்தெறியப் படுவதை பூக்களும் கவிதைகளும் மிதிக்கப் படுவதை … Continue reading

ஜே.ஜே. – இருபத்தைந்து – சுகுமாரன்

காலச்சுவடு பதிப்பகத்தின் நவீன கிளாசிக் வரிசையின் சிறப்புப் பதிப்பான ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலின் பின்னுரை கோட்டயம் முன்னேற்ற எழுத்தாளர் மாநாட்டில் தன்னுடைய ஆதர்ச எழுத்தாளன் ஜே.ஜே.யைப் பார்க்கச் சென்ற பாலு மற்றொரு எழுத்தாளரான திருச்சூர் கோபாலன் நாயரிடம் ஜே.ஜே.யின் எழுத்தை தான் எதிர் கொண்ட விதத்தைச் சொல்லும் பகுதி இவ்வாறு அமைகிறது: “சார், புரியாத எழுத்தில் இரண்டு விதம். ஒன்று அசிரத்தை ஏற்படுத்தக் கூடியது. மற்றொன்று ஆர்வம் ஏற்படுத்தக்கூடியது. ஜே.ஜே. இரண்டாவது வகையைச் சார்ந்தவன் என்பது … Continue reading

சுகுமாரன் – நேர்காணல்

துயரத்தின் பாலைவெளி முடிவற்ற நீளம் சந்திப்பு: பெருமாள்முருகன் சுகுமாரன் (11.06.1957): நவீனத் தமிழ்க் கவிதை ஆளுமைகளுள் முக்கியமானவர். எளிமையும் செறிவும் கொண்ட இவர் கவிதைகள் படிமம், உவமை, சொற்சேர்க்கை ஆகியவற்றில் தனித்துவம் மிக்கவை. வடிவம், சொல்முறை ஆகியவற்றில் வெவ்வேறு விதங்களைக் கையாண்டு புதுமைசெய்தவர். அரசியல் சார்ந்த விஷயங்களையும் கவித்துவத்தோடும் சுயபார்வையோடும் கவிதைக்குள் கொண்டுவந்தவர். சுயவிமர்சனத்தைக் கறாராக வைத்துக்கொண்டிருப்பவர். இலக்கியம், இசை, திரைப்படம் ஆகியவை இவரது முப்பெரும் காதல்கள். சிறுகதைகளும் எழுதியுள்ளார். சமீப காலமாக இவர் எழுதிவரும் கட்டுரைகள் … Continue reading