பிறிதொரு நதிக்கரை – சூத்ரதாரி

சுற்றுப்படிகளனைத்தையும் மூழ்கடித்துக் கிடந்த மரகத நீர்ப்பரப்பு திகைக்க வைத்தது. மெல்லிய அலைகளில் தெறிக்கும் இளம் வெயிலின் மினுமினுப்பில் கண்கள் கூசின. படிகளில் உட்கார்ந்து மீன் கூட்டங்களையோ கோபுரச் சிற்பங்களையோ இன்றைக்கு ரசிக்க முடியாது. கரை விளிம்பில் நழுவி அசையும் நீரின் சுவடுகள் நீண்ட கல் தரையெங்கும் கோலமிட்டிருந்தன. வழக்கத்திற்கு மாறான நெரிசல். கண்கள் அனைத்தையும் ஒன்றுபோல் கட்டிப் போட்டிருந்தது பொற்றாமரைக்  குளம். நிறைகுளம் வியந்து நிற்கும் கும்பலைப் பிளந்து குளத்தைச் சுற்றிவிடலாம் என்ற தீர்மானத்தில் எதிர்படுபவர்களை மெல்ல … Continue reading

>நடன மகளுக்கு – சூத்ரதாரி

> நடன மகளுக்கு என் சாய்வு நாற்காலியின் பின்னிருந்து சவுக்குக் காட்டில் மிச்சமிருக்கிறது அந்தியின் தவம் நீண்ட இடைவேளைக்குப் பின் உன் முகம் காட்டிய கடிதம் ஊஞ்சலை அசைத்துவிட்டிருக்கிறது நிலவிழைப் பொழிந்த இசைச்சதுக்கமொன்றில் நீயாடிய நடனத்தை ரசித்துக்கொண்டிருக்கிறேன் அன்றிரவு நீ களைத்துறங்கினபோது சிவந்த உன் பாதங்களை முத்தமிட்டதை நீ அறிவாயா? கொலுசொலிக்க மார்புதைத்து பயின்ற உன் பாதங்கள் இன்று சிகரங்களில் ஆடுகின்றன என் பூரணமே, தாங்கவில்லை எனக்கு கை ஓய்ந்து போவதற்குள் கொஞ்சம் சொல்ல இருக்கிறது எனக்கு … Continue reading