மௌனியின் கதையுலகம் – திலீப்குமார் – பகுதி 2

மௌனியின் கதையுலகம் – பகுதி 1 படிக்க மௌனியுடன் கொஞ்ச தூரம் – நூலிலிருந்து… மௌனியின் கதையுலகம் – பகுதி 2  தத்துவத்தைப் போன்றே இலக்கியமும் சிந்தனையைச் சார்ந்த செயல்பாடு, அதன் விளைவாக சமூகப் பார்வையையும் சார்ந்து நிற்கும் ஒன்று. எல்லாக் காரியங்களுக்கும் ஒரு சமூகப்பரிமாணம் உண்டு. மற்றவற்றை விட இலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் உள்ள சமூகப்பரிமாணம் அதிகமானது. மேலும் தத்துவத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள இடையுறவு பல தளங்களில் நிகழக்கூடியதுதான். எனவே மௌனியின் எழுத்துக்களில் சமூகப்பார்வை என்பதைவிட மௌனியின் … Continue reading

மௌனியின் கதையுலகம் – திலீப்குமார்

மௌனியுடன் கொஞ்ச தூரம் – நூலிலிருந்து… மௌனியின் கதையுலகம் – பகுதி 1 1936-ம் ஆண்டுவாக்கில் மணிக்கொடியில் மௌனி முதன் முதலாகச் சிறுகதைகளை எழுதத் துவங்கினார். அந்தக் காலகட்டத்தில் புதுமைப்பித்தன் கு.ப.ரா ஆகியோரும் மணிக்கொடியில் எழுதினார்கள. தமிழ்ச் சிறுகதைத் துறை முதிர்ச்சியடையத் துவங்கிய காலமும் இதுதான் எனக் கொள்ளப்படுகிறது. மணிக்கொடியில் மௌனியின் பிரவேசம் வெகுவாக ஊர்ஜிதப்படுத்தியது. மௌனி படைப்புத் துறைக்கு வந்த்து ஒரு தற்செயல் நிகழ்வு என்று பலரும் அறிவித்திருக்கிறார்கள். மௌனி மணிக்கொடியில் எழுதினாலும் மணிக்கொடி என்ற … Continue reading

தீர்வு – திலீப் குமார்

இந்தக் கதையைச் சொல்வதற்காக, கோவையிலிருந்து சென்னைக்குத் தாமதமாக வந்து தொலைந்த நீலகிரி எக்ஸ்பிரஸில் வந்து, எனது ஒற்றைப் பெட்டியுடன் போர்ட்டர்களின் வயிற்றெரிச்சல்களையும் சுமந்து, ஆர்வமாய் அருகில் வந்த ரிக்ஷாக்காரன்களை ஏமாற்றி, அவசரமாய் வால்டாக்ஸ் ரோட்டைக் கடந்து ஒரு சின்னச் சந்தில் நுழைந்து, தங்கசாலைத் தெருவை அடைந்து நடக்கிற என்னுடன் இந்த ஏப்ரல் மாதக் காலையில், மண்டையைப் பிளக்கிற வெயிலில் உங்களையும் அழைத்து வந்ததற்கு, மன்னிக்கவும். வால்டாக்ஸ் ரோட்டுக்கும் ரத்தன் பஜாருக்கும் இடையே சிக்கித் தவிக்கிற ஏழெட்டுச் சந்துகளில் … Continue reading

கானல் – திலீப்குமார்

மெல்ல மெல்ல, அந்த அறையின் புழுக்கத்தையும் அங்கு திடீரென்று படிந்து விட்ட நிசப்தத்தையும் அவர்கள் உணரத் துவங்கினார்கள். அறையின் மூலையில் எரிந்து கொண்டிருந்த நீல நிற சிறிய விளக்கின் மங்கிய ஒளியில் அவர்கள் கரிய நிழல்கள் போல் உறைந்து கிடந்தார்கள். அவர்களது நிர்வாணமான சிவந்த உடல்கள் ஒரு வகையில் பிணங்கள் போன்றும் தெரிகின்றன. அதிருப்தியால் வதங்கிய மலர்களுடன் அவர்கள் கிடந்தார்கள். உடல்களிலிருந்து வீசிய வியர்வையின் நெடியும், படுக்கையில் படிந்த லேசான ஈரமும் பொறுக்க முடியாததாக இருந்தது. என்றாலும், … Continue reading

மூங்கில் குருத்து – திலீப்குமார்

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே கோவையிலிருந்த தையல் கடைகளில் வாரக்கூலி முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. திரு.கிருஷ்ணாஜிராவ் கடையிலும் அப்படித்தான். வாராவாரம் வியாழக்கிழமை தட்டி-பாஸ் தயவில் ’குலேபகாவலி’, ‘குலமகள் ராதை’ போன்ற ஒப்பற்ற ‘திரைக்காவியங்களை’ இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டுக் கனவுக்கன்னிகளின் திரட்சிகளை மனத்திற்குள் ஆலிங்கனம் செய்து, லுங்கியைக் கறைபடியச் செய்து கெட்டுப்போய்க் கொண்டிருந்த அநேகம் கடைப் பையன்களைப் போலத்தான் நானும். அண்ணன் சென்னைக்கு ஓடித்தொலைத்தாயிற்று. அக்காவை நீலகிரியில் ஒரு எஸ்டேட் மானேஜருக்குத் தாரை வார்த்தாகிவிட்டது. அக்காவின் அழகு அவளுக்குக் கொஞ்சம் … Continue reading

>மெளனியுடன் கொஞ்ச தூரம் திலீப்குமார்

> திலீப்குமார் மெளனியைக் குறித்ததொரு ‘மெளனியுடன் கொஞ்சதூரம்’ என்றொரு விமர்சன, அறிமுக நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே …. தமிழின் நவீன இலக்கியத்தோடு பரிச்சயம் கொள்ளவரும் எவரும் முதலில் மௌனியின் எழுத்துக்களையும், அதைச் சார்ந்து ‘மௌனி’ என்ற எழுத்தாளனைப்பற்றி நிலவி வரும் ஒரு விநோதமான படிமத்தையும் உணரத் தவறியிருக்கமாட்டார்கள். குறிப்பாக 60களுக்குப்பின் மௌனியின் எழுத்துக்களும் அவற்றின் சிறப்புகளும் நம்மிடையே வெகுவாக   வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் மௌனியைப் பற்றி நாம் பொருட்படுத்தக்கூடிய தகுதி வாய்ந்த விரிவான … Continue reading

>திலீப்குமார், ஆ.மாதவன் – விருதுகள்

> ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’ திலீப்குமார் ‘விளக்கு’ இந்த வருடம் இரண்டு தேர்ந்த இலக்கியவாதிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர் திலீப்குமார் ‘விளக்கு’ அமைப்பால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர் ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’ இலக்கியவட்டத்தால் இந்த வருடம் கெளரவிக்கப்படுகிறார். திலீப்குமார், ஆ.மாதவன் இருவருக்கும் அழியாச்சுடர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. விளக்கு அமைப்பு, விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் இரண்டுக்கும் அழியாச்சுடர்கள் சார்பாக தேர்ந்த எழுத்தாளர்களைக் கெளரவிப்பதற்காக நன்றிகளும், வாழ்த்துகளும். ‘திலீப்குமார்’ குறித்த சுட்டிகள்: மெளனியுடன் கொஞ்சதூரம் – திலீப்குமார் திறனாய்வுக்கட்டுரை மாநகரகோடை – திலீப்குமார் … Continue reading

தடம் – திலீப் குமார்

கடுமையான தலைவலியுடன் நினைவு திரும்பியது. நினைவு திரும்புவதற்குச் சற்று முன்பிருந்தே வலி துவங்கியிருக்க வேண்டும். இருள் மண்டிய அந்த குறுகலான சிறைக்குள் கிடப்பதை நான் மெல்ல உணர்ந்தேன். கண்களை மெதுவாகத் திறக்க முயன்றேன். இமைகள் அசைய மெதுவாகத் திறக்க முயன்றேன். இமைகள் அசைய மறுத்தன. மீண்டும் முயன்று இமைகளை இறுக்கிக் கண்களைத் திறந்த போது நரம்புகள் இழுபட்டுக் காதோரங்களில் கடுமையான வலி ஏற்பட்டது. கொட்டடியெங்கும் பூண்டும், சிறுநீரும் கலந்தாற் போன்ற குமட்டலெடுக்கும் நெடியடித்தது. தரை  முழுதும் ஈரமாகப் … Continue reading

>திலீப் குமார்:மொழியின் எல்லைகளைக் கடந்து..-வெ.சா

> வெங்கட் சாமினாதன் இன்றைய தமிழ் இலக்கியத்தில் எழுபதுகளில், தெரியவந்த முக்கியமான பெயர்களில் ஒன்று, திலிப் குமார். அவரது தாய் மொழி குஜராத்தி என்பதும் விசேஷம் கொள்ளும் விவரம். இது ஏதும் அவரை தனியாக முன்னிறுத்தி பார்வைக்கு வைக்கும் காரியத்தைச் செய்வதாக அல்ல. இன்றைய தமிழ் இலக்கியத்தில், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சௌராஷ்டிரம், போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள எழுத்தாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் எழுத்துக்கள் மைல்கற்கள், க்ளாஸிக்ஸ் என்று சொல்லத்தக்கவை. இது இன்றைய விசேஷம் அல்ல. … Continue reading

மாநகர கோடை-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் – கதாவிலாசம் திலீப்குமார் கோடை கருணையற்றது. அது மனிதர்களைத் தங்களது இயல்பிலிருந்து மூர்க்கம் கொள்ளச் செய்துவிடுகிறது. வெருகுப் பூனை காட்டில் அலைவது போல மூர்க்கமாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறது கோடையின் சூரியன். உறங்கி எழும்போதே நாவு உலர்ந்து இருக்கிறது. தண்ணீருக்குள்ளேயே மூழ்கிக்கிடக்க மாட்டோமா என்று மனதும் உடலும் ஏங்குகிறது. மனிதர்கள் மட்டுமல்ல, ஆடு மாடுகளும் மரங்களும் கூட நீர் வேட்கையில் உடல் வெளிறிவிடுகின்றன. வீட்டின் கதவுகள் ஜன்னல்கள் யாவையும் ஊடுருவி பழுப் பேறிய வீட்டின் தரைகளை, சுவர்களைத் … Continue reading