‘எதற்காக எழுதுகிறேன்’ – தி.ஜானகிராமன்

சென்னையில் 08.04.1962ல், ‘எதற்காக எழுதுகிறேன்’ என்ற தலைப்பில் நடந்த எழுத்தாளர் கருத்தரங்கில் தி.ஜானகிராமன் வாசித்த கட்டுரை. – எழுத்து – மே 1962 ஏன் எழுதுகிறாய் என்று கேட்பது, ஏன் சாப்பிடுகி றாய் என்று கேட்பது போல. பசிக்கிறது சாப்பிடு கிறோம். உயிரோடிருக்க, சாப்பிடுகிறோம். பலம் வேண்டிச் சாப்பிடுகிறோம். ருசியாயிருக்கிறது என்று ஜிஹ்வா சாபல்யத்தினால் சாப்பிடுகி றோம். சாப்பிடாமல் இருந்தால் ஏதாவது நினைத் துக்கொள்ளப் போகிறார்களே என்று சாப்பிடுகி றோம். சில பேர் சாப்பிடுவதாற்காகவே சாப் பிடுகிறார்கள். … Continue reading

அம்மா வந்தாள்-தி. ஜானகிராமன்

அம்மா வந்தாள் நாவலின் சிறு பகுதி பகலும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. இரவும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. முதல் நாள் நினைத்தது போல் இரைச்சலாக இல்லை. கார் ஓடுகிறது. குழாய்ச் சண்டை கூச்சலிடுகிறது. எருமை ஓயாமல் கத்துகிறது. கடல் இரவெல்லாம் சீறுகிறது. கூர்க்காக்காரன் தடியால் இரவைத் தட்டித் தட்டி எழுப்பிக்கொண்டேயிருக்கிறான். கொளகொளவென்று குழாய் நீர் குறை சொல்லிக் கொண்டேயிருக்கிறது. எதிர்வீட்டுப் பையன் திண்ணையில் உட்கார்ந்து ஊர்ப் பையன்கள் எல்லாம் ஒரு குரலாகக் குவித்தது போல பாடத்தைக் கத்திக் கொண்டேயிருக்கிறான். அப்பா … Continue reading

குழந்தைக்கு ஜுரம்-தி.ஜானகிராமன்

மனைவி சொன்னதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக் கொண்டு வந்தது. “ஏண்டாய்யா, குழந்தையைக் கொடுத்தியே போதாதா? வியாதியை வேற கொடுத்து அனுப்பிச்சுருக்கியே அதை?” என்று மனசிலே சொல்லிக் கொண்டே சுவரில் அசைந்த காலண்டரை ப் பார்த்தார். அதில் பரமசிவன் மீசையும் மாடும் இரண்டு பிள்ளையுமாக உட்கார்ந்திருந்தார். வியாதி வெக்கை இல்லாத பிள்ளைகள். கழுவாத சாயங்கால மூஞ்சி மாதிரி எண்ணெய்ப் பாடம் கறுத்து மின்னும் … Continue reading

முள்முடி – தி.ஜானகிராமன்

”அப்ப எங்களுக்கு உத்தரவு கொடுக்கிறீங்களா?” என்று கண்ணுசாமி எழுந்ததும் கூடத்தை அடைத்து உட்கார்ந்திருந்த கூட்டமும் எழுந்து கொண்டது. ”நான் வரேன் சார்” ”நான் வரேன் சார்” ”சார். போய்ட்டு வரேன் சார்!” நடுவில் ஒரு பையன் அவர் காலைத்தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண் டான். சட்டென்று காலை இழுத்துக்கொண்டார் அனுகூலசாமி. ”அட. இதென்னடா தம்பி” ”செய்யபட்டும் சார். இந்த மாதிரி யார் கிடைக்கப் போறாங்க அவங்களுக்கு?. நல்லாயிருக்கணும்னு உங்க வாயாலே சொல்லுங்க நடக்கும்” என்றார் கண்ணுசாமி. அந்தப் பையனைப் … Continue reading

சிறுகதை எழுதுவது எப்படி?-தி.ஜானகிராமன்

எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் … Continue reading

சுளிப்பு – தி.ஜானகிராமன்

அந்தப் பையனை ஒரு நிமிஷம் வெறித்துப் பார்த்தார் திருமலை. சர்க்கரைக் குட்டி, பட்டுக் குஞ்சு என்றெல்லாம் கொஞ்ச வேண்டும் போலிருக்கும். அத்தனை லட்சணம். அப்படி முகக் களை. புருபுருவென்று கண். சுருள் சுருளாகத் தலையில் மயிர். ஏழு வயதுக்கான வளர்த்தி இல்லை. உடம்பு மெல்லிசுவாகு. அதனாலேயே ஒரு கவர்ச்சி.. ஐயோ! இவ்வளவு பூஞ்சையாக இருக்கிறதே என்று ஒரு பரிவுக் கவர்ச்சி. ஆனால் மண்டையில் இத்தனை களிமண்ணா! திருமலைக்கு அதுதான் ஆச்சரியம். அரை மணி நேரமாக அந்த மண்டையில் … Continue reading

வீடும் வெளியும் – தி. ஜானகிராமன்

வெகு காலமாக ஓர் ஆசை; சின்னப் பையனாக இருந்த போதே முளைத்த ஆசை – யாரும் இல்லாத ஒரு காடு; பரந்த காடு; புலி, கரடி இல்லாத காடு. அங்கே, நாணலும் புல்லும் வேய்ந்த குடிசை. அதன் வாசலில் ஓர் ஆறு – ஆற்றின் இரு பக்கமும் ஆலும் அரசும் நாவலும் வாகையும் நெடியனவாக நிற்கின்றன. ஆற்று நீர் மந்தமாக நகர்கிறது. சூரியன் மரங்களின் இடுக்கு வழியே தங்க ஊசிகளைத் தோகையாய் விரித்துக் கொண்டிருக்கிறான். ஆற்று நீரில் … Continue reading

இசைப்பயிற்சி – தி. ஜானகிராமன்

மல்லிகையை எல்லோரும் பரிகாசம் செய்தார்கள். எல்லோரும் செய்தார்களோ என்னமோ, அவருக்கு அப்படித் தோன்றிற்று. முதன் முதலாக விசாரித்தவரே பரிகாசம் செய்து, சிரித்துவிட்டுப் போனார். அதனால், பிறகு கேட்ட யாருமே கேலி செய்வதுபோல மல்லிக்குப்பட்டது.    காலையில் அவர் வழக்கம்போல ஆற்றில் குளித்துவிட்டு வந்து ஜபம், பூஜைகளை முடித்து, தோசையும், காப்பியும் சாப்பிட்டுவிட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். எட்டரை மணியிருக்கும். ஊர்க்கோடி திரும்பியதும் கூட்டுறவு மளிகைக்கடை மீது வைத்திருக்கும்  ‘ரேடியோ’ப் ‘பெனல்’ ஓய்ந்துவிட்டது. வெயில், தெரு முழுவதும் விழுந்து … Continue reading

>அக்பர் சாஸ்திரி – தி. ஜானகிராமன்

> மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும் துணிப் பையையும் நடுவே நகர்த்தி என் இடத்தில் உட்கார்ந்து பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. வெறுமனே சாப்பிடவில்லை. உருளைக் கிழங்கு ஒட்டிக் கொண்டிருந்த விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தது. குரலாவது குரல்! தொண்டைக்குள் வெண்கலப் பட்டம் தைத்த குரல், அதிகாரமும் வயசான பெருமையும் எக்களித்துக் கொண்டிருக்கிற குரல். ”எக்ஸைஸ் இலாக்கான்னா என்ன டெஸிக்னேஷன்?’ என்று எக்களிப்பும் அழுத்தமுமாக … Continue reading

>சிலிர்ப்பு – தி. ஜானகிராமன்

> திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது. மாயவரத்தோடு நின்றுவிடும். பத்தரை மணிக்குத் தொடங்கி மூன்று மணியோடு அதன் வாழ்வு முடிந்துவிடும். மதுரை, மானாமதுரை, ஈரோடு என்று எல்லா வண்டிகளையும் அனுப்பிவிட்டு திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் புயல் புகுந்து விளையாடின தோப்பைப் போல, ஒரே வெளிச்சமாக ஹோவென்று வெறிச்சிட்டுக் கிடந்தது. வாழைத்தொலி, ஆரஞ்சுத்தொலி, எச்சில் பொட்டணம், தூங்குமூஞ்சிகள்- இவற்றைத் தவிர ஒன்றையும் காணவில்லை. வண்டி புறப்பட இன்னும் அரைமணிதான் இருக்கிறது. எஞ்சின், கார்டு, ஒன்றும் வரவில்லை. வண்டிக்கு வண்டி ஒரு … Continue reading