உலகம் ஆரம்பிக்கும்-தேவதச்சன்

.   காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை காற்றில் அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில் காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன வெட்ட வெளியில் ஆட்டிடையன் ஒருவன் மேய்த்துக் கொண்டிருக்கிறான் தூரத்து மேகங்களை சாலை வாகனங்களை மற்றும் சில ஆடுகளை.   உலகம் ஆரம்பிக்கும் உலகம் ஆரம்பிக்கும் ஓசைகள் கேட்கின்றன சிலபல குரல்கள் மோதி பாறை சிலையாகி சிலபல குரல்கள் மோதி சிலை பாறையாகி தெருவில் ரெண்டு பிள்ளைகளை சிறகுகள் என … Continue reading

தேவதச்சன் கவிதைகள்

1. உபயோகமில்லாத பொருட்கள் எதையாவது எப்போதாவது நீ கையால் தொடுகிறாயா உபயோகமற்ற பொருட்கள் ஒரு விலங்கைப் போல் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கின்றன. அகிலம் எல்லாம் அசைந்து கொண்டிருக்கும்போது அவைகள் அசைவற்று நிற்கின்றன.  நாளைக்காலை, இந்தக் கனியின் தோல் குப்பைக் கூடையில் கிடக்கும் அப்போது அது காணும் கனவுகளிலிருந்து அதுவும் தப்பிக்க முடியாமல் போகும், மூலைக்கு மூலை தள்ளி விடப்பட்ட முதியவர்கள் போல. எனினும் நம் விரல்களுக்கு, ஏதோ வினோத சக்தி இருக்கிறது உபயோகமற்றபோதும், உடைவாளை சதா பற்றிக் கொண்டிருக்கிறது … Continue reading

>அத்துவான வேளை – தேவதச்சன்

> தேவதச்சன் கவிதைகள் நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன் ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன சட்டையை தொளதொள வென்றோ இறுக்கமாகவோ போடுகிறாய் தலைமுடியை நீளமாகவோ குறுகவோ தரிக்கிறாய் உன்னிடமிருந்து பறந்து சென்ற இருபது வயது என்னும் மயில் உன் மகளின் தோள் மீது தோகை விரித்தாடுவதை தொலைவிலிருந்து பார்க்கிறாய் காலியான கிளைகளில் மெல்ல நிரம்புகின்றன, அஸ்தமனங்கள், சூரியோதயங்கள் மற்றும் அன்பின் பதட்டம் * கைலாசத்தில் புதரோரம் ஒட்டாமல் கிடந்த சிவனின் இடது பாகமும் பார்வதியின் வலதும் … Continue reading

>சப்தமும் நிசப்தமும் -தேவதச்சனின் கவிதை-பாவண்ணன்

> எல்லாப் பூங்காக்களிலும் காலைநடைக்காகவென்றே சதுரக்கற்கள் அடுக்கப்பட்டு செப்பப்படுத்தப்பட்ட வட்டப்பாதைகள் இப்போது உருவாகிவிட்டன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவை அனைத்தும் வெறும் ஒற்றையடிப்பாதையாகவே இருந்தன. அந்த நாட்களில் பூங்காவில் ஒரு பெரியவர் எனக்கு அறிமுகமானார்.எழுபதை நெருங்கிய வயது.மெலிந்த தோற்றம். படியப்படிய வாரிய அவருடைய வெளுத்த தலைமுடிக்கோலம் வசீகரமானது. இரண்டு அல்லது மூன்று சுற்றுகள்மட்டுமே நடப்பார். வேகநடையெல்லாம் கிடையாது. எல்லாத் திசைகளிலும் வேடிக்கை பார்த்தபடி மெதுவாகவே செல்வார். பிறகு, ஒரு மஞ்சட்கொன்றை மரத்தடியில் போடப்பட்டிருக்கும் சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்துகொள்வார். … Continue reading

>அன்பின் எழுத்துகள்-தேவதச்சன்

> குருட்டு ஈ ஆஸ்பத்திரியில் வெண்தொட்டிலில் சுற்றுகிறது இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின் மூச்சொலி பார்க்கப் பயமாக இருக்கிறது சுவரில் தெரியும் பல்லி சீக்கிரம் கவ்விக் கொண்டு போய்விடாதா என் இதயத்தில் சுற்றும் குருட்டு ஈயை ** பரிசு என் கையில் இருந்த பரிசை பிரிக்கவில்லை. பிரித்தால் மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது என் அருகில் இருந்தவன் அவசரமாய் அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல் மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும் பரிசு அளித்தவனோடு விருந்துண்ண அமர்ந்தோம் உணவுகள் நடுவே … Continue reading

>கல் எறிதல்-தேவதச்சன்

> வானவில்கள் அது நிறங்கள் அடர்த்தியாகிக் கொண்டுவரும் வானவில். என் வீட்டின்மேல் அழகாய் வட்டமிடத் தொடங்கியது “எவ்வளவு பெரிய வில். உள்ளே வந்தால் வீடு  உடந்துவிடும்தானே” என்கிறார்கள் உறவினர்கள் “வில்லும் உடைந்துதானே போகும்” என்கிறார்கள் நண்பர்கள் கண்ணில் வழிந்தோடு குமிழிகளில் தானே வளர்கிறது சப்தத்தைக் கடந்த அன்பில் வில் தோன்றித் தோன்றி மறையும் சாலைகளாக வளைந்திருக்கும் வானவில்லுக்குள்ளே இருக்கிறது என் ஊர். ஊருக்குள்ளே இருக்கிறது என் வீடு, எப்போதும் கதவுகள் மூடியிருக்கும் என் சின்னஞ்சிறிய வீடு கல் … Continue reading

தேவதச்சனின் கவியுலகம்-எஸ். ராமகிருஷ்ணன்

எஸ். ராமகிருஷ்ணன் கவிதை சொற்களால் உருவாக்கபட்டிருந்த போதும் சொல்லைக் கடந்து செல்வதே அதன் முக்கியப் பணியாக இருக்கிறது. சொற்களை அது முடிந்த ஒன்றாக கருதுவதேயில்லை. மாறாக சொல்லை அதன் நேரடி அர்த்தம் சார்ந்து மட்டும் பிரயோகம் செய்யாமல் சொல்லுக்கும் பொருளுக்குமான இடைவெளியை, சாத்தியப்பாடுகளையும் எதிர்நிலைகளையும் உருவாக்க விளைகிறது. கவிஞன் கவிதையின் வழியாக உலகை ஒன்றிணைக்கவும் சிதறடிக்கவே ஒரே நேரத்தில் விரும்புகிறான். காட்சிகளையும் சப்தத்தையும் படிமங்களையும் கொண்டு உலகின் மீதான தனது வேட்டையை நிகழ்த்துகிறான். கதையாசிரியனைப் போல அவன் … Continue reading