தேவதேவன் – நேர்காணல்

‘சிற்பி இலக்கிய விருது’ பெற்றுள்ள தேவதேவனின் இயற்பெயர் பிச்சுமணி கைவல்யம்.வயது 51.ஆசிரியராக பணிபுரிகின்றார்.அம்ருதா , அரவிந்தன் என்று இரண்டு குழந்தைகள். பள்ளியிறுதிவரை படித்தபின் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார்.வேலை கிடைக்காத்தினால் தன் வீட்டின் ஒரு பகுதியிலே அச்சகம் வைத்து நடத்தினார்.அதிகமான அறிமுகம் இல்லாத நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் வீட்டை பிணையாக்கினார். கடன் வாங்கிய நண்பர் ஒடிப்போனபின் வங்கி அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு , நீதி மன்றத்திற்கு அலைந்து இறுதியாக பெருந்தொகை கொடுத்து தன் வீட்டை பிணையிலிருந்து மீட்டார். … Continue reading

தேவதேவனுக்கு விஷ்ணுபுரம் விருது 2012

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது. 22- 12-2012 அன்று மாலை கோவையில் விழா நிகழ்கிறது. இது விஷ்ணுபுரம் அமைப்பின் மூன்றாவது விருது. முதல் விருது 2010-இல் எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது விருது 2011-இல் எழுத்தாளர் பூமணிக்கு வழங்கப்பட்டது. ஒரு சிறு குருவி என் வீட்டுக்குள் வந்து தன் கூட்டை கட்டியது ஏன் ? அங்கிருந்தும் விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ? பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து … Continue reading

தேவதச்சனுக்கு விளக்கு விருது

நவீனத் தமிழ்க் கவிதையின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான தேவதச்சனுக்கு 2010ஆம் ஆண்டுக்கான ‘விளக்கு’ விருது வழங்கப்படுகிறது. நாற்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் அடங்கிய விருது இது. அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பான ‘விளக்கு’ புதுமைப்பித்தன் நினைவாக வழங்கும் இந்த விருதை இதுவரை தமிழின்  முக்கியமான இலக்கியவாதிகளான சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா  ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், … Continue reading

விண்ணோக்கிச் செல்வதும்-தேவதேவன்

விண்ணோக்கிச் செல்வதும் விண்ணோக்கிச் செல்வதும் விண்ணை உணர்வதும் மண் நோக்கியே பொழிவதும் மழை நீர்த்தேக்கங்கள் என நின்று நிதானித்து மண்ணைக் குளிர்வித்தபடியே விண்ணையே நெஞ்சில் நிறைத்து விண்ணோக்கியே கிடப்பதும் அனைத்து உயிர்களையும் காதலின்பத்தாற் களிகொள்ளச் செய்வதுமேயன்றோ நம்மை வாழ்விக்கும் நம்முடைய ஒரே செயல்! சிறுவர் உலகம் கல்லெறிபட்டும் (ஒரு சின்னக்கலசல் பதற்றம், வலி அவ்வளவே) கலங்காது தேனையே சொரிகிறது தேன்கூடு கொடுவனம் தன்னந்தனியே ஒரு காட்டிடையே நிற்க நேர்ந்துவிட்டதா என்ன? நன்பகல் வேளையிலும் இரவின் ஒலியுடன் இருண்டு … Continue reading

>புலியின் தனிமை-தேவதேவன்

> 1] விரும்பினேன் என் தந்தையே பேயோ தெய்வமோ எந்த ஓர் அச்சம் ஆட்டிப்படைத்தது உம்மை என் தந்தையே நீ படித்தது போதும் எல்லாரும் மேற்படிப்பு படித்தேகிவிட்டால் இருக்கும் பிற வேலைகள் எல்லாம் யார் செய்வார் என்றறைந்தீர். கடும் உழைப்பை அஞ்சினேனா ? கூட்டாகப் புரியும் பணிகளிலே இருக்க வேண்டிய தாளம் இல்லாமை கண்டு அஞ்சினேனா ? விரும்பினேன் நான் என் தந்தையே விண்ணளவு பூமி விரிந்து நிற்கும் நிலங்களிலே ஆடுகள் மேய்த்து புதர்நிழலில் களைத்து அமர்ந்து … Continue reading

>ஓடும் இரயில்வேகம் தொற்றி-தேவதேவன்

> தேவதேவன் ஓடும் இரயில்வேகம் தொற்றி ஓடும் இரயில் வேகம் தொற்றி அதிர்ந்தன சப்தநாடிகளும் அதன் வழியில் அவன் இனி குறுக்கிட முடியாது? புவி முழுமையையுமாய் அடக்கி நெரித்தபடி விரைந்து நெருங்கிக்கொண்டிருக்கும் ஆபத்தை நேர்நின்று பார்த்தவனாய் அதிர்ந்தன அவன் சப்தநாடிகளும். உடைந்த ஆற்றுப்பாலம் கண்டு மூச்சிரைக்க ஓடிவந்து நின்று ஆபத்துக்கு ஆபத்துரைக்கும் அறியாச் சிறுவர்கள்போலும் வாழ்ந்து முடிவதில் என்ன பயன்? இதயத்திலிருந்து பாய்ந்து விரிந்து நின்ற கைகளும் கால்களும் தலையுயாய் குறுக்கிட்டு மடிவதன்றி என்ன வழி? வாள்போலும் … Continue reading

>பறவைகள் காய்த்த மரம் – தேவதேவன்

> தேவதேவன் 1 ] பனைகள் பனைகளின் தலைகளெங்கும் பறவைகளின் சிறகுகள் பச்சைப்பனைகளின் நடுவே ஒரு மொட்டைப் பனை மொட்டைப்பனை உச்சியிலே ஓர் பச்சைக்கிளி அடங்கிவிட்டது ‘மரணத்தை வெல்வோம் ‘ என்ற கூச்சல் மரணமும் வாழ்வாகவே விரும்புகிறது இனி இங்கே நான் செய்யவேண்டியதுதான் என்ன ? ‘நானே தடைகல் ‘ஆகும்வழியறிந்து வழிவிடுவதை தவிர ? பனைகளின் தலைகளெங்கும் படபடக்கும் சிறகுகள் பாவம் அவை பூமியில் மரணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ளன. 2] ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை ஒரு மரத்தடி … Continue reading

>குருவியுடன் சற்று நேரம் -தேவதேவன்

> தேவதேவன் 1] மழை பெய்து அப்போதுதான் முடிந்திருந்தது அனைத்தும் முழுமுற்றாய் தூய்மைசெய்யப்பட்டு பளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை நித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன் அப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல வானளாவிய சூனிய வெளியெங்கும் என் பார்வையை இழுத்தபடியே பறந்துகொண்டிருந்த பறவை அதில் அமர்ந்திருந்தது அதன் கூரிய கூச்சமுள்ள கால்விரல்களில் காலம் ஒரு செத்த எலி 2. குருவியுடன் சற்று நேரம் நான் அதைப்பார்த்து புன்னகைத்தவுடன் அது கேட்டது ‘என்ன செய்துகொண்டிருக்கிறாய் ? ‘ ‘ஒரு கவிதையை … Continue reading

>தேவதேவன் கவிதைகள் : வீடு

> தேவதேவன் 1. வீடும் வீடும் பாதுகாப்பற்ற ஒரு மலரின் கதகதப்பிற்குள் பாதுகாப்புடன் இருக்கிறேன் என்னை ஆசுவாசப்படுத்த முயலும் இந்த வீடு ஒருகாலத்தில் என்னை ஓய்வு கொள்ள விடாது வாட்டி எடுத்த ஓட்டைக் குடிசையிலும் குளிருக்குப் பற்றாத அம்மாவின் நைந்தநூல்சேலையிலும் உருக் கொண்டது எப்போதும் நம் லட்சியமாக இருக்கும் இவ்வுலகம் பற்றிய கனவு நம்மில் ஒருக்காலும் இதுபோல கருக்கொண்டதில்லை என்பதை நான் அறிவேன் மலரோடு தன் வேலை முடிந்ததும் விலகி வெளி உலாவும் கருவண்டைப்போல நாம் ஒருக்காலும் … Continue reading

தேவதேவனின் கவிதையுலகம்-ஜெயமோகன்

ஜெயமோகன் தமிழ் கவிதையுலகில் தேவதேவனின் இடம் அனேகமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று . முற்றிலும் ஆரவாரமற்ற , எப்போதும் விசித்திரமான தனிமை சூழ்ந்த , இந்த மனிதர் கடந்த 20 வருடங்களாக எழுதி வருகிறார்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர். சகஜமாக பேசவோ , மற்றவர்களிடம் உரையாடவோ முடியாத ஒரு விசித்திரமான அந்தரங்கத் தன்மை உடையவர் . குறிப்பாகச் சொல்லப்போனால் அவர் தன் கவிதைகளை சம்பந்தப்படுத்தாமல் எதையுமே பேசுவது இல்லை. இலக்கிய விஷயங்கள் மட்டுமல்ல ,சாதரண அன்றாட விஷயங்கள் கூட … Continue reading