வந்தான்,வருவான்,வாராநின்றான் – நாஞ்சில்நாடன்

ஜீன்மாத மழையில் நனைந்து கொள்ளலாம் என மே மாத வெயில் சாலைகளையும் உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களையும் சாக்கு படுதாவும் பாலிதீன் கூரையும் வேய்ந்த குடிசைகளையும் ஓட்டுக்கூரை வரி வீடுகளையும் பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தது.அபூர்வமாய் தென்பட்ட மரங்களின் நாசித் துவாரங்களில் எல்லாம் தூசி அடைத்துக் கொண்டு வெயில் அதனை இறுக்கிக் கொண்டிருந்தது. காலை ஒன்பது மணி முதல் மதியம் இரண்டு மணி வரை வெயிலில் அலைவதென்பது அன்றாடம். தலையில் இருந்து மயிர்க்காடுகள் வழியாக நீரூற்றுக்கள் வழிந்தன. அன்று வெயில் … Continue reading

நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது 2012

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுத்துரை , எஸ்.ராமகிருஷ்ணன் … Continue reading

>பிராந்து – நாஞ்சில் நாடன்

> ஒற்றை வேட்டியும் தலைமுண்டும்தான் அங்கு சீலம். வேலை நடக்கும்போது வேட்டியைத் தார் பாய்ச்சிக் கட்டியிருந்தால் மற்ற சமயங்களில் மடித்துக் கட்டுவதுண்டு. வேலை செய்யும்போது தலையில் கட்டப்பட்டிருக்கும் துவர்த்து பிற சமயங்களில் தோள்மீது கிடக்கும் ஒரு பக்கமாகவோ இரண்டு பக்கங்களிலும் கண்டமாலை போலவோ. கல்யாணம், சடங்கு, பால்காய்ச்சு, சீமந்தம் எ ன்று போகும்போது வேட்டியும் துவர்த்தும் வெளுத்து மடித்ததாக இருக்குமே தவிர வேறு விசேடமான ஆடை அணிகலன்கள் கிடையாது. கேடயம் போன்ற மோதிரங்கள், தவில் வித்வான் அணிவது … Continue reading

இடலாக்குடி ராசா – நாஞ்சில் நாடன்

‘இடலாக்குடி ராசா’ என்றால் எல்லோருக்கும் ஒரு இளக்காரம். வெள்ளாட்டு மறியைப் பார்த்தாற்போல. வாயால் ‘புர்ர்ர்..’ என்று ஒலியெழுப்பி மருட்டும் விளையாட்டு. முன்னங்கால் கறண்டையில் முறுக்கிய துணிப்பிரியால் கட்டு. உராய்ந்து உராய்ந்து முட்டிகளின் சதைந்த செம்புண் பின்காலில் ஒவ்வொரு முறை இடம் பெயர்கையிலும் முன்னங்கால்களைத் தூக்கித் தூக்கித் தத்தித் தாண்டும் பெட்டைக் கழுதையைக் கண்ட பரிதாபம்.  ராசாவின் தோற்றம் வாட்டசாட்டமாக, தாள் தொடு தடக்கையொடு ராஜா போல்தான் இருக்கும்.  ஐந்தே முக்காலடி உயரம். காலில் செருப்பு இல்லாமல் கருமருதுப் … Continue reading

>நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது

> இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்காக எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாஞ்சில் நாடனின் ”சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதை தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். நாஞ்சில் நாடன் படைப்புகள் நாஞ்சில் நாடன் இணையத் தளம் சூடிய பூ சூடற்க கிடைக்குமிடம்; தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயாப்பேட்டை, சென்னை..6000014 தொலைபேசி: +91-9884196552 இணையத்தில் வாங்க  : உடுமலை.காம்

நடுகற்களும் நடைகற்களும்-நாஞ்சில் நாடன் கவிதைகள்

நாஞ்சில் நாடன் கவிதைகள் (தேர்வு ஜெயமோகன்) இந்தியரும் எம்மக்களும் உச்சரிக்கவியலாத ஊர்திகள் இராத்தங்க இருபதினாயிரம் வாடகை வான்வழிப்பயணம் கைக்கடிகாரம் காற்சட்டை மேற்சட்டை காலணிகள் கண்ணாடி எண்பதினாயிரம் அக்குள் நாற்றம் மறைக்க ‘தெளிப்பான் ‘ கணிப்பொறி முன்வலை கம்பியில்லாபேசி பிறந்தநாள் மணநாள் காதலர் தினம் புத்தாண்டு ஆயிரத்தாண்டு விழக்கள் காதல்காட்சிக்கும்கனவுக்காட்சிக்கும் மூன்றேகால் கோடி கிரிக்கெட் போரில் கார்கில் போட்டியில் தேசப்பற்று அவிழ்த்துப்போட்டு ஆடும் இந்தியர் கட்டைவண்டியிலும் கால்நடையாகவும் வரப்போ தலைக்காணி வாய்க்காலே பஞ்சுமெத்தை குடிநீர் சுமந்து குடிசைசேர சூரியன் … Continue reading

>இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன்

>       அவன் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது! “வைத்தியன்’  என்ற பெயராலேயே சிறுவர் முதல் பெரியவர் வரை அவனை அழைத்தார்கள். ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பார்த்தால் தெரியலாம். அவன் பெயரைக் கண்டுபிடிக்கும் சிரமம் மேற்கொள்ளாமல் செத்துப்போன கொம்பையாத்தேவர் சார்பிலோ, அல்லது நாடு விட்டுப் போன நல்லத்தம்பிக் கோனார் சார்பிலோ தான் அவன் ஓட்டுப்  போட்டிருக்கிறான். ஆனால் இப்போது ஊராட்சித் தலைவர் தேர்தலில் இது சாத்தியமில்லை. ‘உருளை’ சின்னமுடைய உமையொரு பாகன் பிள்ளையும்,  ‘பூசணிக்காய்’ … Continue reading

எலும்பில்லாத நாக்கு – எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் – கதாவிலாசம் நாஞ்சில் நாடன் மதுரை பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த நாட்களில், ரயில்வே நிலையத்தின் வெளியே உள்ள பிளாட்பாரத்தில் உள்ள இட்லிக் கடைகள் தான் எங்களது பசியாற்றுமிடங்கள். நான்கு நட்சத்திர ஓட்டல், ஐந்து நட்சத்திர ஓட்டல் என்பதெல்லாம் இவற்றின் முன் தூசி. (அங்கே இரவில் மர பெஞ்சில் உட்கார்ந்தபடி, கையில் இட்லித் தட்டை வாங்கிக்கொண்டு அண்ணாந்து பார்த்தால், வானில் நூறு நட்சத்திரங்கள் தெரியும்.) மதுரை, ருசி மிக்க உணவுக்குப் பெயர் பெற்ற ஊர். இரவில் … Continue reading

நாஞ்சில் நாடன் – நேர்காணல்

‘‘கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாகப் பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது தலைமுறைகள். கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள். அழுகை வரவில்லையா உங்களுக்கு? எனக்கு வருகிறது. நடிகனைத் தொட்டுப் பார்க்க விரும்பியவர்கள் நாம், நடிகையைக் கோயில் கட்டி கும்பிட்டவர்கள் நாம், கவர்ச்சி நடிகை குடித்து மிஞ்சம் வைத்த … Continue reading

சிறியன செய்கிலாதார்… – நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் பேராசிரியர் த மு பூரணலிங்கனார் கனவை பேராசை என்று துணிய முடியாது. ஒருகையில் நின்று யோசிக்கையில் இந்த டாக்டர் பட்டம் அவரது புலமைக்கு அநாவசியம் என்று தோன்றும்.அவர்க்கென தனியான பெருமையை இது எங்கே சேர்த்து விடபோகிறது ? மறு பக்கம் நின்று யோசிக்கையில் அவருடைய கல்வித்தகுதிகளில் மகுடம் வைத்தது போல இது அமையலும் ஆகும். மாடன் கோயில் பூசாரி மகன் மெடிக்கல் காலேஜ் பற்றி யோசிக்கும் சமத்துவம் அன்றும் வந்திருக்கவில்லை.எனவே லோகல் தமிழ்ச் சங்கத்தில் … Continue reading