நீல.பத்மநாபன்-நேர்காணல்

தமிழில் மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான நீல. பத்மநாபன் தமிழில் ஓர் அசலான படைப்பாளி. இதுவரை ”தலைமுறைகள்’” ”தேரோடும் வீதி” ”பள்ளிக் கொண்டபுரம்” ”உறவுகள்” உள்ளிட்ட இருபது நாவல்களும், 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். இதில் ஒரு நாடகத்தையும் சேர்த்துக் கொள்வது அவசியம். 2004-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்ற இவர், தமிழிலிருந்து ஆங்கிலம், மலையாளத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்ப்புகளிலும் இயங்கி வருகிறார். திருவனந்தபுரத்தில் 1938-ல் பிறந்த நீல.பத்மநாபன் மின்வாரியத்துறையில் இன்ஜினீயராக இருந்து … Continue reading

சண்டையும் சமாதானமும் – நீல. பத்மநாபன்

தமிழ்நாட்டு எல்லைகளுக்கப்பாலிருந்து தமிழ் இலக்கியம் படைப்பவர்களுள் மிகுந்த கவனமும் பாராட்டும் பெற்றவர் நீல. பத்மநாபன். (பிறந்த தேதி: 26-4-1938) பன்னிரண்டு நாவல்களும் ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் ஒரு கவிதைத் தொகுப்பும் ஒரு கட்டுரைத் தொகுப்பும் நூல் வடிவில் வெளிவந்துள்ள இவருடைய படைப்புகள். ‘தலைமுறைகள்’ (நாவல், 1968) ஆங்கிலம், மலை யாளம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. ‘பள்ளிகொண்டபுரம்’ (நாவல், 1970) நேஷனல் புக் டிரஸ்டின் ஆதான் பிரதான் திட்டத்தின் கீழ் இதுவரை ஹிந்தி, உருது, மலையாளம் … Continue reading

>நைவேத்தியம்-நீல பத்மநாபன்

> கை நீட்டினால் தொட்டுவிட முடியும் அளவுக்குப் பக்கத்தில் வந்துவிட்டதைப் போன்ற விரிந்த வானம். அதிகாலையில் குனிந்து நின்று தெரு மெழுகிவிட்டு நிமிர்ந்தபோது தலையில் இடித்த வானத்தை, எட்டாத உயரத்துக்குப் போய்த் தொலை என்று சபித்து விரட்டிய பொக்கை வாய்க் கிழவியின் கர்ண பரம்பரக் கதை ஞாபகம் வர, வானததை வெறித்தபடி கோயில் முன் அரசமர மேடையில் மல்லாந்து கிடந்தார் லக்ஷ்மிநாராயணன் போற்றி. இந்த வானத்தில் ஏன் இன்று இப்படியொரு இருள். சூன்யம்……விக்கிரகமோ, விளக்கோ இல்லாத  கர்ப்ப … Continue reading

”இன்றைய கவிதையை விளக்க இன்னொருவர் தேவை”-நீல. பத்மநாபன்

எழுத்தாளர் நீல.பத்மநாபன் 1938-ம் ஆண்டு பிறந்தவர். கேரள மாநில மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவரது படைப்புகளில் மண்ணின் தன்மையும், மக்களின் யதார்த்த வாழ்வையும் காணலாம். ”உதயதாரகை” இவர் எழுதிய முதல் நாவல். ஆனால் இவர் பேசப்பட்டது இவரின் நான்காவது நாவலான ‘தலைமுறைகள்’ மூலம்தான். அடுத்தது ‘தேரோடும் வீதி’. இது அவரின் சுயசரிதை என பலர் சொல்வதுண்டு. ஆனால் அவர் இதனை மறுத்து வருகிறார். அண்மையில் தி.ஜானகிராமனின் இலக்கியப் படைப்புகள் பற்றிய விவாதத்திற்காக சென்னை வந்திருந்தபோது, அம்பலம் … Continue reading

>மண்ணின் மகன்-நீலபத்மநாபன்

> வெறிச்சோடிய விரிந்து பரந்த இந்த வானும் கரையில் வந்து மோதி திரும்பிச் செல்லும் அலைகள் எழுப்பும் ஓசையும் இதற்கு முன்பே பழக்கப்பட்டிருப்பதைப்போன்ற ஒரு பிரமை… வேலை மாற்றலாகி, முதல் முறையாய் வந்திருக்கும் இந்த இடம் இதற்கு முன்பே பரிச்சயமானதாய் தோன்றும் இந்த விசித்திர மனமயக்கம்… ? பஸ்ஸிலிருந்து இந்தக் கடற்கரையில் இறங்கி, ஆபீஸ்உம், குவார்ட்டர்ஸ்உம் ஒன்றாய் இயங்கும் அதோ தெரியும் சிறு கட்டிடத்தில் போய் பெட்டி படுக்கையைப் போட்டு விட்டு இங்கே வந்து இப்படி உட்கார்ந்திருக்கையில்… … Continue reading

>பயம்-நீல. பத்மநாபன்

> அவன் நெஞ்சுக்குள் பிரேத மூட்டையாய் பயம் கனத்தது. உள்ளே எப்படியோ புகுந்து கொண்டு வெளியேறத் தெரியாத கரப்பான் பூச்சியைப் போல் பயம் அகத்தை குடைந்தெடுத்துக் கொண்டிருந்தது. கன்னங்கரிய இருளில் நிர்வாணமாய் நிற்கும் இயற்கைக் கன்னியை விழிகளால் துழாவியபடி சிட் அவுட்டில் அவன் உட்கார்ந்திருந்தான். அவள் தடித்த காமபீடத்தின் உள்நுனியாய் வெகுதொலைவில் செந்தீ அடிக்கடி தெரிந்து மறைந்து கொண்டிருந்தது. காற்றில் லேசாய் அவனுக்குப் பழக்கமான அந்த மனிதசதை, மயிர் கரியும் நெடி… புது வீடு கட்ட மனசுக்குள் … Continue reading

>கூறாமல்-நீல. பத்மநாபன்

>   இனியும் தாமதிக்க முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக உணர்ந்தார். சென்ற சில மாதங்களாய், ஆண்டுகளாய் பல சந்தர்ப்பங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளில் உறைந்த சங்கதிதான். இருந்தும், தவிர்த்து தவிர்த்து, உள்ளத்தையும் ஐம்புலன்களையும் சிறுகச் சிறுக பக்குவப்படுத்திக் கொண்டிருந்ததெல்லாம் இனி முழு மூச்சாய் செயலுக்குக் கொண்டு வந்து விடவேண்டியதுதான். சோவென்று தகர்த்துப் பெய்யும் அடைமழை… இந்த மத்தியானப் பொழுதை மூவந்திக் கருக்கலாய்க் காட்டும் மழை மேகங்கள். மாடியில் இங்கே தன்னுடைய இந்த சின்னஞ்சிறிய தனி அறையில் … Continue reading

>அரிசி – நீல. பத்மநாபன்

> நீல. பத்மநாபன் சற்றுத் தொலைவில் நீரில் துடுப்புகள் சலசலக்கும் ஓசை… காலூன்றி நின்ற வையத்திலும், அண்ணாந்து பார்த்த வானிலும் இருள்தளம் கெட்டி நிற்கையில், விருட்சங்களுக்கு மட்டும் எப்படித் தோற்றம் இருக்க முடியும்? மண்ணிலும் காற்றிலும் ஈரம் சொட்டுகிறது. அடுத்த மழை எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம்… மேற்குவான்மூலையில் அடிக்கடி மின்னலின் மின்சார வீச்சு… அதோடு இடியோசையும் சடசடவென்கிறது. நெய்யாற்றில் மழை வெள்ளம் குமுறிக் கொந்தளித்து, ஆர்ப்பரித்து ஓடி, இங்கே பூவாறில் வந்து சேருகையில் சமுத்திரம் போல், பரந்து … Continue reading

>சித்த சுவாதீனம் – நீல பத்மநாபன்

> நீல பத்மநாபன் இன்னும் இரண்டொரு மணி நேரத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த என் ஓவியக் கண்காட்சி முடிந்து விடப்போகிறது. இன்றிரவு ரயிலிலேயே ஊர் திரும்பிவிடப் போகிறோம். இந்த ஊரிலேயே இருப்பதாய் கேள்விப்பட்ட வித்யாசாகரை எப்படியும், ஒரே ஒரு முறையாவது சந்தித்துவிட முடியும் என்று நெஞ்சம் நிறைந்திருந்த ஆசை அபிலாஷை எல்லாம் வெறும் நீர்க்குமிழிகளாய் பொசுபொசுத்துப் போய்விடுமோ ‘ கண்காட்சியைப் பார்த்துவிட்டு திரும்புகிறவர்கள் வீல் சேரில் இருக்கும் என்னிடம் வந்து ராஜஸ்தானியிலும், இந்தியிலும் தெரிவிக்கும் பாராட்டுரைகள்….. … Continue reading

நீல பத்மநாபனின் நாவல்கள் – ஜெயமோகன்

ஜெயமோகன் நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை [ஒன்று] தமிழிலக்கியத்தில் நுழையும் ஒரு வாசகன் நீலபத்மநாபனைப்பற்றி குழப்பமான ஒரு சித்திரத்தையே அடைவான் . அவரது பெயர் அதிகமாக எங்குமே மேற்கோள் காட்டப்படுவது இல்லை.அவரது படைப்ப்புக்கள் பேசப்படுவதுமில்லை. அவரைப்பற்றி பொதுவான கருத்தைக் கேட்டால் கணிசமான சமகால வாசகர்கள் அவர் தமிழிலக்கியத்தின் கடந்தகாலத்து நினைவுகளில் ஒன்று மட்டுமே என்று சொல்லவும் கூடும். இன்று அவருடைய படைப்புகள் ,அவரது பாணி ஏதும் அவ்வளவு முக்கியமில்லை என்ற எண்ணம் பரவலாக உள்ளதை அவன் … Continue reading