நீர்மை – ந. முத்துசாமி

மூத்த உள்ளூர்க்காரர்களையும் எப்போது அறிமுகமானார்கள் என நினைவு கொள்ள முடிவதில்லை. ஒருவன் தன் தாயையும் முதல் அறிமுகம் எப்போதென்ற பிரக்ஞையின்றிப் போகிறான் ஆனால், அவள் எனக்குச் சாலைக்குளத்திலிருந்துதான் அறிமுகமாயிருக்க வேண்டுமென நிச்சயமாக இருந்தாள். எல்லாவற்றிலும் ஆச்சரியம் கொள்ளும் குழந்தைக்கு குளிக்கிறவள் என்று விநோதமற்றுப் போகாமல் அவள் நடுக்குளத்தில் தனித்துத் தென்பட்டிருப்பாள். நரைத்த பனங்காயைப் போல அவள் தலைமிதந்து அலைந்து அவளென்று தெரிய  இருந்திருக்கும். அவள் தன் பத்தாவது வயதில் வீணானவள். இறக்கும்போது அவளுக்கு வயது தொண்ணூறுக்கு மேல். … Continue reading

ந.முத்துசாமி உடல் மொழியின் நாடகம் – எஸ்.ராமகிருஷ்ணன்

கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் போது சாமுவேல் பெக்கட்டின் வெயிட்டிங் பார் கோதோ வாசித்தேன். அதுவரை நவீன நாடகம் என்பதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அந்த நாடகம் வாசிப்பதற்கு மிகுந்த ஆர்வமுடையதாக இருந்தது. அதை எப்படி மேடையேற்றியிருப்பார்கள் என்பதைப் பற்றி எனது பேராசிரியர்களில் ஒரு வரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் லண்டனில் நடந்த நாடகவிழா ஒன்றில் நிகழ்த்தப்பட்ட கோதோ நாடகத்தின் வீடியோவைக் காண்பதற்குத் தந்தார். நான் வாசித்த பிரதிக்கும் நிகழ்த்தபட்ட நாடகத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருந்தது. நிகழ்த்தப்படும் வெளி … Continue reading

ந.முத்துசாமிக்கு பத்மஶ்ரீ விருது

    நாடக ஆசிரியரும், கூத்துப்பட்டறை இயக்குனரும், சிறுகதை எழுத்தாளருமான ந.முத்துசாமிக்கு இந்த வருடத்தின் பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகள். ந.முத்துசாமி:நரையேறும் காலம்: எஸ்.ரா இழப்பு – ந. முத்துசாமி

>ந.முத்துசாமி:நரையேறும் காலம்: எஸ்.ரா

> ‘நரையேறும் காலம்’- கதாவிலாசம்- எஸ்.ராமகிருஷ்ணன் காலை நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது வழியில் தினமும் அவர்கள் மூவரையும் பார்ப்பேன். எழுபது வயதான ஒரு பெரியவர், நாற்பது வயதான குள்ளமான மனிதர், பதினாறு வயதுப் பையன். மூவரும் ஒரே விதமான ஷ¨, வெள்ளை நிற பேன்ட், டி&ஷர்ட் அணிந்திருப்பார்கள். அவர்களில் குள்ளமானவர் வழி முழுவதும் பேசிக்கொண்டே வருவார். பதினாறு வயது பையன் அவர்களோடு நடப்பதை விலக்கி தனியே ஓடத் துவங்கிவிடுவான். அப்போது நடுத்தர வயதுக்காரர் சப்தமாக ‘கோவிந்த் வெயிட்’ என்று … Continue reading

>இழப்பு – ந. முத்துசாமி

> ந. முத்துசாமி :நாடகத்திற்குப் போன எழுத்துக்காரர். மிகக் குறைந்த அளவே எழுதியிருக்கும் போதிலும் தமிழ் நவீன இலக்கியத்தில், குறிப்பாக சிறுகதையில் ந. முத்துசாமியின் இடம், மௌனியைப் போல், தவிர்க்க இயலாதது. ஒரு வகையில் ந. முத்துசாமியை மௌனியின் பள்ளியைச் சேர்ந்தவர் என்றும் சொல்லலாம். முத்துசாமியின் முதல் சிறுகதை சி.சு. செல்லப்பாவின் `எழுத்து’ வில் வெளிவந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை கொண்ட `நீர்மை’ சிறுகதைத் தொகுப்பை 1984ஆம் ஆண்டு க்ரியா பதிப்பகம் கொண்டு வந்தது. ஆனால் அப்பொழுதே முத்துசாமியின் … Continue reading