>மீனுக்குள் கடல் – பாதசாரி

>   பாதசாரி கவிதைகள் ஈக்குஞ்சு ஈக்குஞ்சு ஒன்று கண்டேன் ஆஹா… என்னுயிரைப் பகலில் கலகலப்பாக்கியதொரு ஈக்குஞ்சு தான் எவ்வளவு அற்புதம்… இரவுகளில்கூட பெரிய ஈக்கள் மேலும் வாஞ்சை வந்து விடுகிறது ‘குற்றமும் தண்டனையும்’ நாவலுக்குள வந்து கண் மறைக்கையில் வெளியில் எடுத்துவிடுவேன் பெரிய ஈயை – முன்னொரு நாள் என் மூக்கின் மேல் சிந்தின திருநீறை என்னவள் துடைத்த மென்மையாக. பகல் ஒரு குல்கந்து வியாபாரி இரவே எனக்கு ரோஜாத்தோட்டம். ஒரு சொம்பு சிறுவாணித் தண்ணீர் … Continue reading

காசி-பாதசாரி

பாதசாரி 1 போன வருஷம் இதே மாதத்தில் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து -விட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம், சவர பிளேடால் கழுத்தை ஆழ அறுத்துக் கொண்டான்.உறைந்த ரத்தப் படுக்கைமீது நினைவிழந்து கிடந்தவனை கதவை உடைத்துப் புகுந்து எடுத்து ஜி.எச்.சில் அட்மிட் செய்தார்கள். ஊரில் நான்கு பேர் ‘மறைலூஸ்’ என்று கருதும் காசியைப் பற்றி எனக்கு அப்படி நினைக்க முடியவில்லை. எல்லோரையும் போல, தனக்கும் இந்த நாக்கு பேருக்கும் இடையிலான ‘ஷாக்’ அப்ஸார்பரை’ பழுது பார்த்து … Continue reading