>நிழலும் நிஐமும் – பாமா

> வருடத்திற்கு இரண்டு முறைதான் நாங்கள் புதிதாக துணி எடுத்துத் தைப்போம். ஒன்று கிறிஸ்து பிறப்புத் திருவிழாவுக்கு. இன்னொன்று எங்கள் ஊர் மாதா திருவிழாவுக்கு. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்கு மதுரைக்குச் சென்று துணிமணி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.  பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு நானும், என் மனைவியும் பத்து மணிக்கு வரும் வாய்தா வண்டியில் மதுரைக்குப் புறப்பட்டோம். அந்தப் பேருந்தில்தான் மதுரைக் கோர்ட்டுக்கு வாய்தாவுக்குச் செல்பவர்கள் வழக்கமாகச் செல்வார்கள். அதனாலேயே அந்தப் பேருந்துக்;கு வாய்தா வணடி … Continue reading

>அண்ணாச்சி – பாமா

>   ரொம்பாக் கிசும்புக்காரனா இருப்பாம் பொறுக்கோ இந்தப்பெய. அவுகய்யனும் அம்மையும் அப்பிராணிக கெணக்கா இருக்கைல அவுகளுக்குப் பெறந்த இந்தக் கழுத இப்பிடித் தறுதலையா வந்து வாச்சிருக்கே, ‘ கோவமும் சலிப்புமாச் சொல்லிக்கிட்டு இருந்த மாடத்தியத் தடுத்துட்டு முத்து ரத்துனம் மேல சொன்னா. ‘அதானடி… அந்த வீட்டுப் பிள்ளைக பூராம் இப்பிடித்தான் இருக்குதுக மித்ததுகளையாவது ஒரு வழில சேத்துரலாம். ஆனா இவெ இருக்கானே.. அதான் இந்த அம்மாசிப் பெய, இவன எட்டுலயுஞ் சேக்க முடியாது. எழவுலயுஞ் சேக்க … Continue reading

>தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்-பாமா

>    கேணி சந்திப்பு : மே 9 ஞாயிறு மாலை 3.30 மணி பேச்சாளர் : பாமா விவரங்களுக்கு இங்கே  செல்லவும். வாய்ப்பிருப்பவர்கள்  தவற விடவேண்டாம் தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம் நீங்கள் நிறைய கெட்ட வார்த்தைகளை (வசவு) எழுதுறதா விமர்சன வட்டாரத்திலே ஒரு முணுமுணுப்பு இருக்கே…? பாமா படிச்ச பொண்ணுதானே நிறைய கெட்ட வார்த்தைகளை எழுதியிருக்கேன்னு சொல்றாங்க. தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் தான் ஆயதம் எங்களாலே கத்தி வச்சுகிட்டு சண்டை போடமுடியாது. … Continue reading

>சிதறல்கள்-பாமா

>   மரத்தூர்  சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒவ்வொரு நாள் மாலையிலும் வாத்தியக்குழுவினர் முழுவீச்சில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.  காட்டுப்பட்டி பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அவர்களது குழுவினரை அழைத்திருந்தார்கள். அதனால் கடந்த ஒரு வாரமாக சிறுவர்கள் மாலை நேரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.கீரனூருக்கும் கொளத்தூருக்கும் இடையில் பிரதான சாலையில் மாத்தூர் அமைந்திருந்தது. கீரனூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் செயலில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்ட சிறுவர்கள், அந்தப் பள்ளியில் இருந்தார்கள். சந்திரனும் அவர்களில் ஒருவன். எடையபட்டிதான் அவனது சொந்த ஊர். சீர்திருத்த பள்ளிக்கு … Continue reading

>விட்டு விடுதலையாகி… – பாமா

>   “குப்பெ வந்துட்டான். குப்பெ வந்துட்டான்"னு எல்லாரும் ரொம்ப அருவசமாச் சொன்னாங்க. குப்பெயப் பாக்குரதுக்கும் ரொம்ப அருவசமாத்தான் இருந்துச்சு. அவனுக்கென்ன பேரா இல்ல? எல்லாப் பெயமக்களும் குப்பெ வந்துட்டான் குப்பெ வந்துட்டான்"னு  சொல்லிக்கிட்டுத் திரியிறாளுகன்னு அவுகம்மெ தெருவுல கத்திக்கிட்டுத் திருஞ்சா.“அவம்பேரு யாருக்குத் தெரியும்? என்னைக்காவது பேருச் சொல்லிக் கூப்புட்டுருந்தா நமக்குத் தெரியும். அவனோட அம்மையும் அய்யனுமே அவன ஒரு நாளும் பேருச் சொல்லிக் கூப்புட்டு யாரும் கேட்டதில்ல. இப்ப என்னமோ புதுசாப் பேரு சொல்லிக் கூப்புடச் … Continue reading

>வலி – பாமா

>   கண்ணாங்குடில அன்னைக்கு ஒரு துடியாகிப் போச்சு. ஒத்தச் சனம் வேல வெட்டிக்குப் போகல. ஒரு கெழடு கெட்ட போயிருந்தாலே ஊச்சனம் பூராம் ஒன்னாக் கெடந்து ஒப்பாரி வைக்கும். இப்பச் செத்துருக்கது, கொஞ்ச வயசுப் பிள்ள. அதப் பத்திப் பேசாத ஆளு இல்ல. செத்துப் போன பூரணிக்கு மிஞ்சி மிஞ்சிப் போனா முப்பது வயசுக்குள்ளாதான் இருக்கும். கலியாணம் முடுச்சு ஒரு ஏழெட்டு வருசம் ஆகிப்போச்சு. பிள்ளையே இல்ல. அவளும் என்னென்னமோ வைத்தியமெல்லாம் செஞ்சு பாத்தா. ஒன்னும் … Continue reading

>முள்வேலி-பாமா

> பாமா மலையப்பனுக்கு திடீர்னு நடக்க முடியல. பஸ்டாண்டுக்கு டீ குடிக்க நடந்து போனவன சைக்கிள்ல உக்கார வச்சுத் தள்ளிக்கிட்டு வந்தாக. அவனப் பாத்து எல்லாருமே பரிதாபப்பட்டாக, ஆனா எனக்கென்னமோ அவம்மேல பரிதாபமே வரல்ல.  வழக்கம்போல குடுச்சுப் போட்டுத்தான் தெருவுல கெடந்தவன தூக்கியாராங்கன்னு நெனச்சேன். அதுனால நானு யாருகிட்டயும் அவனப் பத்தி விசாரிச்சுக்கல. அவனத் தூக்கியாரும்போது சாயங்காலம் ஆறு மணி இருக்கும். ஏழு மணி போல நானு மாடிக்குப் போயி காலார நடந்துக்குட்டு இருக்கைல கெழக்க காவாப்பக்கம் … Continue reading

>அழிப்பு – பாமா

> பாமா விடுஞ்சா கன்னியம்மாளுக்குக் கலியாணம். கன்னியம்மாளோட குடுசைல கலியாணத்துக்கான எந்த அடையாளமும் இல்ல. அவளும், அவுகம்மெ குருவம்மாளும் வழக்கம்போல குடுசைக்கு முன்னால குத்த வச்சுக்கிட்டு இருந்தாக. அக்கம்பக்கத்துல இருந்தவுங்க வந்து அங்ன ஒக்காந்து பேசிக்கிட்டு இருந்தாக. அவுக கேக்குறதுக்கெல்லாம் குருவம்மதான் வாதொறந்து பதுலு சொல்லிக்கிட்டு இருந்தா. கன்னியம்மா எப்பயும் போல அப்ராணியா ஒக்காந்திருந்தா. அவளுக்கு இப்ப இருவது  ஆகுது. அவா சமஞ்சு இப்ப நாலு வருசம் ஆச்சு. இந்த நாலு வருசமா குருவம்மா பொலம்பிக்கிட்டேதான் கெடந்தா. … Continue reading

>தவுட்டுக் குருவி – பாமா

>   "அம்மா, அம்மா இங்க ஓடியாயேன், இந்தக் குருவியோட கூட்டுல, இப்ப வேற ஒரு பெரிய குருவி வந்து உக்காந்துருக்கும்மா. சீக்கிரமா வந்து பாரேன்" என் மகள் காளீஸ்வரி என்னை அவசரமாக அழைத்தாள். "அதெப்படிடி தேன்சிட்டு கட்டுன கூட்டுல போயி இன்னொரு குருவி உக்காரும்? அந்தக் கெளைல உக்காந்துருக்கும். பெறகு போயிரும்" முருங்கைக்கீரை உருவிக் கொண்டிருந்த நான் சொல்லிவிட்டு தொடர்ந்து கீரை உருவிக்கொண்டிருந்தேன். "இல்லம்மா. ஒரு பெரிய குருவி கூட்டுக்குள்ளயே உக்காந்திருக்கும்மா. நீயி வந்து பாரேன். … Continue reading

>”எழுத்து – எதிர்புணர்வுக்கான ஆயுதம்” – பாமா

> பாமா (பிறப்பு – 1958), தலித் இலக்கியம் படைக்கும் குறிப்பிடத்தக்க முன்னணி எழுத்தாளர் ஆவார். இவர் 1992 இல் எழுதிய தன்வரலாற்றுக் கூறுகளுடன் எழுதிய கருக்கு என்னும் புதினம் புகழ் பெற்றது. அதில் இவர் தலித் மக்கள் மொழியைப் பயன்படுத்தி எழுதியது புதிய பாதை வகுத்தது என கருதப்படுகின்றது. கன்னியாஸ்திரியாகிப் பின்னர் அப்பொறுப்பிலிருந்து விலகி ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவரது கருக்கு புதினத்தை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவரது நூல்கள் கருக்கு (நாவல்) (1992) சங்கதி … Continue reading