எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு. – பாரதி மணி

க.நா.சு.100 ஐம்பதுகளில் நான் கல்கண்டு, கண்ணன், ஜில்ஜில், அணில் போன்ற சிறுவர் பத்திரிகைகள் படித்துக் கொண்டிருந்த போது, எங்களூர் பார்வதிபுரத்தில் நடராஜன் என்ற அறிவுஜீவி — ஹிந்தியில் Ghar Jamai என்று அறியப்படும், பணக்கார மாமனாருக்கு ‘வாழ்க்கைப்பட்ட’ வீட்டோடு மாப்பிள்ளையாக — இருந்தார். ஊரே அவரை ‘மாப்பிள்ளை’யென்று தான் கூப்பிடும். எங்களுக்கு அவர் ‘மாப்ளை மாமா’.  மிகவும் சுவாரசியமாக, எதைப்பற்றியும் பேசத்தெரிந்தவர். அவருக்கு தேவையெல்லாம் லீவுநாட்களில் எங்களைப்போன்ற பதின்மவயது ‘ஆடியன்ஸ்’ தான். மணிக்கணக்கில் வாயைப்பிளந்து கேட்டுக்கொண்டிருப்போம். பலநாட்கள் … Continue reading

இ.பா……. எண்பது!-பாரதி மணி

என் ஐம்பதுவருட நண்பர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு எண்பது வயதாகிறது. சென்ற ஜூலை மாதம் 9-ம் தேதி உயிர்மை பதிப்பகமும் மணற்கேணியும் இணைந்து நடத்திய கருத்தரங்கிலும், அடுத்தநாள் TAG Centre-ல் இ.பா. குடும்பத்தினர் சேர்ந்து கொண்டாடிய விழாவிலும், தன் நீண்ட, பயனுள்ள வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், இளமைத்துடிப்புடனும் தன் நியதிப்படி வாழ்ந்த ஒரு நல்ல மனிதரைப்பார்க்க முடிந்தது. இ.பா. நண்பர்களிடம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பழகுவார். அவருக்கு யாரும் விரோதிகளில்லை. ‘இலக்கிய அரசியல்’ இல்லாதவர். எதற்கும் விட்டுக்கொடுக்காதவர். தமிழக … Continue reading

தில்லியில் நிகம்போத் காட் [சுடுகாடு]-பாரதி மணி

இன்று CNN-IBN-ல் ஒரு செய்திமடல் பார்த்தேன். தில்லியில் ‘லாவாரிஸ் பாபா’ [லாவாரிஸ் = அநாதை] என்ற ஒரு முஸ்லீம் பெரியவரைப்பற்றியது. இவர் தனது சைக்கிள் ரிக்ஷாவுடன், தில்லி  வில்லிங்டன் [ஜெயப்பிரகாஷ்  நாராயண்] மருத்துவமனை வெளியே காத்திருப்பாராம்.  எல்லா பெரிய மருத்துவமனைகளிலும், உற்றார் உறவினரில்லாத அநாதைப்பிணங்களை, கண்பார்வையற்ற தன் மனைவியின் உதவியோடு, அவரவர் மதச்சம்பிரதாயப்படி, அடக்கம் செய்வாராம். தில்லிக்காவல்துறை இவருக்கு தலா ரூ.200அளிக்கிறதாம். பூவிழுந்த கண்களுடன், ‘நான் எல்லா மனிதர்களையும் நேசிக்கிறேன். என்னிடம் வரும் பிணங்கள் அநாதைகளல்ல. அவர்களுக்கு … Continue reading